ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-8
بسم الله الرحمن الرحيم ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-8 (21.05.2018) தமிழில் அஷ்ஷெய்க் மெளலவி N.P.ஜுனைத் காஸிமி,மதனி. 1)அசத்தியத்தில் பிடிவாதமும், அறியாமைக்கால மூடத்தன வைராக்கியமும் நேர்வழிக்குத் தடையாக இருக்கும் காரணிகளாகும்! அல்லாமா ஸாலிஹ் பின் பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள் :- “நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் அவர்களுக்கு நேர்வழி கிடைப்பதை அல்லாஹ் தடுத்தேவிட்டான்! அவர் அதற்குத் தகுதியில்லாதவராக இருந்தார்; அதனால்தான் அதை விட்டும் அவர் தடுக்கப்பட்டார். நேர்வழி கிடைப்பது தடைபட்டுப் போவதற்குப் பல காரணிகள் இருக்கின்றன. அவற்றில், ' அசத்தியத்தில் பிடிவாதம், அறியாமைக்கால மூடத்தனமான வைராக்கியம்' ஆகிய இரண்டும் முக்கியமானவைகளாகும். நேர்வழிக்காக ஒரு மனிதனுக்கு அல்லாஹ் அருள்பாலிக்காமல் இருப்பதற்கு இவையிரண்டும் காரணமாகி விடுகின்றன!. சத்தியம் இதுதான் என்று ஒருவனுக்குத் தெ...