ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-8


بسم الله الرحمن الرحيم
ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-8 
(21.05.2018) 

தமிழில் அஷ்ஷெய்க் மெளலவி N.P.ஜுனைத் காஸிமி,மதனி.

1)அசத்தியத்தில் பிடிவாதமும், அறியாமைக்கால மூடத்தன வைராக்கியமும் நேர்வழிக்குத் தடையாக இருக்கும் காரணிகளாகும்!

         அல்லாமா ஸாலிஹ் பின் பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- 

         “நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் அவர்களுக்கு நேர்வழி கிடைப்பதை அல்லாஹ் தடுத்தேவிட்டான்! அவர்  அதற்குத் தகுதியில்லாதவராக இருந்தார்; அதனால்தான் அதை விட்டும் அவர் தடுக்கப்பட்டார். நேர்வழி கிடைப்பது தடைபட்டுப் போவதற்குப் பல காரணிகள் இருக்கின்றன. அவற்றில், 'அசத்தியத்தில் பிடிவாதம், அறியாமைக்கால மூடத்தனமான  வைராக்கியம்'ஆகிய இரண்டும் முக்கியமானவைகளாகும். நேர்வழிக்காக ஒரு மனிதனுக்கு அல்லாஹ் அருள்பாலிக்காமல் இருப்பதற்கு இவையிரண்டும் காரணமாகி விடுகின்றன!.

           சத்தியம் இதுதான்   என்று ஒருவனுக்குத்  தெளிவாகி, அதை அவன் ஏற்றுக்கொள்ளாமல் இருந்தால் சத்தியத்தில் இருப்பது தடுக்கப்படுவதுகொண்டு அவன் தண்டிக்கப்படுவான். அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும்! நேர்வழியை விட்டும்  தடம்புரளுதல், வழிகேடு ஆகியவற்றைக்கொண்டே அவன் தண்டிக்கப்படுவான். இதன்பின்னர் சத்தியத்தை அவன் ஏற்றுக்கொள்ளமாட்டான்.

            எனவே, சத்தியம் யாரை வந்தடைகிறதோ அதை அவர் உடனடியாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும். காரணம் கூறி அவர் தாமதிக்கவும் கூடாது; பிற்படுத்தவும் கூடாது. அப்படி அவர் பிற்படுத்திவிட்டால் சத்தியத்தை விட்டும் தடுக்கப்படத் தகுதியானவராகி விடுவார்!”

அல்லாஹ்கூறுகிறான்:
“(சத்தியத்தை விட்டும்) அவர்கள் தடம்புரண்ட போது அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தடம்புரளச் செய்துவிட்டான்!”
(அல்குர்ஆன், 61:05)
       
மேலும் அல்லாஹ் கூறுகிறான்: “ஆரம்பத்தில் அவர்கள் நம்பிக்கை கொள்ளாமல் இருந்தது போலவே அவர்களின் உள்ளங்களையும், பார்வைகளையும் நாம் புரட்டுவோம்!”
(அல்குர்ஆன், 06:110)

{ நூல்: 'இஆனதுல் முஸ்தபீfத்', 1/259 }

           قال العلامة صالح بن فوزان الفوزان حفظه الله تعالى:-
          *[ حرمان أبي طالب، حرمه الله من الهداية لأنه لا يستحقها، فلذلك حرمه منها. والحرمان له أسباب:*

          *ومنها:- التعصب للباطل، وحمية الجاهلية، تسبّبان أن الإنسان لا يوفقه الله جلّ وعلا. فمن تبيّن له الحق ولم يقبله فإنه يعاقب بالحرمان - والعياذ بالله - . يعاقب بالزيغ والضلال، ولا يقبل الحق بعد ذلك.*

          *أن من بلغه الحق وجب عليه أن يقبله مباشرة، ولا يتلكّأ ولا يتأخر، لأنه إن تأخر فحريّ أن يحرم منه. قال الله تعالى: « فلما زاغوا أزاغ الله قلوبهم »، وقال أيضا: « ونقلّب أفئدتهم وأبصارهم كما لم يؤمنوا به أول مرة » ]*
{ إعانة المستفيد ، ١/ ٢٥٩ }

