ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-3
بسم الله الرحمن الرحيم
ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-3 (31.03.2018)
தமிழில் அஷ்ஷெய்க் மெளலவி N.P.ஜுனைத் காஸிமி,மதனி.
1)சத்தியத்தில் நிலைத்திருக்கும் அறிஞர்களின் மானங்களில் விளையாடுபவர்கள் இவர்கள்தான்!!
சஊதி அரேபிய நாட்டு அறிஞர் அஷ்ஷெய்க் ஸாலிஹ் பின் பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:
“சத்தியத்தில் உறுதியாக நிலைத்திருக்கும் அறிஞர்களின் மானங்களில் விளையாடுவதில் கீழ்க்காணும் மூவரில் ஒருவரைத் தவிர வேறு யாருமே ஈடுபடமாட்டார்கள்.
1) நயவஞ்சகத்தனம் தெளிவாக அறியப்பட்ட ஓர் நயவஞ்சகன்.
2) அறிஞர்களுடன் பகைமை பாராட்டுகின்ற கெட்டவன். இவனை, கெட்ட செயல்களிலிருந்து அறிஞர்கள் தடுப்பதே இதற்கான காரணமாகும்.
3) அறிஞர்களோடு கோபித்துக்கொள்ளும் வழிகெட்ட ஓர் இயக்கவாதி; கட்சிக்காரன். ஏனெனில், மோசமான இவனது இயக்கக் கருத்துக்கும், பிழையான இவனது சிந்தனைகளுக்கும் அவ்வறிஞர்கள் உடன்பட்டுப்போகாமல் இருப்பார்கள்!”
{ நூல்: 'அல்அஜ்விபbதுல் முபீfதா அன் அஸ்இலதில் மனாஹிஜில் ஜதீதா', பக்கம்: 80 }
قال العلامة صالح بن فوزان الفوزان حفظه الله تعالى:
[ لايقع في أعراض العلماء المستقيمين على الحق إلا أحد ثلاثة:-
*الأول:* إما منافق معلوم النفاق.
*الثاني:* وإما فاسق يبغض العلماء، لأنهم يمنعونه من الفسق.
*الثالث:* وإما حزبي ضالّ، لأنهم لايوافقونه على حزبيته وأفكاره المنحرفة.
{ الأجوبة المفيدة عن أسئلة المناهج الجديدة، ص - ٨٠ }
2)வட்டித் தொழில் செய்தவர் வணக்கசாலியானார்!
வணக்கசாலி 'ஹபீப் பின் முஹம்மத் அல்அஜமீ (ரஹ்) அவர்கள், ஆரம்பத்தில் ஓர் வர்த்தகராக இருந்து வட்டிக்குப் பணத்தைக் கொடுப்பவர்களாகக் காணப்பட்டார்கள். ஒரு நாள், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களுக்குப் பக்கத்தில் அவர் நடந்து சென்றபோது “வட்டி உண்பவர் வந்திட்டாரு!” என்று அச்சிறுவர்களில் சிலர் இவரைப் பார்த்துக் கூறினர். இதைச் செவிமடுத்த ஹபீப் அவர்கள் வெட்கத்தால் தன் தலையைக் கீழே தொங்கப்போட்டுக்கொண்டு, “என் இரட்சகனே! என் ரகசியத்தை இச்சிறுவர்களுக்கே நீ தெரியப்படுத்தி விட்டாயா!? என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார்கள்.
