உண்மையான இறைவன் யார்?
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்).
உண்மையான இறைவன் யார்?
அன்பார்ந்த நண்பர்களே! இதை படிக்கக் கூடிய நாம் உண்மையான இறைவன் யார் என்பதை தெரிந்து கொள்வது அவசியம். ஏன்னென்றால் நாம் எதையெல்லாம் வணங்கி கொண்டு இருக்கிறோம் என்பதை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
நாம் குழந்தையாக இருக்கும் பொழுது நாம் தந்தையார் என்பதை நம்மை பெற்றேதுத்த தாய்தான் கூறுவாள். அப்பொழுதுதான் தெரியும் நாம் தந்தையார் என்பது. அதே போன்று நம்மை படைத்த இறைவன் யார் என்பதை நம்மை படைத்த இறைவன் தான் கூற வேண்டும். அதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது நம்மை படைத்த இறைவன் யார்?சற்று சிந்திக்க வேண்டும்.
நாத்திகர்கள் கூறுவது போன்று எல்லாமே தானாக உறுவானதா? அல்லது யாராவது உருவாக்கினார்களா? என்பதை சிந்திக்க கடமைபட்டியிருக்கின்றோம். எல்லாமே தானாக உருவாதது என்று கூறுவது சரியா? தவறா?
நண்பர்களே சற்று உங்கள் கண்களை நன்றாக திறந்து பாருங்கள் வானங்களையும், பூமிகளையும் பாருங்கள் அதில் எதாவது ஒரு குறையே உங்களால் காண முடியுமா?
இப்படிப்பட்டப் படைப்புகள் எப்படி தானாக உருவாகி இருக்க முடியும்? சிந்தியுங்கள் இந்த பிரபஞ்சங்கள் மற்றும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரினங்கள் இன்னும் திட, திரவ , வாயு பொருட்களை படைத்தது யார்? என்பதை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்? நண்பர்களே.
நாம் எதற்க்காக படைக்கபட்டோம், நாம் படைக்கப்பட்டதின் நோக்கம் என்ன? என்பதை நம்மை படைத்த இறைவன் தான் கூற வேண்டும், அதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது நம்மை படைத்த இறைவன் கூறுகின்றான். அவனுடைய இறுதி வேதத்தில் ,
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ
இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.
(அல்குர்ஆன் : 51:56)
இறைவன் கூறுகின்றான் என்னை வணங்குவதற்க்காக தான் மனிதனை படைத்தேன் என்று அப்படி கூறியிருக்க நம்மை படைத்த உண்மையான இறைவனை தான் நாம் அனைவரும் வணங்க வேண்டும். நம்மை படைத்த உண்மையான இறைவன் யார்? இறைவன் கூறுகின்றான் அவனுடையே இறுதி வேதத்தில்,
قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ
(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
(அல்குர்ஆன் : 112:1)
اَللّٰهُ الصَّمَدُ
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
(அல்குர்ஆன் : 112:2)
لَمْ يَلِدْ ۙ وَلَمْ يُوْلَدْ ۙ
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
(அல்குர்ஆன் : 112:3)
وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
(அல்குர்ஆன் : 112:4)
மேலே உள்ள வசனத்தின் அடிப்படையில் பார்க்கும் பொழுது நம்மை படைத்த இறைவன் ஒருவனாக தான் இருக்க முடியும்.
ஒன்றுக்கு மேற்ப்பட்ட இறைவன் இருந்தால் என்ன நடக்கும் என்பதை சற்று சிந்திக்க வேண்டும். நண்பர்களே, அப்படி ஒன்றுக்கு மேற்ப்பட்ட இறைவன் இருந்தால் இந்த உலகம் எப்படி இருக்கும் என்பதை நான் உங்கள் சிந்தனைக்கு கொண்டு வருகிறேன்.
சற்று சிந்தியுங்கள் உதாரணத்திற்க்கு ஒன்றுக்கு மேற்ப்பட்ட இறைவன் இருக்கிறான் என்பதை வைத்துக் கொண்டால் அதன் அடிப்படையில் பார்த்தால் ஒருவர் ஒரு இறைவனிடம் வேண்டுவார் இன்று மழை பொழிய வேண்டும் என்று. மற்றோரு நபர் வேறோரு இறைவனிடம் வேண்டுவார் இன்று வெயில் அடிக்க வேண்டும் என்று. இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு இறைவனிடம் வேண்டினால் இந்த உலகம் எப்படி இருக்கும் என்பதை சற்று சிந்தித்து பாருங்கள்.
