றமழான் காலத்தில் நன்மைகள் செய்வது முடக்கப்பட்டுவிட்டதாக எண்ண வேண்டாம்


بسم الله الرحمن الرحيم

றமழான் காலத்தில்  நன்மைகள் செய்வது  முடக்கப்பட்டுவிட்டதாக எண்ண வேண்டாம் 
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️

மௌலவி றஸ்மி மூஸா ஸலபி (MA)

ரமலான் காலம் என்றால் முஸ்லிம் சமூகம் அமல்கள் செய்யும் ஆர்வத்தில் குதுகலமாகவும் கலகலப்பாகவும் பள்ளிவாயில்களில் வணக்க வழிபாடுகளுடன் காலத்தை கழிக்கும் ஒரு சூழல் பொதுவாக உலகம் பூராகவும் காணப்படுவது இயல்பானது.

எனினும் இலங்கையில் ஏற்பட்டுள்ள கொறோணா  தொடர்பான இவ் அசாதாரண சூழ்நிலை எமது முழுமூச்சான செயற்பாடுகளை முடக்கியுள்ளது என்பது் உண்மைதான். இந்தவகையில் எதிர் வரக்கூடிய ரமலான் நமக்கு ஒரு சவாலாக இருக்கப்போகிறது என்பது ஓரளவு கவலையான விடயம்தான்.

இதே போன்று கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை சாதாரணமான ஒரு முடக்கத்தை செய்திருந்தாலும் தற்போது ஏற்பட்டிருப்பது இலங்கையில் மாத்திரமல்ல உலகளாவிய ரீதியில் ஒரு ஸ்தம்பித நிலையை அடைய செய்துள்ளது. இது ஓர் புதிய அனுபவமே. அனைவரும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் .இது இறைவனுடைய ஏற்பாடு .இந்த வகையில் இந்த ரமலானை எப்படி கழிக்கலாம் என்பதற்கான சில ஆலோசனைகளை முன்வைக்கிறேன்

தராவிஹ் தொழுகை
◾◾◾◾◾◾◾◾

ரமலான் காலத்தை உயிரோட்டம் உள்ளதாக முஸ்லிம் சமூகத்திற்கு வெளிக்காட்டும்  ஒரு தொழுகைதான் இந்த தராவீஹ் என்று சொல்லக்கூடிய இரவுத் தொழுகை. தற்போது பள்ளி வாயில்களில் ஐவேளை தொழக்கூடாது என்று விடப்பட்டுள்ள கட்டளை எதிர் வரக்கூடிய ரமலானில் இந்த தொழுகையையும் பாதிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.இன்னும் ஓரிரு நாட்கள்தான் உள்ளது

 எனினும் ஒரு முஸ்லிமைப் பொறுத்த வரைக்கும் ஒரு அடிப்படையை விளங்கிக் கொள்ள வேண்டும் இவ்வாறான முடக்கங்கள் இஸ்லாம் அருளப்பட்ட காலத்திலிருந்து இன்று வரைக்கும் ஏற்படுத்தப்பட்டுக்  கொண்டுதான் இருக்கிறது. இனிவரும் காலங்களிலும்  ஏற்படும் இதுதான் எங்களுடைய அடிப்படை நம்பிக்கை.இத்தகைய ஓர் உலக வாழ்க்கையே் இனி நாம் சந்திக்க தயாராக உள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டு.என்னுடைய யூகத்தின் அடிப்படையில் கொறோணா வைரஸ் சுமூகமாக இன்னும் ஒரு ஆண்டாவது எடுக்கலாம்.அல்லாஹ் போதுமானவன்

எனவே குறிப்பாக சொல்வதானால் இந்த தராவீஹ் தொழுகை என்பது நாம் பள்ளிவாயல்களில் தொழுது வந்தாலும் உண்மையில் இதனுடைய அடிப்படை தொழுகையின் சட்டம் வீட்டில் தொழுவதுதான் ஏனெனில் நபி ஸல் அவர்கள் ஒருபோதும் இந்த தொழுகையை  ஜமாஅத்தாக பள்ளிவாசலில்  தொழு ஏற்பாடு  செய்யவில்லை.எனினும் பின்னர் இவை பள்ளிவாயலில் சகாபாக்கள் காலத்தில் சட்டமாக ஆக்கப்பட்டது.
(சூறா சஜதா 16 உட்பட பல குர்ஆன் வசனங்கள் நடு்இரவில் தொழுவது பற்றியும் ,மேலும் ஹதீஸ்கள் அல்லாஹ் நடுவானில் இவ்வாறு எழும்பித் தொழுபவர்களுடைய பிராரத்தனைகளை அங்கீகரிப்பது தொடர்ரபாகவும் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.)

