ரமழானின் பூரண பயனைப் பெற சில வழிகாட்டல்கள்!!!
بسم الله الرحمن الرحيم ரமழானின் பூரண பயனைப் பெற சில வழிகாட்டல்கள் !!! அஷ்ஷெய்க் N.P.ஜுனைத் (காஸிமி,மதனி) [ விரிவுரையாளர் - தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீடம். தலைவர் - வவுனியா மாவட்ட ஜம்இய்யதுல் உலமா ] 01) உளத்தூய்மையோடு வணக்க வழிபாடுகளில் ஈடுபடல்: வணக்க வழிபாடுகளின் உயிர்நாடி 'இஹ்லாஸ்' எனும் உளத்தூய்மையாகும். நாம் செய்யும் வணக்க வழிபாடுகள் அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இது ஒரு முக்கிய நிபந்தனை என்பது இஸ்லாத்தின் கண்டிப்பான கட்டளையாகும். நற்காரியங்களைச் செய்கின்றபோது தூய்மையான எண்ணமும், அல்லாஹ்வுக்காக மட்டும் செய்கிறேன் என்ற உளத்தூய்மையும் இருக்கின்றபோதுதான் அல்லாஹ்விடத்தில் அதற்குப் பெறுமதியும் அதற்கான வெகுமதியும் கிடைக்கும். பசித்து, தாகித்து, உடலியல் ரீதியான ஆசைகளைத் தணித்து கஷ்டத்துடன் நோன்பு நோற்றிருக்கும் ஒரு நோன்பாளி உளத்தூய்மையின்றி அதை நிறைவேற்றினால் அதற்கு எந்தப் பெறுமானமும் இருக்காது. அவன் பட்ட சிரமங்களுக்கு எதுவித பிரயோசனமும் இருக்காது. எனவே, கட்டாயம் 'இஹ்லாஸ்' என்ற விடயத்தை நாம் கடைப்...