ஒரு இறைவன் மழை பொழிய வேண்டும் என்று கூறுவார். இல்லை இல்லை இன்று என்னுடைய பக்தர் வெயில் அடிக்க வேண்டும் என்று வேண்டினார் அதனால் இன்று வெயில் தான் அடிக்க வேண்டும் என்று இன்னொரு இறைவன் கூறுவார். இப்படி ஒவ்வொரு இறைவனும் தனக்குல் சண்டையிட்டுக் கொண்டால் இந்த உலகத்தை யார் பார்த்துக் கொள்வது. சற்று சிந்தியுங்கள்.
அழிப்பதற்க்கு ஒரு கடவுள், பாதுகாப்பதற்க்கு ஒரு கடவுள், படைப்பதற்க்கு ஒரு கடவுள் என்று வைத்துக் கொண்டால் அதை எப்படி ஏற்றுக் கொள்வது. அழிக்கும் கடவுளால் பாதுகாக்க முடியாது, பாதுகாக்கும் கடவுளால் அழிக்க முடியாது. படைக்கும் கடவுளால் அழிக்க முடியாது பாதுகாக்க முடியாது என்று இருந்தால் ஒரு சக்தி இருந்தால் ஒரு சக்தி இல்லை ஒரு தன்மை இருந்தால் ஒரு தன்மை இல்லை இப்படி குறைகள் உள்ள கடவுள்கள் நாம் வணங்குவதற்க்கு தகுதியான உண்மையான இறைவனாக இருக்க முடியுமா?
இறைவன் என்றால் அவன் ஒருவனாக தான் இருக்க முடியும். அந்த ஒருவனுக்கு தான் எல்லா சக்தியும் இருக்க முடியும். படைப்பது, காப்பது, அழிப்பது, உணவளிப்பது போன்ற அனைத்து சக்திகளும் அந்த ஒரு இறைவனுக்கு தான் இருக்க வேண்டும்.
இதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது இறைவன் ஒருவனாக தான் இருக்க முடியும்.
இறைவனுக்கு எந்த ஒரு தேவையும் இருக்க கூடாது. மனிதனுக்கு தான் தேவைகள் இருக்கும். எந்த தேவைகளுக்கு அப்பாற்பட்டவன் தான் உண்மையான இறைவனாக இருக்க முடியும்.
இறைவனுக்கு பெற்றோற்கள் இருக்க முடியாது பிள்ளைகளும் இருக்க முடியாது.அப்படி பெற்றோர்கள் பிள்ளைகள் இருந்தால் அவன் உண்மையான இறைவனாக இருக்க முடியாது. அதுவும் ஒரு படைப்பாக தான் கருதப்படும். படைப்புகள் வணங்குவதற்க்கு தகுதியேற்றவை.இறைவனுக்கு பிறப்பு என்று ஒன்று வைத்துக் கொண்டால் இறைவன் பிறப்பதற்க்கு முன்னால் இந்த உலகத்தை யார் பாதுக்கத்தால் என்ற ஒரு கேள்வி வரக்கூடும்.
எப்பொழுது இறைவன் தேவையற்றவனாக இருக்கின்றானோ அவனுக்கு பெற்றோர்கள், பிள்ளைகள், மனைவி மக்கள் போன்றவை இருக்க முடியாது. இவைகள் எதுவுமே இல்லாதவன் தான் இறைவனாக இருக்க முடியும்.
இறைவனுக்கு நிகராக யாரும் இருக்க முடியாது.அப்படி இருந்தால் அவன் இறைவனாக இருக்க முடியாது. அழியக்கூடிய எந்த ஒரு பொருட்களும் இறைவனாக இருக்க முடியாது. அது எதுவாக இருந்தாலும் சரியே!
இந்த தகுதிகள் எல்லாம் யாரிடம் இருக்கின்றனவோ அவன் தான் இறைவனாக இருக்க முடியும். இறைவனை யாரும் இந்த உலகில் பார்த்தது கிடையாது. இறைவன் கற்ப்பனைக்கு எல்லாம் அப்பாற்பட்டவன். அவன் தான் அல்லாஹ்.
அல்லாஹ் என்ற அரபு சொல்லுக்கு வணங்குவதற்க்கு தகுதியான இறைவன் என்று பொருள்.