 ஆயினும்   இதை நமது  முஸ்லிம் சமுகம் இசாவிற்குப் பின் தொழுவதை  தராவிஹ் என்றும் இரவு நேரத்தில் எழும்பி தொழுவதை தகஜ்ஜத் என்றும் பிழையாக வியாக்கியானம் செய்த காரணத்தினால்தான் தராவீஹ் தொழுகையை பள்ளிவாசலில் தொழ கிடைக்கவில்லையே என்று ஆதங்கப் படுவதற்கு அடிப்படை காரணமாகும்.

 எனினும் இந்த தொழுகையின்  அடிப்படை நடு இரவில் எழும்பி வீடுகளில் தொழிவதுதான்  என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொண்டால் ஒவ்வொருவரும் இரவு நேரங்களில் எழும்பி தொழுது அல்லாஹ்விடத்தில் நமக்கு ஏற்பட்டிருக்கிற சோதனைகளுக்கு எதிராக பிரார்த்திப்பதுடன் வீடுகளை ஒரு இன்பகரமான , மகிழ்ச்சிகரமான ஒரு சூழலை உருவாக்குவதற்கும் ஒரு வாய்ப்பாக அமையும்.இல்லாவிடினும் வீடுகளில் குடும்பமாக வழமையாக பள்ளிவாயலில் தொழும் நேரத்தை கருத்திற் கொண்டு  ஜமாத்தாக சேர்ந்து தொழலாம்.அதுவும் அனுமதிக்கப்பட்டதுதான்

இப்தார் ஏற்பாடுகள்
◾◾◾◾◾◾◾◾◾

 இதேபோன்று நோன்பாளிகளுக்கு நோன்பு திறக்க  ஏற்பாடு செய்யும் இப்தார் நிகழ்வு கூட இம்முறை தடைப்படலாம் .இப்தார் ஏற்பாடு செய்வது ஒரு சவாலான ஒரு காரியம் அல்ல ஏனெனில் அது ஒரு நபி வழியாக இருந்தாலும் இந்த நன்மையை நாம் இப்படியும் எடுத்துக் கொள்ளலாம் அதாவது கூடியிருந்து இந்த இப்தார் நிகழ்வுகளை செய்ய முடியாத ஒரு சூழ்நிலை  தென்படும் போது அந்த இஃப்தார் தர்மங்களை உரிய ஏற்பாடுகளை செய்து் நமது அண்டை வீட்டார் ,ஏழை எளியோர் அல்லது உறவினர்களுக்கு  அதனை அனுப்பி வைப்போமாக இருந்தாலும் நன்மை என்ற அடிப்படையில் நமக்கு சமனாகத்தான் கிடைக்கும். எனவே அதுவும்   சமூக மட்டத்தில் ஒரு சந்தோசத்தை ஏற்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும்.பகிரங்கமாகத்தான் செய்யவேண்டும் என்பது இப்தார் செய்வதன் நோக்கமல்ல .ஏதோ ஒரு
 வகையில் நோன்பு திறக்க செய்ய ஏற்பாடு செய்தல் அது் நன்மையாக அமையும்.

பெருநாள் தொழுகை
◾◾◾◾◾◾◾◾◾◾

இதேபோன்று சிலவேளை இப்போது இருக்கின்ற கால சூழ்நிலைக்கு நாம் யூகித்து சொல்லமுடியாவிட்டாலும் பெருநாள் தொழுகையும் இப்படித்தான் வந்து அமையப்போகிறது இருந்தாலும் வீடுகளில் இந்த பெருநாள் தொழுகையை தொழுவதற்கான மார்க்க சட்டம் இல்லாவிட்டாலும் நிர்ப்பந்தம் என்ற அடிப்படையில் இந்த தொழுகையையும் நாம் தவறி விட்டால் அதைப்பற்றி நாம் அலட்டிக் கொள்ளத்  தேவையில்லை எனவே அன்றைய தினம் நாம் வீடுகளில் இருக்கின்ற உறவினர்களைக் கொண்டு சந்தோஷமாக சமைத்து சாப்பிட்டு  பிள்ளைகளுடன் இதுவும் ஒரு சந்தோஷமான முறையில் பெருநாளை கொண்டாடுவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும்.

எனவே ஒரு முஸ்லிம் ஒருபோதும் அமல்களால் முடக்கப்பட்டவன் அல்ல.அல்லாஹ் நம் அனைவரையும் ஏற்றுக் கொள்வானாக

Comments

Popular posts from this blog

அல் குர்ஆன் சுன்ன அடிப்படையில் கேள்வி பதில் தொகுப்புகள்

ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-3

அகீதாவின் சில அடிப்படை விடயங்கள்