ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-11
بسم الله الرحمن الرحيم ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-11 (31.10.2018) தமிழில் அஷ்ஷெய்க் மெளலவி N.P.ஜுனைத் காஸிமி,மதனி. 1)துஆ சிறியதுதான்! ஆனால், அதன் உள்ளடக்கமோ மிகப்பெரியதும் பெறுமதியானதுமாகும்!! « ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار (البقرة: الآية- ٢٠١ ) "எங்கள் இரட்சகனே! எங்களுக்கு இவ்வுலகில் நல்லதையும், மறுமையில் நல்லதையும் தந்தருள்வாயாக! மேலும், நரக வேதனையை விட்டும் எம்மை நீ பாதுகாப்பாயாக! (அல்குர்ஆன், 02: 201) என்ற இந்த துஆவை ரசூல் (ஸல்) அவர்கள் ஏன் அதிகமாக ஓதி வருபவர்களாக இருந்தார்கள்? என்பதை அல்லாமா நாஸிர் அஸ்ஸஃதீ (ரஹ்) அவர்கள் கீழ்வருமாறு விளக்கப்படுத்துகிறார்கள்: 🔹நபியவர்கள் கேட்ட துஆவில் வந்திருக்கக்கூடிய உலக நலவு என்பது: “பயனுள்ள கல்வி, நற்செயல், உடல்- உள நிம்மதி, உணவு, குடிபானம், உடை, உறையுள், திருமணம் போன்ற எல்லா நலவுகளையும் உள்ளடக்கியிருக்கக்கூடிய ஓர் பிரயோகமாகும்!”. அதாவது: “நிலைமைகள் சீரும் சிறப்புமாக இருத்தல், குறை அனைத்திலிருந்தும்...