பின்னர் அவர், கம்பளியினாலான நீண்ட ஆடையொன்றை அணிந்து தன் கையை அதற்குள் போட்டுக்கொண்டு தனக்கு முன்னால் தனது பணத்தையெல்லாம் கொண்டுவந்து வைத்து, “என் இரட்சகனே! இப்பணத்தின் மூலம் என்னை நான் உன்னிடமிருந்து வாங்கிக்கொள்கின்றேன். எனவே, என்னை நீ உரிமையிட்டு விடு!”எனச் சொல்லிக்கொண்டார்கள். காலையான போது அப்பணம் முழுவதையும் அவர்கள் தர்மம் செய்தும் விட்டார்கள். அதன் பின்னர் அவர் வணக்க வழிபாட்டில் ஈடுபட ஆரம்பித்து ஓர் நோன்பாளியாக, அல்லது இரவில் நின்று வணங்குபவராக, அல்லது அல்லாஹ்வை திக்ர் செய்பவராக, அல்லது தொழக்கூடிய ஒருவராகவே பார்க்கப்பட்டார். இப்படியிருக்க ஒரு நாள் ஹபீப் அவர்கள்,“வட்டி உண்பவர்!” என தன்னைப் பழித்த அதே சிறுவர்களுக்குப் பக்கத்தில் சென்றுகொண்டிருந்தார்!. அவரைப் பார்த்த அச்சிறுவர்களில் சிலர் மற்றவர்களிடம், “வணக்கசாலி ஹபீப் வந்துவிட்டார்; அமைதியாய் இருங்கள்!” என்று கூறினர். இதைக்கேட்ட
ஹபீப் பின் முஹம்மத் அல்அஜமீ (ரஹ்) அவர்கள் அழுதுவிட்டார்கள்.
{ நூல்: 'தஹ்தீபுbல் கமால்', 5/390 }
[ كان حبيب بن محمد العجمي رحمه الله تعالى رجلا تاجرا يعير الدراهم، فمرّ ذات يوم بصبيان يلعبون، فقال بعضهم: قد جاء آكل الربا ! فنكس رأسه، وقال: يا ربّ! أفشيت سرّي إلى الصبيان. فرجع فلبس مدرعة من شعر وغلّ يده، ووضع ماله بين يديه، وجعل يقول: يا ربّ! إني أشتري نفسي منك بهذا المال فأعتقني! فلما أصبح تصدق بالمال كله،وأخذ فى العبادة. فلم ير إلا صائما أو قائما أو ذاكرا أو مصليا. فمرّ ذات يوم بأولئك الصبيان الذين كانوا عيّروه بآكل الرّبا، فلما نظروا إليه قال بعضهم: *"أسكتوا فقد جاء حبيب العابد!"*، فبكى ].
{ تهذيب الكمال، ٥ / ٣٩٠ }
3)மறுமைக்கான பரீட்சையில் நீ தோல்வியடைந்துவிட்டாய் மகனே!!
பாடசாலையொன்றின் பெண் அதிபர் ஒருவர் தனது மகனை சுப்ஹுத் தொழுகைக்காக எழுப்பினாள். அவன் எழும்பவில்லை! தன் தொழுகையை முடித்ததன் பின்னர் வந்து அவனை எழுப்பினாள். அப்போதும் அவன் எழும்பவில்லை! பின்னர் அவள், தன் வழமையான வேலைகளில் ஈடுபடச் சென்று விட்டாள். அவனை அவனது பல்கலைக்கழகம் செல்வதற்கு அவள் எழுப்பவில்லை.
காலை 09:00 மணிக்கு அவனுக்கு பரீட்சையொன்று இருந்தது. 09:30 மணிக்கு விழித்தெழுந்த வேளையில் தன் தாயோடு தொடர்பு கொண்ட அவன், “என் தாயே! பரீட்சை எனக்குத் தவறிப்போய் விட்டது. ஏன் என்னை நீங்கள் எழுப்பி விடவில்லை?” எனக் கேட்டான். அதற்கு அவள், “அல்லாஹ் மீது ஆணையாக! மறுமைக்கான பரீட்சையில் நீ தோல்வியும் நஷ்டமும் அடைந்து விட்டதாகவே நான் கண்டேன். எனவேதான் உலகப் பரீட்சை குறித்து எனக்கு எந்தக் கவனமும் ஏற்படவில்லை!” எனப் பதிலளித்தார்கள்.
{ முகநூலில் اللحية والنقاب على حق எனும் பக்கத்தில்}
مديرة مدرسة أيقظت إبنها لصلاة الفجر ولم يستيقظ، ثم أيقظته بعد أن انتهت من صلاتها ولم يستيقظ. ثم ذهبت إلى دوامها ولم توقظه ليذهب إلى جامعته....
وكان لديه إختبار فى الساعة التاسعة صباحا، وعندما إستيقظ الساعة التاسعة ونصف اتصل بها وقال: "يا أمّي فاتني الإختبار لم لم توقظينني؟" قالت: "والله رأيتك فشلت في إختبار الآخرة فلم يهمّني إختبار الدنيا"
{ فيس بوك : اللحية والنقاب على حق }
4)இவ்வுலக வாழ்வின் முடிவு முடிவே அல்ல!