அல்லாஹ் கூறுகிறான்:
“(நபியே!) தன் மனோ இச்சையைத் தனது  கடவுளாக எடுத்துக்கொண்டவனை நீர் பார்த்தீரா? நன்கு அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு விட்டான். மேலும் அவனது செவிப்புலனிலும், உள்ளத்திலும் முத்திரையிட்டு அவனது பார்வையில் திரையையும் ஏற்படுத்தினான். அல்லாஹ்வுக்குப் பின்னர் அவனை நேர்வழியில் செலுத்துபவன் யார் இருக்கின்றான்? நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?!”
(அல்குர்ஆன், 45:23)

2)உனது உள்ளம் நோயுற்றுள்ளது என்பதை நீ அறிந்து கொள்வது எப்படி?

         அல்லாமா  முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:-

           “உனது உள்ளம் தீமையை தீமையாகப் பார்த்து  வெறுக்காமல், (நல்லதில்) நிலைத்திருக்காமல், நன்மையில் நிம்மதியடையாமல் இருப்பதாக நீ கண்டு கொண்டால் உன் உள்ளத்தில் நோய் இருப்பதாகப் புரிந்து கொண்டு அதைச் சீர்செய்ய முயற்சி செய்!

          இதே நேரம், உனது உள்ளம் நன்மையில் இன்புற்று அதைச் செய்வதோடு, அதன்பால் செல்வதற்கான வழியையும் காட்டி, தீமையை வெறுத்து, அதை விட்டும் தூரமாகியிருப்பதாக நீ கண்டு கொண்டால் அது தூய உள்ளமாக இருக்கிறது என்று  புரிந்து கொள்!”

{ நூல்: 'ஷர்ஹு ஸஹீஹ் முஸ்லிம்', 01/300 }

         قال العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-
            *[ فإذا رأيت من قلبك:*
*أنه لا يستنكر المنكر،*
*وأنه لا يستقر،*
*ولا يطمئن للمعروف، فاعلم أن في قلبك مرضا فحاول أن تصلحه!*
          *وإذا رأيت قلبك:*
*يفرح بالمعروف ويفعله،*
*ويرشد إليه،*
*ويكره المنكر ويبتعد عنه، فاعلم أنه قلب سليم! ]*
{ شرح صحيح مسلم، ١/٣٠٠ }

 அல்லாஹ் கூறுகிறான்: “அல்லாஹ்விடம் தூய உள்ளத்துடன் வருபவரைத் தவிர அந்நாளில் செல்வமோ, பிள்ளைகளோ பயன் தராது”
(அல்குர்ஆன், 26:88,89)

3)அல்லாஹ்வின் வல்லமையை சரியாகப் புரிந்தவன், பக்குவமாக வாழ்ந்து கொள்வான்!

          சஊதி அரேபிய நாட்டு அறிஞர், அஷ்ஷெய்க் அப்துர்ரஸ்ஸாக் பின் அப்துல் முஹ்சின் அல்பbத்ர் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

          “அல்லாஹ் நன்கு செவியேற்பவன்; அவன்  பார்ப்பவன்; அவன் அனைத்தையும்  நன்கறிந்தவன்; வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றில் அணுவளவும் அவனுக்கு மறைந்திருக்காது; ரகசியத்தையும், மறைத்து வைத்திருப்பவற்றையும் அவன் நன்கறிவான்; கண்களின் மோசடியையும், உள்ளங்கள் மறைத்து வைத்திருப்பவற்றையும் அவன் நன்கறிவான்;  அனைத்தையும் அறிவால் அவன் சூழ்ந்திருக்கின்றான்; மேலும், அனைத்தையும் எண்ணிக்கையால் அவன் கணக்கிட்டும் வைத்துள்ளான் என்பன போன்ற  இவ்விடயங்களை ஒருவன் சரியாக அறிந்துகொண்டால் அவனுக்கு இவை, நாவையும் ஏனைய உடல் உறுப்புகளையும் பாதுகாத்துக்கொள்ளும் நல்ல பலாபலனைக் கொடுக்கும்!.

