ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-11
بسم الله الرحمن الرحيم
ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-11(31.10.2018)
தமிழில் அஷ்ஷெய்க் மெளலவி N.P.ஜுனைத் காஸிமி,மதனி.
1)துஆ சிறியதுதான்! ஆனால், அதன் உள்ளடக்கமோ மிகப்பெரியதும் பெறுமதியானதுமாகும்!!
« ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار (البقرة: الآية- ٢٠١ )
"எங்கள் இரட்சகனே! எங்களுக்கு இவ்வுலகில் நல்லதையும், மறுமையில் நல்லதையும் தந்தருள்வாயாக! மேலும், நரக வேதனையை விட்டும் எம்மை நீ பாதுகாப்பாயாக!
(அல்குர்ஆன், 02: 201) என்ற இந்த துஆவை ரசூல் (ஸல்) அவர்கள் ஏன் அதிகமாக ஓதி வருபவர்களாக இருந்தார்கள்? என்பதை அல்லாமா நாஸிர் அஸ்ஸஃதீ (ரஹ்) அவர்கள் கீழ்வருமாறு விளக்கப்படுத்துகிறார்கள்:
🔹நபியவர்கள் கேட்ட துஆவில் வந்திருக்கக்கூடிய உலக நலவு என்பது: “பயனுள்ள கல்வி, நற்செயல், உடல்- உள நிம்மதி, உணவு, குடிபானம், உடை, உறையுள், திருமணம் போன்ற எல்லா நலவுகளையும் உள்ளடக்கியிருக்கக்கூடிய ஓர் பிரயோகமாகும்!”. அதாவது: “நிலைமைகள் சீரும் சிறப்புமாக இருத்தல், குறை அனைத்திலிருந்தும் ஈடேற்றம் பெற்றிருத்தல் என்பவற்றை உள்ளடக்கியிருக்கக்கூடியதோர் வார்த்தைப் பிரயோகமாகும்!”.
🔹 நபியவர்கள் கேட்ட துஆவில் வந்திருக்கக்கூடிய மறுமை நலவு என்பது: “அல்லாஹ் தனது நேசர்களுக்காகத் தனது கண்ணியமான சுவர்க்க வீட்டில் தயார் செய்து வைத்திருக்கக்கூடிய எந்தக் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த உள்ளமும் கற்பனைகூடச் செய்து பார்த்திராத அனைத்து வகையான இன்பங்களையும் குறிக்கும்!”.
உலகம் மற்றும் மறுமை நலவின் பூரணத்துவமே நரக வேதனையிலிருந்து பாதுகாப்புப் பெறுவதும், நரகத்திற்கு இட்டுச் செல்லும் பாவங்கள் மற்றும் தவறுகளிலிருந்து பாதுகாப்புப் பெறுவதும்தான்! எனவேதான், “ நரக வேதனையை விட்டும் எம்மை நீ பாதுகாப்பாயாக!” என அந்த துஆவில் அவர்கள் அல்லாஹ்விடம் கேட்கிறார்கள்.
ஆதலால் இந்த துஆ, அனைத்து வகையான நன்மைகளையும், புகழுக்குரிய வேண்டுதல்களையும் உள்ளடக்கியிருப்பதோடு எல்லா வகையான தீங்கையும் வேதனையையும் தடுக்கக்கூடியதாகவும் இருக்கின்றது! இதன் காரணமாகத்தான் இந்த துஆவை நபி (ஸல்) அவர்கள் அதிகமாக ஓதக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்!.
{ நூல்: 'அல்மவாஹிபுbர் ரப்bபானிய்யா' லிஸ்ஸஃதீ, பக்கம்: 56 }
قال العلّامة عبدالرحمن بن ناصر السعدي رحمه الله تعالى:-
لماذا كان يدعو النبي صلى الله عليه وسلم بهذا الدعاء كثيرا؟ *« ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار »*
*حسنة الدنيا:* "إسم جامع للعلم النافع والعمل الصالح، وراحة القلب والجسم، والرزق الحلال الطيب - من كل مأكل ومشرب وملبس ومنكح ومسكن ونحوها - ، فهي إسم جامع لحسن الأحوال، وسلامتها من كل نقص".