இஸ்லாமியப் பேரறிஞர் இமாம் முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:
“இவ்வுலகில் தனது நிலையையும், தனது இறுதி முடிவையும் ஞாபகப்படுத்திப் பார்ப்பது மனிதனுக்கு அவசியமாகும். இவ்வுலக வாழ்க்கையின் முடிவு என்பது முடிவே அல்ல. மாற்றமாக, இதற்குப் பின்னால் இதைவிட மிகப்பெரிய குறிக்கோள் ஒன்று இருக்கிறது. அதுதான் மறுமையாகும்!.
எனவே, மனிதன் எப்போதும் மரணத்தை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அன்புக்குரியவர்களுக்காக வேண்டியோ, மன விருப்பை ஏற்படுத்தும் வழமையான விடயங்களுக்காக வேண்டியோ பிரிவதாக அந்தப் பிரிவின் அடிப்படை இருக்கக் கூடாது. இப்படிப் பார்க்கும் பார்வை குறைபாடான பார்வையேயாகும். என்றாலும், மறுமைக்காக வேண்டிச் செய்த செயல், அதற்காகப் பயிரிட்டது என்பதற்கான பிரிவாகவே அப்பிரிவின் அடிப்படை இருக்க வேண்டும். இந்தப் பார்வையைப் பார்க்கும் மனிதன்தான் மறுமைக்குத் தயாராகி, அதற்கான செயல்பாட்டில் அதிகமாக ஈடுபடுவான். முதல் பார்வையாக இவன் பார்த்தால் கவலைப்படுவான்; விடயமும் மோஷமாகி விடும். மரணத்தை மறுமைக்கான பிரிவாகப் பார்க்காது, உலகத்தின் பிரிவாக மட்டும் பார்க்கும இவனது இந்தக் கண்ணோட்டமானது கைசேதத்தையும் கவலையையுமே அதிகப்படுத்தும். ஆனாலும் அவன், மறுமைக்காகச் செயல்பட்டு, அதற்காகத் தயாராகுவதற்காக வேண்டி மரணத்தை ஞாபகப்படுத்தினான் என்ற அமைப்பில் சிந்தித்துச் செயல்படுபவனாக இருந்தால் அவனுக்கு அது கவலையை அதிகப்படுத்தாது; அல்லாஹ்வின் பக்கம் முன்னோக்கிச் செல்வதைத்தான் அது அவனுக்கு அதிகப்படுத்தும்!.
மனிதன் தனது இரட்சகன் பக்கம் முன்னோக்கிச் சென்றுவிட்டால், அவனது நெஞ்சு (இஸ்லாமிய விளக்கத்தின்) விரிவாக்கத்தாலும், அவனது உள்ளம் அமைதியாலும் அதிகரித்து விடும்!”.
{ நூல்: 'அஷ்ஷர்ஹுல் மும்திஃ அலா ஸாதில் முஸ்தக்னிஃ', 5/298,299 }
قال العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:
[ وينبغي للإنسان أن يتذكر حاله ونهايته في هذه الدنيا، وليست هذه النهاية نهاية، بل وراءها غاية أعظم منها وهي الآخرة. فينبغي للإنسان أن يتذكر دائما الموت لا على أساس الفراق الأحباب والمألوف؛ لأن هذه نظرة قاصرة، ولكن على أساس فراق العمل والحرث للآخرة. فإنه إذا نظر هذه النظرة استعد وزاد في عمل الآخرة، وإذا نظر النظرة الأولى حزن وساءه الأمر، فيكون ذكره على هذا الوجه لا يزداد به إلا تحسرا وندما. أما إذا ذكره على الوجه وهو أن يتذكر الموت ليستعد له ويعمل للآخرة فهذا لا يزيده حزنا،وإنما يزيده إقبالا إلى الله عز وجل. وإذا أقبل الإنسان على ربه فإنه يزداد صدره إنشراحا، وقلبه إطمئنانا ].
5)பfர்ழுத் தொழுத இடத்திலிருந்து உடனடியாக எழுந்து விடாதீர்கள்!!