              அல்லாஹ் கூறுகிறான்:
“நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?” (அல்குர்ஆன், 96:14)

          மேலும் அல்லாஹ் கூறுகிறான்:*“அல்லாஹ்வை நீங்கள் அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவன்; நன்கறிந்தவன்”.
(அல்குர்ஆன், 49:01)

         மேலும் அல்லாஹ் கூறுகிறான்:
“நிச்சயமாக உங்கள் உள்ளங்களில் இருப்பதை அல்லாஹ் நன்கறிகிறான் என்பதை அறிந்து, அவனை நீங்கள் அஞ்சிக்கொள்ளுங்கள்!”.
(அல்குர்ஆன், 02:235)

         “இரவு வேளையில், பாலைவனத்தில் வைத்து ஒரு பெண்மீது 
ஒருவன் மோகம் கொண்டு பாலியல் ஆசையைத் தீர்த்துக் கொள்ள அவளை அவன் அழைத்தான். அவளோ அதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டாள்!. அப்போது அவன் அவளிடம், 'நட்சத்திரங்களைத் தவிர வேறு யாரும் எம்மைப் பார்க்கவில்லையே!' என்றான். அதற்கவள், 'அந்நட்சத்திரங்களைப் படைத்தவன் எம்மைப் பார்த்துக்கொண்டிருக்கின்றானே!' என்று விடையளித்தாள்.

           இந்த சம்பவத்தை, அல்லாமா இப்னுல் ஜவ்ஸீ (ரஹ்) அவர்கள் தனது 'தம்முல் ஹவா' என்ற நூலில், பக்கம் 272-ல் குறிப்பிடுவதாக அல்லாமா இப்னு ரஜப் அல்ஹன்பbலீ (ரஹ்) கூறுகின்றார்கள்.

{ ஆதார நூல்: 'பிfக்ஹுல் அஸ்மாஇல் ஹுஸ்னா', பக்கம்: 26,27 }
     
          قال الشيخ عبد الرزاق بن عبد المحسن البدر حفظه الله:-
          *[ وإذا علم العبد بأن الله سميع بصير عليم، لا يخفى عليه مثقال ذرة في السموات والأرض، وأنه يعلم السر وأخفى، ويعلم خائنة الأعين وما تخفي الصدور، وأنه تبارك وتعالى أحاط بكل شيء علما، وأحصى كل شيئ عددا، فإن ذلك يثمر له حفظ اللسان والجوارح....*
           *قال تعالى: « ألم يعلم بأن الله يرى »، وقال تعالى:  «واتقوا الله إن الله سميع عليم» ، وقال تعالى: « واعلموا أن الله يعلم ما في أنفسكم فاحذروه ».*
        قال العلامة إبن رجب الحنبلي رحمه الله تعالى:-
       *[ راود رجل إمرأة في فلاة ليلا فأبت، فقال لها: ما يرانا إلا الكواكب! فقالت: فأين مكوكبها؟ ]*، والقصة رواها العلامة إبن الجوزي رحمه الله تعالى في كتابه « ذمّ الهوى » - ص  - ٢٧٢ .
{فقه الأسماء الحسنى - للشيخ عبد الرزاق بن عبد المحسن البدر ، ص - ٢٦،٢٧ }

4)யுவதியிடம் தொலைபேசி இலக்கம் கேட்ட இளைஞனுக்கு, அவள் இலக்கத்தைக் கொடுத்தாள்!!

          இளைஞனொருவன் யுவதியொருத்தியிடம் அவளது தொலைபேசி இலக்கத்தைக் கேட்டான். அதற்கு அவள், “இலக்கம் 17-32” என்று பதிலளித்தாள்!.

       இளைஞன் திடுக்கிட்டு, அதிர்ந்து போய், “என்ன இது! பிரத்தியேக இலக்கமாக இருக்கிறதே?!! என்று கேட்டான்.