*وأما حسنة الآخرة:* "فهي كل ما أعدّه الله لأوليائه في دار كرامته مما لا عين رأت، ولا أذن سمعت، ولا خطر على قلب بشر".
ولما كانت حسنة الدنيا والآخرة تمامها وكمالها الحفظ من عذاب النار، والحفظ من أسبابه - وهو الذنوب والمعاصي - قالوا: *« وقنا عذاب النار »*.
فاشتمل هذا الدعاء على كل خير ومطلوب محمود، ودفع كل شر وعذاب. ولهذا كان النبي صلى الله عليه وسلم يدعو بهذا الدعاء كثيرا .
{ المواهب الربانية للسعدي، ص - ٥٦ }
2)உள்ளத்தை, பொறாமையிலிருந்து சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள்!
அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:-
“அடுத்தவருக்கு அல்லாஹ் கொடுத்திருக்கும் அருட்கொடை அவரை விட்டும் நீங்கிப்போய் விட வேண்டும் என ஒருவர் விரும்புவதுதான் பொறாமை!” என்பதாக பொறாமைக்கான வரைவிலக்கணம் சொல்லப்பட்டிருப்பது அறிஞர்களிடம் பிரபல்யமானதாகும்.
எனினும், “அடுத்தவருக்கு அல்லாஹ் கொடுத்திருக்கும் அருட்கொடையை ஒருவர் வெறுப்பதுதான் பொறாமைக்குரிய நுட்பமான கருத்தாகும். அவரை விட்டும் அவ்வருட்கொடை இல்லாமல் போக வேண்டும் என்பதை பொறாமைப்படும் அவர் விரும்பினாலும் சரி; விரும்பாவிட்டாலும் சரியே!”.
மனிதர்களில் அதிகமானோரிடம் (இப்போது) இருந்துகொண்டிருப்பது இந்த வகை பொறாமைதான். இது, யூதர்களின் பண்புகளில் உள்ளதாகும்; அல்லாஹ்வின் சாபத்திற்குள்ளான இப்லீசின் பண்புகளில் ஒன்றாகவும் இது இருக்கிறது. அல்லாஹ் கூறுகிறான்: “வேதத்தையுடையோரில் அதிகமானோர் சத்தியம் தங்களுக்குத் தெளிவான பின்னரும் தங்கள் மனதிலுள்ள பொறாமை காரணமாக, நீங்கள் நம்பிக்கை கொண்ட பின்னரும் உங்களை நிராகரிப்பாளர்களாக மாற்ற வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர்”.
(அல்குர்ஆன், 02:109)
ஆதலால், உனது உள்ளத்தில் முஸ்லிம்கள் மீது - அவர்கள் அமைப்புக்களாக இருந்தாலோ, அல்லது தனிநபர்களாக இருந்தாலோ - பொறாமை இருப்பதாக நீ கண்டு கொண்டால் யூதர்களின் பண்புகளில் ஒன்று உனது உள்ளத்தில் இருக்கிறது என்று நீ புரிந்து கொள்! அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! எனவே, பொறாமையிலிருந்து உனது உள்ளத்தை நீ சுத்தப்படுத்திக்கொள்!
நீயல்லாத மற்றவரிடம் இருக்கக்கூடிய இந்த நலவு, அல்லாஹ்விடமிருந்து அவருக்குக் கிடைத்துள்ள பேரருள் என்று நீ புரிந்து கொள்வதோடு அல்லாஹ்வின் அருளில் நீ ஆட்சேபனை தெரிவித்து விடாதே! அல்லாஹ்வின் ஏற்படாகிய கத்ரையும் நீ வெறுத்து விடாதே!. அல்லாஹ் கூறுகிறான்: “அல்லாஹ் தனது அருளிலிருந்து அவர்களுக்கு வழங்கியதற்காக இம்மனிதர்கள் மீது அவர்கள் பொறாமை கொள்கின்றனரா?”