சஊதி அரேபியாவின் தலைமை முப்fதியாக இருந்த அல்லாமா அப்துல் அஸீஸ் பின் பாஸ் (ரஹ்) கூறுகின்றார்கள்:
“பfர்ழுத் தொழுகையிலிருந்து சலாம் கொடுத்ததற்குப் பின்னால் அவ்விடத்திலேயே உட்கார்ந்திப்பது அல்லாஹ்வின் அருள் இறங்குகின்ற நேரங்களில் மிக்க மகத்தானதாகும். எனவே, எழுந்து செல்வதற்கு நீ அவசரப்பட்டு விடாதே! أستغفر الله என்று அல்லாஹ்விடம் நீ பிழைபொறுக்கத் தேடு; سبحان الله என்று அவனைத் தஸ்பீஹ் செய்; الحمد لله என்று அவனைப் புகழ்ந்து கொள்; 'லாஇலாஹ இல்லல்லாஹ்' என்ற கலிமாவையும் கூறு!, 'அல்லாஹு அக்பர்' என்றும் சொல்லிக்கொள்!
இமாம் இப்னு பbத்தால் (ரஹ்) கூறுகின்றார்கள்:
“எவர் ஒருவருக்கு பாவங்கள் அதிகமாக இருந்து, கஷ்டம் எதுவுமின்றி அவற்றை அல்லாஹ் அழித்து விட வேண்டும் என்று விரும்புகிறாரோ அவர், தனக்கு வானவர்களின் பிரார்த்தனையும் அவர்களின் இஸ்திஃபாரும் அதிகமாகக் கிடைப்பதற்காக வேண்டி தொழுகைக்குப் பின்னால் அவர் தொழுத இடத்திலேயே கட்டாயமாக இருந்து கொள்வதை சந்தர்ப்பமாக எடுத்துக் கொள்ளட்டும்!”
{ நூல்: 'ஷர்ஹு இப்னி பத்தால்', 3/114 }
قال العلامة عبد العزيز بن باز رحمه الله تعالى: [ الجلوس بعد السلام من الصلاة المكتوبة من أعظم الأوقات التي تنزل فيها رحمة الله عز وجل، لا تستعجل بالقيام! إستغفر؛ سبّح الله؛ واحمده؛ وهلّل وكبّر ...
قال الإمام إبن بطّال رحمه الله تعالى: "من كان كثير الذنوب وأراد أن يحطه الله عنه بغير تعب،فليغتنم ملازمة مصلاه بعد الصلاة ليستكثر من دعاء الملائكة واستغفارهم له".
{ شرح إبن بطّال، ٣/ ١١٤ }
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
“ஒருவர் எந்த இடத்தில் தொழுதாரோ அந்த இடத்திலேயே அவர் அமர்ந்திருக்கும்போது அவருக்காக வானவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். ஆனால், உழூ முறிந்து விடாமல் இருக்க வேண்டும். 'இறைவா! இவரை மன்னித்து விடு; இறைவா! இவருக்கு அருள் புரி!' என்று கூறுகிறார்கள்”.
{ புகாரி- 445 }
6)இவ்வுலகில் மிருக வாழ்க்கை வாழ்ந்து விட்டு, மறுமையில் இன்ப வாழ்க்கை வாழ முடியாது!!
இஸ்லாமியப் பேரறிஞர் இமாம் இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) கூறுகின்றார்கள்:
“மனிதர்களில் அதிகமானோரின் நிலையைப் பார்த்தால் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாகவே இருக்கின்றது..... இவர்களின் காலம் எப்படியெல்லாம் கழிந்து செல்கின்றது! வாழ்நாளும் எப்படியெல்லாம் முடிந்து போய் விடுகின்றது!! இத்தகையவனின் உள்ளம் அல்லாஹ்வை விட்டும், மறுமையை விட்டும் திரையிடப்பட்டிருக்கின்றது.