          அதற்கு அந்த யுவதி இவ்வாறு பதிலளித்தாள்: “ இது, அல்குர்ஆனின் 17-ஆம் அத்தியாயத்தின் 32-ஆவது வசனம். 'விபச்சாரத்தை நீங்கள் நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கின்றது!' என்று அதில் அல்லாஹ் கூறுகிறான்”
என்று பதில் கூறினாள்.

{ முகநூலில் Alho Mamod எனும் சகோதரர் }

               *سأل شاب فتاة عن رقم هاتفها... فأجابت: ١٧- ٣٢*
          *صدم الشاب وقال: ما هذا؟؟ رقم خاص!؟*
         *أجابت الفتاة:  القرآن الكريم، السورة - ١٧ ، الآية - ٣٢. يقول تعالى: « ولا تقربوا الزّنا إنه كان فاحشة وساء سبيلا »*.
{ فيس بوك:  Alho Mamod }

அல்லாஹ் கூறுகிறான்:
“நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் வேறெவரைப் போன்றவர்களும் அல்லர். நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பீர்களானால் பேச்சில் குழைந்து பேசாதீர்கள். ஏனெனில், எவனது உள்ளத்தில் நோய் இருக்கின்றதோ அவன் ஆசைகொண்டு விடுவான். இன்னும், நல்ல வார்த்தையையே நீங்கள் பேசுங்கள்!”
(அல்குர்ஆன், 33:32)

5)*சத்தியத்திற்காகச் சோதனைகளைச் சந்திப்போர் இருக்கின்ற பாதையே சரியான பாதையாகும்!!*

          அல்லாமா இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) கூறுகின்றார்கள்:- 

           “(சத்தியத்திற்காகச் சோதனைகளைச் சந்திப்போர் இருந்து வருகின்ற) பாதையே சரியான பாதையாகும்!. இப்பாதையில்தான் ஆதம் (அலை) அவர்கள் களைப்படைந்தார்கள்; இந்த சத்தியத்திற்காக வேண்டித்தான் நூஹ் (அலை)அவர்கள் கடும் கஷ்டங்களை அனுபவித்தார்கள்; 'அல்லாஹ்வின் தோழர்' என்றழைக்கப்படும்  இப்ராஹீம் (அலை) அவர்களும் நெருப்பில் எறியப்பட்டார்கள்; அறுவைக்காக இஸ்மாஈல் (அலை) அவர்கள் பூமியில் மல்லாக்கக் கிடத்தப்பட்டார்கள்; அற்ப விலைக்கு யூசுப் (அலை) அவர்கள் விற்கப்பட்டு, சில வருடங்கள் சிறையிலே தங்கினார்கள்; ஸகரிய்யா (அலை)அவர்கள் வாளால் அரியப்பட்டார்கள்; கண்ணியத்திற்குரியவராகவும், ஒழுக்க நெறியுடையவராகவும் இருந்த யஹ்யா (அலை) அவர்கள் அறுக்கப்பட்டார்கள்; நோயின் தீங்கையெல்லாம் அய்யூப் (அலை) அவர்கள் தாங்கிக் கொண்டு, தாவூத் (அலை) அவர்களது அழுகையின் அளவைவிட தனது அழுகையை அதிகப்படுத்திக்கொண்டார்கள்; ஈசா (அலை) அவர்கள் தனிமையுடன் பயணித்தார்கள்; வறுமைக்கும், பலவிதமான தொல்லைகளுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முகம் கொடுத்து அதற்கான சிகிச்சையையும் அளித்தார்கள்!

             மனிதா! நீயோ வீண் விளையாட்டுக்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றாய்!!

{ நூல்: 'அல்பfவாஇத்', பக்கம்: 42 }


            قال العلامة إبن القيم الجوزية رحمه الله تعالى:-
         *[ الطريق طريق تعب فيه آدم، وناح لأجله نوح، ورمي في النار الخليل، وأضجع للذبح إسماعيل، وبيع يوسف بثمن بخس ولبث في السجن بضع سنين، ونشر بالمنشار زكريا، وذبح السيد الحصور يحي، وقاسى الضّرّ أيوب وزاد على المقدار بكاءا داود، وسار مع الوحش عيسى، وعالج الفقر وأنواع الأذى محمد، وتزهو أنت باللّهو واللّعب!! ]*
{الفوائد لابن القيم ، ص - ٤٢ }

6)அசத்தியதிற்கு உதவுவோர் அதிகம்பேர் என்று நீ ஆச்சரியப்படாதே!!