இதை மனிதர்களிடம் கூறுவதற்க்காக அந்த அந்த காலகட்டத்தில் அல்லாஹ் மனிதர்களிடமிருந்து ஒருவரை தேர்வு செய்து இந்த செய்தியே மனிதர்களிடம் கூறுவதற்க்கு அவரை தன்னுடைய தூதராக ஆக்குவான் இப்படி தான் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளுக்கு பல இறைதூதர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். அந்த இறைதூதர்கள் அனைவரும் சொன்ன தகவல் ஒன்றே அது தான் இறைவன் ஒருவனே! நான் இறைவனின் தூதர் ஆவேன். என்ற செய்தியேதான் உலகில் அனைத்து பகுதிகளுக்கு இறைவனால் தேர்வு செய்யப்பட்ட இறைதூதர்கள் சொன்னார்கள்.
அதன் அடிப்படையில் இறைவனால் அனுப்பப்பட்ட இறுதி இறைதூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தான். இவர்தான் அகில உலக மக்களுக்கும் இறைவனால் தேர்வு செய்யப்பட்ட இறுதி இறைதூதர் ஆவார். இப்பொழுது உலகில் உள்ள அனைத்து மக்களும் இந்த இறுதி இறைதூதரை தான் பின்பற்ற வேண்டும். இந்த இறுதி இறைதூதர் மூலமாக இறைவனால் அருளப்பெற்றதுதான் இறுதி வேதமான அல்குர்ஆன்.
இந்த இறுதி இறைதூதர் சொன்ன செய்தியின் அடிப்படையில் நமது வாழ்க்கையே அமைத்துக் கொண்டால்தான் இறப்பிற்க்குப் பின் உள்ள நிரந்தர வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். அந்த வாழ்க்கைதான் மரணமே இல்லாத வாழ்க்கை. யார் இந்த இறுதி இறைதூதர் சொன்ன செய்தியின் அடிப்படையில் தன்னுடைய வாழ்க்கையே அமைத்துக் கொண்டு வாழ்வார்களோ அவர்கள் தான் இறப்பிற்க்கு பின் உள்ள மரணமே இல்லாத வாழ்க்கையில் சொர்க்கம் செல்வார்கள். யார் இந்த இறுதி இறைதூதரை ஏற்றுக்கொள்ளாமல் இறைவனுக்கு இணை கற்பிக்கின்றார்களோ (படைத்த இறைவனுக்கு பதிலாக வேறோன்றை வணங்குவது) அவர்கள் நிரந்தர நரகம் தான் செல்வார்கள்.
இதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் என்பது இஸ்லாம் மட்டும் தான்.
யார் ஒருவர் இறைவன் ஒருவன் என்பதை ஏற்றுக் கொண்து அவனுடையே இறுதிதூதரையும் ஏற்றுக் கொண்து தன்னுடையே வாழ்க்கையே அதன்படி அமைத்து கொண்டு இஸ்லாத்தை தன்னுடைய மார்க்கமாக ஆக்கி கொள்கின்றார்களோ அவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள். அவர்கள் தான் இறப்பிற்க்கு பின் உள்ள நிரந்தர வாழ்க்கையில் சொர்க்கம் செல்வார்கள்.
இந்த செய்தியே நிராகரித்தவர்கள் நிரந்தர நரகம் தான் செல்வார்கள். அது கொழுந்து விட்டு எரியும் நெருப்பு அங்கு வேதனைகளும் அதிகம்,தண்டனைகளும் அதிகம்.
வணக்கத்திற்க்கு தகுதியான இறைவன் அல்லாஹ் என்று அவனுடையே இறுதி இறைதூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் என்று யார் ஏற்றுக் கொண்டு சாட்சி கூறுகின்றார்களோ அவர்கள் தான் மூஸ்லிம்கள். அவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள்.
இதைப் படிக்கக் கூடிய நண்பர்களே நான் உங்கள் அனைவரையும் இஸ்லாத்தை நோக்கி வாருங்கள் என்று அழைப்பு விடுகின்றேன்.
இஸ்லாத்தை பற்றி இன்னும் முழுமையாக தெரிந்துக் கொள்ள அல்லது இலவசமாக அல்குர்ஆன் பெற கீழே உள் எண்களை தொடர்பு கொள்ளவும்.
Islaam For All Peoples.
What's app number:90923 71248.
pH number:90923 71248 ,98412 34514,
98944 42844 .
Comments
Post a Comment