(அல்குர்ஆன், 04:54)
{ நூல்: 'மஜ்மூஉல் பfதாவா வர்ரசாயில்', 05/238 }
قال العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-
*فالحسد:* "وهو كراهية نعمة الله على الآخرين وإن لم يتمنّ زوالها!". وقد اشتهر بين العلماء تعريف الحسد: *"بأنه تمنّي زوال نعمة الله على الغير"*.
ولكن المعنى الدقيق للحسد: *"هو كراهية نعمة الله على غيره، سواء تمنّى زوالها أو لم يتمنّ!"*.
وهذا الحسد موجود في كثير من الناس؛ وهو من خصال اليهود، كما هو من خصال إبليس لعنه الله، فقال تعالى: *« ودّ كثير من أهل الكتاب لو يردّونكم من بعد إيمانكم كفارا حسدا من عند انفسهم »*
فإذا وجدت في قلبك حسدا على المسلمين - جماعات أو أفرادا ؛ فاعلم أن في قلبك خصلة من خصال اليهود. والعياذ بالله! فطهّر قلبك من هذا الحسد.
واعلم أن هذا الخير الذي فيه غيرك إنما هو فضل من الله، فلا تعترض على فضل الله، ولا تكره تقدير الله. قال الله تعالى: *« أم يحسدون الناس على ما آتاهم الله من فضله »*
{ مجموع الفتاوى والرسائل، ٥/ ٢٣٨ }
3)அல்லாஹ்வின் அரவணைப்பும், பாதுகாப்பும் அவனுக்காக வாழ்பவருக்கு நிச்சயம் உண்டு!
அல்லாமா அப்துர்ரஹ்மான் பின் நாஸிர் அஸ்ஸஃதீ (ரஹ்) அவர்கள், அல்குர்ஆனின் 18-ஆம் அத்தியாயம், 10-ஆம் வசனமான “அந்த இளைஞர்கள் குகையில் தஞ்சம் அடைந்தபோது, 'எங்கள் இரட்சகனே! உன்னிடமிருந்து எமக்கு அருளை வழங்கி, எமது காரியத்தில் நேர்வழியை எமக்கு எளிதாக்கித் தருவாயாக!' எனப் பிரார்த்தித்தனர்” என்ற வசனத்திற்கு பின்வருமாறு விளக்கம் தருகின்றார்கள்:
“எவரொருவர் சோதனைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக தனது மார்க்கத்தோடு ஓடிச் செல்கிறாரோ, அவரை அச்சோதனைகளிலிருந்து அல்லாஹ் பாதுகாப்பான்; ஆரோக்கியத்திலும் விமோசனத்திலும் ஆர்வம் கொண்டவருக்கு ஆரோக்கியத்தையும் விமோசனத்தையும் அல்லாஹ் கொடுப்பான்; அல்லாஹ்வின் பக்கம் யார் ஒதுங்குகிறாரோ அவரை அல்லாஹ் அரவணைத்துக்கொள்வதோடு, அவரைப் பிறருக்கு நேர்வழியாகவும் ஆக்கி விடுவான்!.
எவரொருவர் அல்லாஹ்வின் பாதையில் ஏற்படுகின்ற இழிவைத் தாங்கிக் கொண்டு, அவனது திருப்திகளை நாடிச் செயல்படுகிறாரோ அவரின் கடைசி விடயமும், இறுதி முடிவும் அவர் அறியாத வண்ணம் மிகப்பெரும் கண்ணியத்தையுடையதாகவே இருக்கும்!” அல்லாஹ் கூறுகிறான்: “அல்லாஹ்விடம் இருப்பதே நல்லவர்களுக்கு மிகச் சிறந்ததாகும்!”