          “அசத்தியத்திற்கு உதவி செய்வோர் அதிகம்பேர் இருக்கிறார்கள் என்று நீ ஆச்சரியப்பட்டு விடாதே! தஜ்ஜாலின் கண்கள் இரண்டிற்குமிடையில் (நெற்றியில்) 'காபிfர்' என்று எழுதப்பட்டிருப்பினும், அவனை அதிகமானோர் பின்பற்றத்தான் போகிறார்கள்!!

{ முகநூலில்  بكري محمد أحمد علي  என்பவர் }


             *[ لا تتعجب من كثرة أنصار الباطل! فالدجال مكتوب بين عينيه «كافر»، ورغم ذلك سيتبعه الكثيرون.... ]*
{ بكري محمد أحمد علي في فيس بوك }

 அல்லாஹ் கூறுகிறான்:
 “பூமியில் உள்ளோரில் அதிகமானோருக்கு நீர் கட்டுப்பட்டால் அவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டும் உம்மை வழிகெடுத்து விடுவார்கள். வெறும் யூகங்களையே அவர்கள் பின்பற்றுகின்றார்கள். அவர்கள் கற்பனை செய்வோரேயன்றி வேறில்லை!”
(அல்குர்ஆன், 06:116)

7)எது நல்ல வாழ்க்கை?

         அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:-

          “நல்ல வாழ்க்கை என்பது, பொதுமக்கள் சிலர் விளங்கி வைத்திருப்பதுபோல வறுமை, நோய், கவலை போன்ற ஆபத்துக்களிலிருந்து ஈடேற்றமடைந்திருப்பது என்பதல்ல. மாறாக,  ஒரு மனிதன் உள்ளம் தூய்மையானவனாகவும், (இஸ்லாத்தைத் தூய வடிவில் விளங்கிச் செயல்படுவதன்பால்) உள்ளம் விரிந்தவனாகவும், அல்லாஹ்வின் கழா கத்ரில் திருப்திகொண்டவனாகவும் இருப்பதுதான் நல்ல வாழ்க்கையாகும். அத்தோடு அவனுக்கு மகிழ்ச்சியான விடயம் ஒன்று ஏற்பட்டால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவான்; அது அவனுக்கு நலவாக அமைந்து விடும்! அவனுக்குத் துன்பம் ஒன்று ஏற்பட்டுவிட்டால் பொறுமையாக இருப்பான்; அதுவும் அவனுக்கு நலவாகிவிடும்! இதுதான் நல்ல வாழ்க்கையாகும்; இதுதான் உள்ளத்திற்கும் திருப்தியாகும்.

          நிறைய சொத்துக்கள் இருப்பதும், உடல்கள் வெறுமனே ஆரோக்கியமாக இருப்பதும் மனிதனுக்கு சில வேளை மூதேவித்தனமாகவும், களைப்பையும் கஷ்டத்தையும் ஏற்படுத்தக்கூடியதாகவும் அமைந்து விடும்!!”

{ நூல்: 'பfதாவா இஸ்லாமிய்யா', 04/64 }


           قال العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-
            *[ الحياة الطيبة ليست كما يفهمه بعض الناس: السلامة من الآفات من فقر ومرض وكدر. لا، بل الحياة الطيبة أن يكون الإنسان طيب القلب، منشرح الصدر، مطمئنا بقضاء الله وقدره. إن أصابته سراء شكر فكان خيرا له، وإن أصابته ضراء صبر فكان خيرا له! هذه هي الحياة الطيبة؛ وهي راحة القلب.*

          *أما كثرة الأموال وصحة الأبدان فقد تكون شقاءا على الإنسان وتعبا ]*
{ فتاوى إسلامية،  ٤/ ٦٤ }

8)முஃமின்களை பலப்படுத்தும் வார்த்தை!