உலகத்திற்கு. வந்தது போலவே அதிலிருந்து அவன் வெளியேறியும் செல்கிறான்; மிக நல்லதை உலகத்தில் அவன் சுவைத்துப் பார்க்கவே இல்லை; மாறாக, மிருகங்களின் வாழ்க்கையையே அவன் வாழ்ந்தான்! (இறுதியில்) நஷ்டப்பட்டு வங்குரோத்து நிலைக்குச் சென்றவர்கள் போலவே இவ்வுலகிலிருந்து அவன் செல்கின்றான். இவனது வாழ்க்கை இயலாமை மிக்கதாகவும், இவனது மரணம் கடும் கஷ்டம் நிறைந்ததாகவும், (மறுமை என்ற) இவனது மீளுமிடம் கவலையும் கைசேதமும் உடையதாகவே இருக்கும்!”.
{ நூல்: 'தரீகுல் ஹிஜ்ரதைன்', பக்கம்: 385 }
قال العلامة إبن القيم الجوزية رحمه الله تعالى: [ والعجب كل العجب من حال أكثر الناس. كيف ينقضي الزمان، وينفذ العمر! والقلب محجوب عن الله ودار الآخرة. وخرج من الدنيا كما دخل إليها، وما ذاق أطيب ما فيها. بل عاش عيش البهائم، وانتقل منها إنتقال المفاليس. فكانت حياته عجزا، وموته كمدا، ومعاده حسرة وأسفا !"
{ طريق الهجرتين، ص - ٣٨٥ }
அல்லாஹ் கூறுகிறான்:
“ஜின்களிலும் மனிதர்களிலும் அதிகமானோரை நரகத்திற்கென்றே நாம் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் இருக்கின்றன; அவற்றின் மூலம் அவர்கள் விளங்கிக் கொள்ளமாட்டார்கள். இன்னும், அவர்களுக்குக் கண்கள் இருக்கின்றன; அவற்றின் மூலம் அவர்கள் பார்க்க மாட்டார்கள். இன்னும், அவர்களுக்குக் காதுகள் இருக்கின்றன; அவற்றின் மூலம் அவர்கள் செவியுறமாட்டார்கள். அவர்கள் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை, (அவற்றை விடவும்) அவர்கள் மிக வழிகெட்டவர்கள். அவர்கள்தாம் (எமது வசனங்களை) அலட்சியம் செ்பவர்கள்”.
{ அல்குர்ஆன், 7:179 }
7)நன்மைக்கு வழிகாட்டும் நட்பே நல்ல நட்பாகும்!
இமாம் கதாதா (ரஹ்) கூறுகின்றார்கள்:
“ஒரு முஸ்லிம், நல்ல (நண்பனாக இருக்கும்) தனது சகோதரனிடமிருந்து பயன் ஏதும் பெற்றுக்கொள்ளவில்லையென்றாலும் அச்சகோதரனுடன் அவன் உட்கார்ந்திருப்பது பாவங்களில் விழுந்து விடுவதை விட்டும் அவனைத் தடுக்கிறது என்றால், அதுவே (அவனுக்கு) அதிக நலவாகிவிடுகிறது!”.
{ நூல்: 'அல்ஹுகூகுல் இஸ்லாமிய்யா', பக்கம்: 30 }
قال الإمام قتادة رحمه الله تعالى : [ لو لم يستفد المسلم من أخيه الصالح إلا أن جلوسه معه يمنعه من الوقوع فى المعاصي، لكان خيرا كثيرا ]
{ ألحقوق الإسلامية، ص - ٣٠ }
அல்லாமா நாஸிர் அஸ்ஸஃதீ (ரஹ்) கூறுகின்றார்கள்:
“நல்லவர்களின் நட்பைச் சம்பாதித்துக்கொள்வதும், வாழ்வின் போதும் மரணத்தின் பின்னும் அவர்களின் பிரார்த்தனைகளை வரப்பிரசாதமாகப் பெற்றுக்கொள்வதும்தான் சம்பாத்தியங்களில் மிக்க மகத்துவமானதும், கனீமத்துகளில் மிகச் சிறந்ததுமாகும்!”.