(அல்குர்ஆன், 03:198)
இது, குகைவாசிகள் சம்பவத்தில் (நாம் மேலே குறித்துக் காட்டிய விடயங்களுக்கு) இருக்கின்ற ஆதாரமாகும்.
{ நூல்: 'தய்சீருல் கரீமிர் ரஹ்மான்', பக்கம்: 424 }
قال العلامة عبدالرحمن بن ناصر السعدي رحمه الله تعالى في قول الله عزّ وجلّ: *« إذ أوى الفتية إلى الكهف فقالوا ربّنا آتنا من لّدنك رحمة وهيّئ لنا من أمرنا رشدا »*
*[ في هذه القصة دليل على أن من فرّ بدينه من الفتن سلمه الله منها، وأن من حرص على العافية عافاه الله، ومن أوى إلى الله آواه الله وجعله هداية لغيره!*.
*ومن تحمّل الذّلّ في سبيله وابتغاء مرضاته، كان آخر أمره وعاقبته العزّ العظيم من حيث لا يحتسب! « وما عند الله خير للأبرار » ]*
{ تيسير الكريم الرحمن في تفسير كلام المنان للسعدي، ص - ٤٢٤ }
4)உண்மையாகவே ஆதரவற்று, அநாதரவாக இருப்பவர் யார்?
இமாம் இப்னுத் துருக்மானீ அல்ஹனபீf (ரஹ்) கூறுகின்றார்கள்:
“குடும்பத்தையும் நாடுகளையும் பிரிந்திருத்தலோ, அல்லது ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குப் பயணம் செய்தலோ அநாதரவு கிடையாது. அல்குர்ஆன் மற்றும் சுன்னாவைக்கொண்டு செயல்பட்டு, இதற்காக உதவி செய்வோரைப் பெற்றுக்கொள்ளாமல் இருப்பவரே (உண்மையாகவே) ஆதரவற்று, அநாதரவாக இருப்பவர்!. இத்தகையவர், மனிதர்களிடம் வேண்டுமானால் அநாதரவானவராக இருந்துகொண்டிருப்பார்; ஆனால், அல்லாஹ்விடத்திலும் அவன் தூதரிடத்திலும் மிக நெருக்கத்திற்குரியவராக இவர் இருந்துகொண்டிருப்பார்!”
{ நூல்: 'அல்லுமஃ பிfல்ஹவாதிஸ் வல்பிbதஃ', பக்கம்:584 }
قال الإمام إبن التركماني الحنفي رحمه الله:-
*[ ليست الغربة مفارقة الأهل والأوطان، والسفر من مكان إلى مكان!*
*الغريب: هو العامل بالسنة والقرآن ولم يجد من يساعده على ذلك. فيصير بين الخلق غريبا، ومن الله ورسوله قريبا ! ]*
{ اللّمع في الحوادث والبدع، ص- ٥٨٤ }
“அநாதரவானவர்கள் மீது சுபசோபனம் உண்டாகட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, 'அநாதரவானவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே?!' என வினவப்பட்டது. அப்போது நபியவர்கள்: 'அதிகமாக இருக்கும் கெட்ட மனிதர்களிடத்தில் குறைவாக இருக்கும் நல்லவர்கள்; அவர்களில் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடப்போரை விட, அவனுக்கு மாறு செய்து நடப்போரே மிகக்கூடுதலாக இருப்பர்!” எனப் பதிலளித்தார்கள்.
{ நூல்: 'அஸ்ஸில்ஸிலதுஸ் ஸஹீஹா' லில்அல்பானீ, ஹதீஸ் இலக்கம் - 1619 }
قال رسول الله صلّى الله عليه وسلم: *[ طوبى للغرباء! قيل: ومن الغرباء يا رسول الله؟ قال: ناس صالحون قليل في ناس سوء كثير، من يعصيهم أكثر ممّن يطيعهم ]*
{ السلسلة الصحيحة - ١٦١٩ }
5)அநீதி ஆபத்தானது; அதை அஞ்சிக்கொள்ளுங்கள்!!