           “நம்பிக்கை கொண்டோரை இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் உறுதியான வார்த்தையைக்கொண்டு அல்லாஹ் பலப்படுத்துவான்.”
(அல்குர்ஆன், 14:27) என்ற இவ்வசனத்திற்கு அல்லாமா ஸாலிஹ் பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) அவர்கள் பின்வருமாறு விளக்கமளிக்கின்றார்கள்:- 

            “ வசனத்தில் வருகின்ற உறுதியான வார்த்தை என்பது: ஆதாரம் மற்றும் தெளிவான சான்று மூலம் இறைவிசுவாசியின் உள்ளத்தில் பலம்பெற்றிருக்கும் 'கலிமதுத் தவ்ஹீத்' எனும் வார்த்தையாகும்.

           இதைக்கொண்டு இவ்வுலகில் இறைவிசுவாசிகளை பலப்படுத்துதல் என்பதன் பொருள்: இதன் பாதையில் பயணிக்கின்றபோது தொல்லையோ, வேதனையோ இவர்களுக்கு ஏற்பட்டாலும் சத்தியத்தை இறுகப் பற்றிப்பிடித்துக் கொள்வார்கள் என்பதாகும்.

            மறுமையில் அவர்களைப் பலப்படுத்துதல் என்பதன் பொருள்: வானவர்கள் இருவரும் கேள்வி கேட்கின்ற போது அதற்கு விடையளிக்க அவர்களுக்கு அல்லாஹ் அருள்புரிவதாகும்!”.

{ நூல்: 'ஷர்ஹுல் அகீதா அல்வாசிதிய்யா', பக்கம்: 182 }


قال الله تعالى: *« يثبّت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة »*
                   قال العلامة صالح فوزان الفوزان حفظه الله تعالى:-
           *[ والقول الثابت: هو كلمة التوحيد التي ثبتت في قلب المؤمن بالحجة والبرهان*.
*وتثبيت المؤمنين بها في الدنيا: أنهم يتمسكون بها ولو نالهم في سبيلها ما نالهم من الأذى والتعذيب.*
*وتثبيتهم بها في الآخرة: توفيقهم للجواب عند سؤال الملكين ].*
{ شرح العقيدة الواسطية ،  ص - ١٨٢ }

9)உன் மரணத்துடன் உன் பாவங்களும் மரணித்து விடட்டும்!

             ஹபீப் அல்பாfரிசீ (ரஹ்) கூறுகின்றார்கள்:-

             “ஒரு மனிதன் மரணிக்கின்றபோது, அவனுடன் சேர்ந்து அவனது பாவங்களும் மரணித்து விடுவதுதான் அவனுக்குரிய மகிழ்ச்சியும் ஈடேற்றமுமாகும்!”

{ நூல்: 'ஹில்யதுல் அவ்லியா', 06/152 }

               قال حبيب الفارسي رحمه الله تعالى:-
*[ إن من سعادة المرء أن يموت  وتموت معه ذنوبه! ]*
{ حلية الأولياء،  ٦ /١٥٢ }

“சமூக வலைத்தளங்களில் பாவங்களை நீ பரப்பிவிட்டு, பின்னர் நீ மரணித்து விடுகின்றாய்;  உனது அப்பாவங்கள், உனது  மரணத்திற்குப் பின்னர்  தொடரும்படியாகத் தங்கி விடுகின்றன என்றால் அதுதான் மிகப்பெரிய முஸீபத்தாகும்!!

{ முகநூலில் -  مهدي مهدي}

            *[ أعظم مصيبة أن تنشر المعاصي في مواقع التواصل الإجتماعي ثم تموت ،وتبقى ذنوبك مستمرة بعد موتك ]*
{ مهدي مهدي في فيس بوك }

10)இரண்டு பாதைகளில் எந்தப் பாதையை நீ தேர்ந்தெடுத்திருக்கின்றாய்?

