இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்.
 بسم الله الرحمن الرحيم இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம். ரமழான் காலங்களில் நாம் இரவுத் தொழுகையில் அதிக அக்கறை செலுத்துகின்றோம். ரமழான் காலத்தில் இரவுத் தொழுகை அதிக அழுத்தம் கொடுத்துப் பேசப்பட்டுள்ளது என்பது உண்மையே! ஆனால், கியாமுல்லைல் எனும் இரவுத் தொழுகை ரமழானுக்கு மட்டும் உரியதன்று. அது பொதுவானதொரு இபாதத்தாகும். ஆன்மீகப் பக்குவத்தைப் பலப்படுத்தும் முக்கிய இந்த இபாதத்தை ரமழானுடன் நிறுத்திக் கொள்வதால் நாம் அதிக இழப்புக்களைச் சந்திக்க நேரிடுகின்றது. 01. ரஹ்மானின் அடியார்கள்: ரஹ்மானின் அடியார்கள் எனும் சிறப்புத் தகுதியை இதனால் இழக்க நேரிடுகின்றது. ‘அர்ரஹ்மானின் அடியார்கள்தான் பூமியில் பணிவுடன் நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களுடன் தர்க்கித்தால், ‘ஸலாம்’ எனக் கூறுவார்கள்.’ ‘மேலும், அவர்கள் தமது இரட்சகனுக்கு சுஜூது செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் இரவைக் கழிப்பார்கள்.’ (25:63-64) 02. பயபக்தியாளர்கள் எனும் பட்டம் பறிபோகும்: இரவுத் தொழுகையை விடுவதால் முத்தகீன்கள் பட்டியலில் இடம் கிடைக்காம...