அல்லாஹ் கூறுகிறான்:
“(நபியே!) அநியாயக்காரர்கள் செய்வது குறித்து அல்லாஹ் அலட்சியமாக இருக்கின்றான் என்று நிச்சயமாக நீர் எண்ண வேண்டாம். பார்வைகள் பிதுங்கும் ஒரு நாளுக்காகவே அவன் அவர்களைப் பிற்படுத்துகின்றான்”.
(அல்குர்ஆன், 14:42)
“அநீதியிழைக்கப்பட்டவனுக்கு ஆறுதலை அளிப்பதாகவும், அநீதியிழைத்தவனுக்கு எச்சரிக்கையாகவும் இந்த வசனம் இருக்கிறது!” என இமாம் மைமூன் பின் மஹ்ரான் (ரஹ்) அவர்கள் இவ்வசனத்திற்கு விளக்கமளிக்கின்றார்கள்.
{ நூல்: 'தப்fஸீர் அத்தபbரீ', 13/703 }
قال الله تعالى: *[ ولا تحسبنّ الله غافلا عمّا يعمل الظّالمون ]* (إبراهيم : ٤٢)
قال الإمام ميمون بن مهران رحمه الله تعالى: *« هي تعزية للمظلوم، ووعيد للظالم »* { تفسير الطبري، ١٣/٧٠٣ }
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
“ஒருவன் தன் சகோதரருக்கு அவருடைய மானத்திலோ, (பணம், சொத்து போன்ற) வேறு விடயத்திலோ இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவன் அவரிடமிருந்து அதற்காக இன்றே மன்னிப்புப் பெறட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ, வெள்ளிக்காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் மன்னிப்புப் பெறட்டும். (ஏனெனில், மறுமை நாளில்) அவனிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியின் அளவுக்கு அவனிடமிருந்து எடுக்கப்பட்டு (அநீதியிழைக்கப்பட்டவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவனிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் (அநீதிக்குள்ளான) அவனின் தோழரின் தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவன் மீது சுமத்தப்பட்டு விடும்!”
{ புகாரி, ஹதீஸ் இலக்கம்- 2449 }
6)'அஸ்ஸலாமு அலைக்கும்' எனும் வார்த்தையில் பொதிந்துள்ள அர்த்தம் ஆழமானது!
அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:-
“உங்கள் மீது சாந்தி (மற்றும் பாதுகாப்பு) உண்டாவதாக!” என்ற அர்த்தத்தையுடைய السلام عليكم எனும் முகமன் வார்த்தையை நீ ஒருவருக்குக் கூறினால், “அனைத்து ஆபத்துக்களிலிருந்தும் அவரை அல்லாஹ் பாதுகாத்து அவருக்கு சாந்தியளிக்க வேண்டும் என அவருக்காக நீ பிரார்த்திக்கின்றாய் என்று அர்த்தமாகும்!”. அதாவது, “பைத்தியம் என்ற நோயிலிருந்து அல்லாஹ் அவரைப் பாதுகாக்க வேண்டும்; மக்களின் தீங்கிலிருந்து அவரை அவன் பாதுகாக்க வேண்டும்; பாவங்களிலிருந்தும், உள நோய்களிலிருந்தும் அவரை அவன் பாதுகாக்க வேண்டும்; நரகத்திலிருந்து அவரை அவன் பாதுகாக்க வேண்டும் என்பதும் அதன் அர்த்தமாகும்!”. இப்படி, ஆபத்துக்கள் அனைத்திலிருந்தும் பாதுகாக்கும்படி அந்த முஸ்லிமுக்காக பிரார்த்தனை செய்தல் என்ற பொதுவான அர்த்தத்தை உள்ளடக்கியிருப்பதுதான் இந்த «அஸ்ஸலாமு அலைக்கும்» எனும் முகமன் வார்த்தையாகும்!”.