            அல்லாமா அஹ்மத் பின் யஹ்யா அந்நஜ்மீ (ரஹ்) கூறுகின்றார்கள்:-

           “அல்லாஹ்வின் அடியானே! சத்தியத்திற்கு நீ உதவி செய்தது பற்றியும், அல்லது அதற்கு உதவி செய்யாமல் விட்டு  விட்டது  பற்றியும் அல்லாஹ்வின் முன்னிலையில் நீ வினவப்படுவாய். அப்போது, சத்தியத்திற்கு உதவி புரிந்தவனாக நீ இருந்துவிட்டால் (அல்லாஹ்வின் அருட்பேறுகளைக்கொண்டு) நீ நன்மாராயம் பெற்றுக்கொள்ளலாம். ஏனெனில், சத்தியத்திற்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ் இவ்வாறு வாக்குறுதியளித்துவிட்டான்: “நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால் அவன் உங்களுக்கு உதவி செய்வான். மேலும், உங்கள் பாதங்களைப் பலப்படுத்துவான்” 
அல்குர்ஆன், 47:07)

           மேலும் அல்லாஹ் கூறுகிறான்: “நிச்சயமாக நாம் நமது தூதர்களுக்கும், நம்பிக்கை கொண்டோருக்கும் இவ்வுலக வாழ்விலும், சாட்சிகள் எழுந்து நிற்கும் நாளிலும் உதவி செய்வோம்.

         (அது) அநியாயக்காரர்களுக்கு அவர்களின் சாட்டுப்போக்கு பயனளிக்காத நாளாகும். மேலும், அவர்களுக்குச் சாபம் உண்டு; இன்னும் அவர்களுக்கு மோசமான வீடும் உண்டு”.
(அல்குர்ஆன், 40: 51,52)

             அல்லாஹ்வின் அடியானே! சத்தியத்திற்கும், சத்தியவாதிகளுக்கும் நீ உதவி செய்யாது விட்டிருந்தால், “அல்லாஹ்விடம் தூய உள்ளத்துடன் வருபவரைத் தவிர செல்வமோ, பிள்ளைகளோ பயன் தராத அந்நாளில்”
(அல்குர்ஆன், 26:88,89)
அதன் பெறுபேற்றை கண்டு கொள்வாய்!”.

{ நூல்: 'அத்துரருன் நஜ்மிய்யா பீ ரத்தி பஃழிஷ் ஷுபுஹாதில் அகதிய்யா வல்மன்ஹஜிய்யா', பக்கம்: 50 }

              قال العلامة أحمد بن يحي النجمي رحمه الله تعالى:-

         *[ وأنت يا عبد الله! مسؤول أمام الله عن نصرتك للحق أو خذلانه. فإن كنت نصرت الحق فأبشر، والله قد وعد الناصرين للحق بقوله تعالى: « يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبّت أقدامكم » وبقوله عز وجل: « إنا لننصر رسلنا والذين آمنوا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد، يوم لا ينفع الظالمين معذرتهم ولهم اللعنة ولهم سوء الدار »*

          *ويا عبدالله! إن كنت خذل الحق وأهله فإنك ستجد مغبة ذلك في « يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم » ]*

{ الدرر النجمية في رد بعض الشبهات العقدية والمنهجية ، ص -  ٥٠

✍தமிழில்✍
                   அஷ்ஷெய்க் மெளலவி
N.P.ஜுனைத் காஸிமி,மதனி
இன்ஷா அல்லாஹ் தொடரும்......✍

@Islaam For All Peoples

Like👍 And Follow Our Islaam For All Peoples Fb page:
https://www.facebook.com/islaam.community/

Subscribe Our Islaam For All Peoples YouTube channel:
https://www.youtube.com/channel/UC0Um0iqVeLLCZeHJGZM97zA


ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-7
http://islaamforallpeoples.blogspot.in/2018/05/1-1266.html

Comments

Popular posts from this blog

அல் குர்ஆன் சுன்ன அடிப்படையில் கேள்வி பதில் தொகுப்புகள்

ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-3

Learn Al Qur'an With Tajweed Tamil