{ நூல்: 'மஜ்மூஉல் பfவாயித்', பக்கம்: 106 }
قال العلامة ناصر السعدي رحمه الله تعالى: [ من أعظم المكاسب وأجلّ الغنائم كسب صداقة الأخيار، واغتنام أدعيتهم فى الحياة وبعد الممات ]
{ مجموع الفوائد، ص - ١٠٦ }
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூமூசா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
“நல்ல நண்பன் மற்றும் கெட்ட நண்பனுக்கான உதாரணம், கஸ்தூரி வியாபாரியின் நிலையையும் (உலைக் களத்தில்) உலை ஊதுகின்றவனின் நிலையையும் ஒத்திருக்கிறது. கஸ்தூரி வியாபாரி ஒன்றில் அதை உனக்கு அன்பளிப்பாக வழங்கலாம்; அல்லது நீ அவனிடமிருந்து (அதை விலைக்கு) வாங்கிக்கொள்ளலாம்; அல்லது அதிலிருந்து நறுமணத்தையேனும் நீ பெறலாம். ஆனால், உலை ஊதுபவனோ ஒன்றில் உனது ஆடையை எரித்துக் கரித்து விடுவான்; அல்லது (அவனிடமிருந்து) துர்வாடையையாவது நீ அடைந்தே தீருவாய்!”
{ நூல்: புகாரி - 5534, முஸ்லிம் - 5124 }
8)உள்ளத்தைத் தேடுங்கள்; கிடைக்காவிட்டால் உள்ளத்தை அல்லாஹ்விடம் கேளுங்கள்!!
இஸ்லாமியப் பேரறிஞர் இமாம் இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) கூறுகின்றார்கள்:
“மூன்று இடங்களில் உனது உள்ளத்தைத் தேடிக்கொள்!
1) அல்குர்ஆனைச் செவிமடுக்கின்ற நேரத்தில்...
2)அல்லாஹ்வை நினைவுகூரும் சபைகளில்...
3)தனிமையில் இருக்கும் நேரங்களில்...
இந்த இடங்களில் அதை நீ பெற்றுக்கொள்ளவில்லை என்றால் உனக்கொரு உள்ளத்தை அருட்கொடையாகத் தரும்படி அல்லாஹ்விடம் நீ கேள்! ஏனெனில், உனக்கு உள்ளமே இல்லை!!”.
{ நூல்: 'அல்பfவாயித்', 1/149 }
قال العلامة إبن القيم الجوزية رحمه الله تعالى: [ أطلب قلبك في ثلاثة مواطن:
*الأول:* عند سماع القرآن...
*الثاني:* وفي مجالس الذكر...
*الثالث:* وفي أوقات الخلوة...
فإن لم تجده في هذه المواطن فسل الله أن يمن عليك بقلب، فإنه لا قلب لك!!
{ الفوائد ، ١ / ١٤٩ }
9)உனது பார்வை இப்படித்தான் இருக்க வேண்டும்!!
இமாம் இப்னு ஹஸ்ம் (ரஹ்) கூறுகின்றார்கள்:
“சொத்துப்பத்திலும், நிலைமை மற்றும் ஆரோக்கியத்திலும் உனக்குக் கீழுள்ளவர்களைப் பார்! மார்க்கம், கல்வி, சிறப்புக்கள் ஆகியவற்றில் உனக்கு மேல் உள்ளவர்களைப் பார்!!”
{ நூல்: 'அல்அஹ்லாக் வஸ்ஸியர்', பக்கம்: 23 }
قال الإمام إبن حزم رحمه الله تعالى [ أنظر فى المال والحال والصحة إلى من دونك، وانظر فى الدين والعلم والفضائل إلى من هو فوقك ]
{ الأخلاق والسير، ص - ٢٣ }
10)மக்களே! உங்களை விட நான் சிறந்தவன் அல்லன்!!
இமாம் அபூ இஸ்ஹாக் இப்ராஹீம் பின் மூசா அஷ்ஷாதிபீb (ரஹ்) கூறுகின்றார்கள்:
கலீபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் தனது நூல்களில், “மனோ இச்சைகளின் பக்கம் சாய்ந்து கொண்ட விடயங்களையும், சத்தியத்தை விட்டும் தூரமாகிப்போன விடயத்தையும் உங்களுக்கு நான் எச்சரிக்கை செய்கிறேன்!” என்று எழுதுபவர்களாக இருந்தார்கள்.
உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களை மக்கள் கலீபாவாக ஏற்று, அவருக்கு அவர்கள் பைஅத் செய்த போது அவர் பிரசங்க மேடையில் (மிம்பரில்) ஏறி அல்லாஹ்வைப் புகழ்ந்தார். போற்றும் வார்த்தைகளை அவன் மீது கூறிவிட்டு பின்னர் இவ்வாறு உபதேசம் செய்தார்: “மக்களே! உங்கள் நபிக்குப் பின்னர் வேறொரு நபி கிடையாது. (அல்குர்ஆன் என்ற) உங்கள் வேத நூலுக்குப் பின்னர் வேறொரு வேத நூலும் கிடையாது. நபியின் வழிமுறையாக உங்களுக்கு வந்திருக்கும் விடயத்திற்குப் பின்னர் வேறெந்த வழிமுறையும் இல்லை. (நபியின் சமூகமாகிய) உங்கள் சமூகத்திற்குப் பின்னர் வேறு ஒரு சமூகமும் இல்லை. அறிந்து கொள்ளுங்கள்! ஹலால் என்பது, அல்லாஹ் தனது வேதத்திலும், தனது நபியின் பேச்சிலும் ஹலாலாக்கியிருப்பதுதான் மறுமை நாள் வரைக்கும் ஹலால் ஆகும். ஹராம் என்பது, அல்லாஹ் தனது வேதத்திலும், தனது நபியின் பேச்சிலும் ஹராமாக்கியிருப்பதுதான் மறுமை நாள் வரைக்கும் ஹராம் ஆகும். அறிந்து கொள்ளுங்கள்! மார்க்கத்தில் புதிதாக எதையும் உருவாக்குபவனாக நான் இல்லை; என்றாலும், மார்க்கத்தில் இருப்பதைப் பின்பற்றுபவன்தான் நான். அறிந்து கொள்ளுங்கள்! நான் சட்டத்தை அமுல்படுத்துபவன்தான்; தீர்ப்பு வழங்குபவன் அல்லன். அறிந்து கொள்ளுங்கள்! உங்களை விட நான் சிறந்தவன் அல்லன்; என்றாலும், உங்களை விட பாரமான பொறுப்பைச் சுமந்திருப்பவன். அறிந்து கொள்ளுங்கள்! படைத்தவனுக்கு மாறு செய்யும் விடயத்தில் படைப்பினங்களுக்குக் கட்டுப்படுவதென்பது கிடையாது!”
{ நூல்: 'அல்இஃதிஸாம்', பக்கம்: 67 }
قال الإمام أبو إسحاق إبراهيم بن موسى الشاطبي رحمه الله تعالى:-
[ كان عمر بن عبدالعزيز رحمه الله يكتب في كتابه: *إني أحذركم ما مالت إليه الأهواء والزيغ البعيدة*. ولما بايعه الناس صعد المنبر فحمد الله وأثنى عليه ثم قال: *أيها الناس! إنه ليس بعد نبيّكم نبيّ، ولا بعد كتابكم كتاب، ولا بعد سنّتكم سنة، ولا بعد امّتكم امّة. ألا ! وإن الحلال ما أحلّ الله في كتابه وعلى لسان نبيّه حلال إلى يوم القيامة. ألا! وإن الحرام ما حرّم الله في كتابه وعلى لسان نبيّه حرام إلى يوم القيامة. ألا! وإني لست بمبتدع ولكني متّبع، ألا! وإني لست بقاض؛ ولكني منفذ. ألا! وإني لست بخيركم، ولكني أثقلكم حملا. ألا! ولا طاعة لمخلوق في معصية الخالق* ].
{ الإعتصام، ص - ٦٧ }
✍தமிழில்✍
அஷ்ஷெய்க் மெளலவி
N.P.ஜுனைத் காஸிமி,மதனி
இன்ஷா அல்லாஹ் தொடரும்......✍
@Islaam For All Peoples
Like👍 And Follow Our Islaam For All Peoples Fb page:
https://www.facebook.com/islaam.community/
Subscribe Our Islaam For All Peoples YouTube channel:
https://www.youtube.com/channel/UC0Um0iqVeLLCZeHJGZM97zA
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர் - 2
💢💢💢💢💢💢💢💢💢💢
http://islaamforallpeoples.blogspot.in/2018/03/1_23.html
🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர் - 1
💢💢💢💢💢💢💢💢💢💢
http://islaamforallpeoples.blogspot.in/2018/03/1.html
🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵
Comments
Post a Comment