Posts

Showing posts from April, 2020

ரமழானின் பூரண பயனைப் பெற சில வழிகாட்டல்கள்!!!

Image
بسم الله الرحمن الرحيم ரமழானின் பூரண பயனைப் பெற சில வழிகாட்டல்கள் !!! அஷ்ஷெய்க் N.P.ஜுனைத் (காஸிமி,மதனி) [ விரிவுரையாளர் - தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீடம். தலைவர் - வவுனியா மாவட்ட ஜம்இய்யதுல் உலமா ] 01) உளத்தூய்மையோடு வணக்க வழிபாடுகளில் ஈடுபடல்:         வணக்க வழிபாடுகளின் உயிர்நாடி 'இஹ்லாஸ்' எனும் உளத்தூய்மையாகும். நாம் செய்யும் வணக்க வழிபாடுகள் அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இது ஒரு முக்கிய நிபந்தனை என்பது இஸ்லாத்தின் கண்டிப்பான கட்டளையாகும். நற்காரியங்களைச் செய்கின்றபோது தூய்மையான எண்ணமும், அல்லாஹ்வுக்காக மட்டும் செய்கிறேன் என்ற உளத்தூய்மையும் இருக்கின்றபோதுதான் அல்லாஹ்விடத்தில் அதற்குப் பெறுமதியும் அதற்கான வெகுமதியும் கிடைக்கும்.         பசித்து, தாகித்து, உடலியல் ரீதியான ஆசைகளைத் தணித்து கஷ்டத்துடன் நோன்பு நோற்றிருக்கும் ஒரு நோன்பாளி உளத்தூய்மையின்றி அதை நிறைவேற்றினால் அதற்கு எந்தப் பெறுமானமும் இருக்காது. அவன் பட்ட சிரமங்களுக்கு எதுவித பிரயோசனமும் இருக்காது. எனவே, கட்டாயம் 'இஹ்லாஸ்' என்ற விடயத்தை நாம் கடைப்...

றமழான் காலத்தில் நன்மைகள் செய்வது முடக்கப்பட்டுவிட்டதாக எண்ண வேண்டாம்

Image
بسم الله الرحمن الرحيم றமழான் காலத்தில்  நன்மைகள் செய்வது  முடக்கப்பட்டுவிட்டதாக எண்ண வேண்டாம்  ♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️ மௌலவி றஸ்மி மூஸா ஸலபி (MA) ரமலான் காலம் என்றால் முஸ்லிம் சமூகம் அமல்கள் செய்யும் ஆர்வத்தில் குதுகலமாகவும் கலகலப்பாகவும் பள்ளிவாயில்களில் வணக்க வழிபாடுகளுடன் காலத்தை கழிக்கும் ஒரு சூழல் பொதுவாக உலகம் பூராகவும் காணப்படுவது இயல்பானது. எனினும் இலங்கையில் ஏற்பட்டுள்ள கொறோணா  தொடர்பான இவ் அசாதாரண சூழ்நிலை எமது முழுமூச்சான செயற்பாடுகளை முடக்கியுள்ளது என்பது் உண்மைதான். இந்தவகையில் எதிர் வரக்கூடிய ரமலான் நமக்கு ஒரு சவாலாக இருக்கப்போகிறது என்பது ஓரளவு கவலையான விடயம்தான். இதே போன்று கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை சாதாரணமான ஒரு முடக்கத்தை செய்திருந்தாலும் தற்போது ஏற்பட்டிருப்பது இலங்கையில் மாத்திரமல்ல உலகளாவிய ரீதியில் ஒரு ஸ்தம்பித நிலையை அடைய செய்துள்ளது. இது ஓர் புதிய அனுபவமே. அனைவரும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் .இது இறைவனுடைய ஏற்பாடு .இந்த வகையில் இந்த ரமலானை எப்படி கழிக்கலாம் என்பதற்கான ச...