Posts

Showing posts from September, 2018

இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்[தொடர் 4]

Image
بسم الله الرحمن الرحيم இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்[தொடர் 4] பெயர்கள் வரக்காரணம்: இந்தப் பிரிவுகளுக்கான பெயர்கள் அந்த சிந்தனையை முதல் முதலில் பிரதிபலித்தவர், அல்லது அவரது கருத்தைப்பிரதி பலித்த பிரபல்யமிக்க மாணவர், அல்லது அந்தக்கருத்தின் அடிப்படையில் பெயர்கள் சூடப்பட்டிருக்கின்றன என்பதை அறிந்து கொள்ளவேண்டும். உதாரணமாக கத்ரிய்யா என்ற பிரிவனர் ‘விதி’ கத்ரை மறுத்ததனால் வந்ததாகும். அந்த சிந்தனையை முதன் முதல் முதலில் கைலான் அத்திமஷ்கி என்பவனே முன்வைத்தவன். அவனது பெயரில் அந்தப் பிரிவின் பெயர் இடம் பெறவில்லை. அவ்வாறே, இமாமிய்யாவிப் பிரிவான ஷீஆக்களை எடுத்துக் கொண்டால் நபி (ஸல்) அவர்களின் மரணத்தின் பின்னால் அலி (ரழி) அவர்களே ஆட்சிக்குத் தகுதியானவர் என்ற கருத்தை முன்வைக்கின்ற காரணத்தால் ‘இமாமிய்யா’ என்ற பெயரில் அழைக்கப்படுகின்றனர். ஹவாரிஜ்களின் பெயருக்கான காரணமும் அதே போன்றுதான். இவ்வாறு ஒவ்வொரு பிரிவும் ஒரு காரணப் பெயர் அல்லது அதை தோற்றுவித்தவரின் பெயரில் அழைக்கப்படும். இதன் விளக்கம் பற்றி அதன் தொடர்களில் காண்க. நேர்வழியைப் பின்பற்றுவதன் அவசியம்: மனிதன் சிந்தனையுடையவனாக...

இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்[தொடர் 3]

Image
بسم الله الرحمن الرحيم  இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்[தொடர் 3] முக்கிய பிரிவுகளின் பெயர்கள் பொய் நபித்துவத்தை வாதிட்ட (முஸைலமாக்கள்) தற்போதைய காதியானிகள், ஹவாரிஜ், முர்ஜிய்யா, கத்ரிய்யா, ஷீஆ (ராபிழா), முஃதஸிலா, ஜஹ்மிய்யா, அஷாயிரா (அஷ்அரிய்யா), மாத்ரூதிய்யா, கர்ராமிய்யா, முஷப்பிஹா, முஅத்திலா, புகைரிய்யா, ளராவிய்யா, ஹர்பிய்யா, அத்திஜானிய்யா,அல்குர்ஆனுக்கும், நபிமொழிகளுக்கும் உள், மற்றும் வெளி அர்த்தங்கள் உண்டு என வாதிடும் பாதினிய்யா. இவற்றில் ஜஹ்மிய்யா, கத்ரிய்யா, ஹவாரிஜ், முஃதஸிலா ஆகிய பிரிவுகள் இவை அனைத்துக்கும் தலையான பிரிவுகள் என இமாம் இப்னு (ரஹ்) அவர்களால் வர்ணிக்கட்டுள்ளது. பாதினிய்யாக்கள் ஷீஆக்களில் இருந்து பிரிந்த ஒரு பிரிவாகும். இஸ்லாமிய அடிப்படைக்கு மாற்றமான பல சித்தாந்தங்களை தோற்றுவிக்க அது வழிகோலியது. இமாமத்தைப் பிரதிபலித்தே இவர்களின் செயற்பாடுகள் அமைந்தன. இவர்கள் இஸ்மாயீலிய்யா, கராமித்தா, இஹ்வானுஸ்ஸபா, ஹஷ்ஷாஷுன், சுலைஹிய்யூன், பாதிமிய்யா, அல்லது பாதிமிய்யூன், நுஸைரிய்யா, துரூஸ் போன்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றனர்.இஸ்லாமிய உலகில் தமெக்கென உறுப்பி...