{ நூல்: 'ஷர்ஹு ரியாழிஸ் ஸாலிஹீன்', 04/380 }
قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-
*[ فإذا قلت لشخص: "السلام عليك" فهذا يعني: أنك تدعو له بأن الله يسلمه من كل آفة؛ يسلمه من المرض من الجنون، يسلمه من شرّ الناس، يسلمه من المعاصي وأمراض القلوب، يسلمه من النار!. فهو لفظ عام معناه الدعاء للمسلم عليه بالسلامة من كل آفة ]*
{ شرح رياض الصالحين، ٤/٣٨٠ }
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “இஸ்லாத்தில் (பண்புகளில்) மிகவும் சிறந்தது எது?” என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், “(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் சலாம் (முகமன்) சொல்வதுமாகும்!” என்று பதிலளித்தார்கள்.
{ நூல்கள்: புகாரி - 6236, முஸ்லிம் - 63 }
7)'பூ' எனப் பொருள்படும் 'زهرة' என்ற வார்த்தையை, உலக இன்பத்திற்கு ஏன் அல்லாஹ் பயன்படுத்துகிறான்?
“(நபியே!) இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரமாக அவர்களில் பல தரப்பினருக்கு, அதில் அவர்களைச் சோதிப்பதற்காக நாம் வழங்கிய வசதிகளின்பால் உமது கண்கள் இரண்டையும் நீர் செலுத்தாதீர்!” (அல்குர்ஆன், 20:131) என்ற இந்த வசனத்திற்கு அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு விளக்கமளிக்கின்றார்கள்:
“உலகவாதிகளையும், அவர்களுக்கு வசதிகளாக அளிக்கப்பட்டுள்ள வாகனங்கள், ஆடைகள், வீடுகள் போன்ற இன்னோரன்ன இன்பங்களையும் நீங்கள் பார்க்காதீர்கள். இவையனைத்தும் உலகத்தின் அலங்காரங்களே!.
அலங்காரம் என்ற கருத்தில் மேற்படி வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடும் *زهرة* எனும் வார்த்தைக்கு 'பூ' என்றும் அரபு மொழியில் பொருள் சொல்லப்படும். வாடி வதங்கி, காய்ந்து, காணாமல் அழிந்து போகும் நிலையே (அலங்காரமாகக் காட்சி தரும்) பூவினுடைய இறுதி நிலையாகும். மரத்தின் இலைக்கூறுகளில் மிகக்கெதியாகவே வாடி வதங்கிக் காணாமல் அழிந்துபோய் விடக்கூடியது இந்தப் பூவுதான்!. செழிப்பு, கவர்ச்சி, அழகு, வாசமுடையதாக இருப்பின் வாசம் ஆகியவற்றில் இது அழகுமிக்க பூதான்!. இருந்தாலும், இது மிகச் சீக்கிரமாகவே வாடிவிடக்கூடியது. உலகமும்
இவ்வாறுதான்; மிகச் சீக்கிரமாகவே வாடிவிடக்கூடிய ஓர் பூவாகும்!
(நற்கூலியிலும், இன்பத்திலும்) எமக்கான பங்கை நிறைவாக ஆக்கித்தரும்படி அல்லாஹ்விடம் நாம் கேட்போம்.
{ நூல்: 'ஷர்ஹு ரியாழிஸ் ஸாலிஹீன்', 03/45 }
قال الله تعال: *{ولا تمدّنّ عينيك إلى ما متّعنا به أزواجا مّنهم زهرة الحياة الدنيا }* (سورة طه: الآية - ١٣١ )
قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-
*[ أي: لا تنظر إلى أهل الدنيا وما متّعوا به من النعيم، من المراكب والملابس والمساكن وغير ذلك..... فكل ذلك زهرة الدنيا.*
*والزهرة آخر مآلها الذبول واليبس والزوال، وهي أسرع أوراق الشجرة ذبولا وزوالا. وهي زهرة حسنة في رونقها وجمالها وريحها إن كانت ذات ريح. ولكنها سريعة الذبول، وهكذا الدنيا، زهرة تذبل سريعا!*
*نسأل الله أن يجعل لنا حظا ونصيبا في الآخرة! ]*
{ شرح رياض الصالحين، ٣/٤٥ }
8)உலக மோகத்தில் ஊறித் திளைத்தவனுக்கு உபதேசம் பயனளிக்காது!
