ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-9
بسم الله الرحمن الرحيم ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-09 (25.07.2018) தமிழில் அஷ்ஷெய்க் மெளலவி N.P.ஜுனைத் காஸிமி,மதனி. 01)இறுதி முடிவு இனிதாய் அமைய இறைவனிடம் இறைஞ்சுவோம்!! இமாம் இஸ்மாஈல் அந்நைசாபூbரீ (ரஹ்) அவர்கள் மரணத்தறுவாயில் இருந்தார்கள். அப்போது அவரிடம் அவரது தாய், “எதைப் பெற்றுக்கொள்கிறாய் மகனே?” என்று கேட்டார்கள். ஆனால், அவரால் பேச முடியவில்லை. உடனே அவர் தனது தாயின் கையில், (அல்குர்ஆனின் 56-ம் அத்தியாயம், 89-வது வசனத்தில் வருகின்ற) «فروح وريحان وجنة نعيم» “அவருக்கு நலமும், மணமும், அருள் நிறைந்த சுவர்க்கமும் உண்டு” என்பதை எழுதிவிட்டு பின்னர் மரணத்துவிட்டாா். { நூல்: 'சியரு அஃலாமின் நுபbலா', 20:161 } [ إحتضر إسماعيل النيسابوري , فقالت أمه: *"ما تجد؟"*، فما قدر على النطق، فكتب على يدها: *« فروح وريحان وجنة نعيم »*، ثم مات] { سير أعلام النبلاء ، ٢٠/ ١٦١ } 02)ஏகத்துவமும், இஸ்லாமியக் கொள்கையும் சரியாக இருந்தால்தான் வெற்றி! ...