இமாம் மாலிக் பின் தீனார் (ரஹ்) கூறுகின்றார்கள்:-
“உடல் நோயுற்று விட்டால் அதில் உணவோ, குடிபானமோ, தூக்கமோ, நிம்மதியோ எதுவித பயனையும் அளிக்காது!. இவ்வாறே, உள்ளத்தில் உலக மோகம் குடிகொண்டு விட்டால் அதில் உபதேசம் பயனளிக்காது!”
{ நூல்: 'ஹில்யதுல் அவ்லியா', 02/363 }
قال الإمام مالك بن دينار رحمه الله تعالى:-
*[ إن البدن إذا سقم لم ينجع فيه طعام ولا شراب ولا نوم ولا راحة! وكذلك القلب إذا علقه حبّ الدنيا لم تنجع فيه الموعظة! ]*
{ حلية الأولياء ، ٢/٣٦٣ }
உலக மோகத்தில் ஊறித்திளைத்திருந்த கோடீஸ்வரன் காரூனுக்கு, நன்மக்கள் செய்த உபதேசம் பயனளிக்காமல் போனதை அல்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது:
“நிச்சயமாக காரூன், மூசாவின் சமூகத்தைச் சார்ந்தவனாக இருந்தான். அவன் அவர்கள் மீது வரம்பு மீறினான். மேலும், நாம் அவனுக்குப் பல பொக்கிஷங்களை வழங்கியிருந்தோம். நிச்சயமாக அவற்றின் திறவுகோல்கள் பலமான ஒரு குழுவினருக்கும் (சுமப்பதற்குப்) பழுவாக இருந்தன. 'நீ ஆணவம் கொள்ளாதே! நிச்சயமாக அல்லாஹ் ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்' என்று அவனது சமூகம் அவனுக்குக் கூறியதை (நபியே நீர் எண்ணிப்பார்ப்பீராக!)
மேலும், 'அல்லாஹ் உனக்கு வழங்கியவற்றில் நீ மறுமை வீட்டைத் தேடிக்கொள்! இன்னும் இவ்வுலகில் உனது பங்கை நீ மறந்து விடவும் வேண்டாம். அல்லாஹ் உனக்கு உபகாரம் செய்தது போன்று நீயும் உபகாரம் செய்வாயாக! மேலும், நீ பூமியில் குழப்பத்தை நாடாதே! நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் விளைவிப்போரை நேசிக்கமாட்டான்' (என்றும் கூறினர்.)
அ(தற்க)வன், 'இது எனக்கு வழங்கப்பட்டதெல்லாம் என்னிடமுள்ள அறிவின் மூலமேயாகும்!' எனக் கூறினான்”.
(அல்குர்ஆன், 28: 76 -78)
9)பாவங்கள் மூலம் ஆன்மாவை அசிங்கப்படுத்தாமல், இறைவழிபாட்டின் மூலம் அதைத் தூய்மைப்படுத்துவோம்!
“ஆன்மாவின் மீதும், அதை ஒழுங்குற அமைத்தவன் மீதும் சத்தியமாக! பின்னர், அவன் அதற்கு அதன் தீமையையும் நன்மையையும் உணர்த்தினான்.
அதைத் தூய்மைப்படுத்தியவன் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டான். அதைக் களங்கப்படுத்தியவன் நிச்சயமாக நஷ்டமடைந்துவிட்டான்!”
(அல்குர்ஆன், 91: 07 - 10)
ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதல், அதைக் களங்கப்படுத்துதல் எப்படி? என்பது குறித்து அல்லாமா இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) அவர்கள் பின்வருமாறு விளக்கமளிக்கின்றார்கள்:-
“அல்லாஹ்வுடைய வழிபாட்டின் மூலம் அதைப் பெருமைப்படுத்தி, அதை மேலோங்க வைத்து, அதன் மகத்துவத்தை வெளிப்படுத்தி உயர்த்தியவனே நிச்சயமாக வெற்றி பெற்று விட்டான்! அல்லாஹ்வுக்கு மாறு செய்ததன் மூலம் அதன் மகத்துவத்தை மறைத்து, அதைக் கேவலப்படுத்தி, அதைச் சிறுமைப்படுத்தியவனே சத்தியமாக நஷ்டமடைந்துவிட்டான்!”
{ நூல்: 'அத்dதாஉ வத்dதவாஉ' , பக்கம்: 189 }
قال الله تعالى *:{ونفس وما سوّاها،فألهمها فجورها وتقواها، قد أفلح من زكّاها وقد خاب من دسّاها}* (سورة الشمس : ٧ - ١٠)
قال العلّامة إبن القيم الجوزية رحمه الله تعالى:-
*[ والمعنى: قد أفلح من كبّرها وأعلاها بطاعة الله وأظهره. وقد خسر من أخفاها وحقرها وصغرها بمعصية الله! ]*
{ الداء والدواء ، ص - ١٨٩ }
10)பாவமன்னிப்புத் தேடுவதை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்!
இமாம், அல்ஹாபிfழ் இப்னு ரஜப் அல்ஹன்பbலீ (ரஹ்) கூறுகின்றார்கள்:
“காலைப்பொழுதை அடைகின்ற போதும், மாலைப்பொழுதை அடைகின்ற போதும் பாவமன்னிப்பில் ஈடுபடவே வேண்டியது இறைவிசுவாசிக்கு அவசியமானதாகும். ஏனெனில், காலையிலா? அல்லது மாலையிலா? திடீரென்று அவருக்கு மரணம் வரும் என்று அவருக்குத் தெரியாது! எவரொருவர் பாவமன்னிப்பின்றி காலையை அல்லது மாலையை அடைகின்றாரோ அவர் அபாயத்திலேயே இருந்துகொண்டிருக்கிறார். பாவமன்னிப்புத் தேடாதவராக அல்லாஹ்வை அவர் சந்தித்து, அநியாயக்காரக் கூட்டத்தில் அவர் ஒன்று சேர்க்கப்படுவார் என்பதாக அவர் விடயத்தில் அஞ்சப்படும்.
அல்லாஹ் கூறுகிறான்: “எவர்கள் (இவற்றை விட்டும்) பாவமன்னிப்புத் தேடவில்லையோ அவர்கள்தாம் அநியாயக்காரர்கள்!”
(அல்குர்ஆன், 49:11)
{ நூல்: 'லதாஇபுfல் மஆரிப்f', பக்கம்: 344 }
قال الإمام الحافظ إبن رجب الحنبلي رحمه الله تعالى:
*[ المؤمن لا ينبغي أن يصبح ويمسي إلا على توبة، فإنه لا يدري متى يفاجئه الموت صباحا أو مساءا. فمن أصبح أو أمسى على غير توبة فهو على خطر! لأنه يخشى أن يلقى الله غير تائب، فيحشر في زمرة الظالمين. قال الله تعالى: « ومن لّم يتب فأولئك هم الظالمون »*
{ لطائف المعارف، ص - ٣٤٤ }
✍தமிழில்✍
அஷ்ஷெய்க் மெளலவிN.P.ஜுனைத் காஸிமி,மதனி
இன்ஷா அல்லாஹ் தொடரும்......✍
@Islaam For All Peoples
Like👍 And Follow Our Islaam For All Peoples Fb page:
https://www.facebook.com/islaam.community/
Subscribe Our Islaam For All Peoples YouTube channel:
https://www.youtube.com/channel/UC0Um0iqVeLLCZeHJGZM97zA
ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-10
https://islaamforallpeoples.blogspot.com/2018/08/1-b.html
Comments
Post a Comment