இஹ்வானிஸ உளநோயின் கூறுகெட்ட பண்புகள் !! தொடர் -(1)

                  

               بسم الله الرحمن الرحيم
இஹ்வானிஸ உளநோயின் கூறுகெட்ட பண்புகள் !! தொடர் -(1)

((("ஒரு தாகூதை (வரம்பு மீறும் ஆட்சியாளனை) எதிர்த்து, இன்னொரு தாகூதை ஆதரித்து, அணுசரித்துச் செல்வது போல் அரசியல் அயோக்கியத்தனம் வேறு எதுவும் கிடையாது")))
"அபூ ஸைத் அல் அதரி"

வஹாபிஸ உளவியலின் மூலக்கூறுகள் தொடர்பில் அப்துல் ஹலீம் (நளீமி), ஸகிஃபவ்ஸ் (நளீமி) ஆகிய இருவரும் சேர்ந்து ஒரு ஆக்கத்தை தற்போது வெளியிட்டுள்ளனர், நல்லது!!

கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல்லெறிவது போல்... குடிசையில் அமர்ந்து கொண்டு பெட்ரோல் குண்டு தயாரிப்பது போல் "வஹாபிஸ‌ம்" என்றால் என்ன என்பதற்கான தெளிவான வரையறை இன்றி  எழுதப்பட்ட கட்டுரையை நாம் அக்குவேறு ஆணிவேறாக பகுப்பாய்ந்து அதில் உள்ள நகைமுரண்களையும் நழுவல்தன்மைகளையும் அடையாளங்காண, காட்ட  வேண்டுமல்லவா?

இந்தவகையில் கட்டுரையின் முதல் பந்தி மூலக்கூறுகளின் முக்கியத்துவம்!! பற்றி விபரிக்கின்றது. கட்டுமே.. அதில் ஒன்றும் தவறு கிடையாது.

இரண்டாம் பந்தியோ "சமீப காலமாக சர்வதேச  வஹ்ஹாபிஸ சிந்தனைப் பள்ளியின் செயற்பாடுகள் .............. சிந்தனைப் பள்ளியின் உளவியலை கட்டமைத்திருக்கும் மூலக் கூறுகள் பற்றிய உரையாடலொன்றை துவங்க வேண்டிய நிர்ப்பந்த நிலையை ஏற்படுத்தியிருக்கிறன" எனத் தொடர்கின்றது.

"வஹாபிஸ சிந்தனைப்பள்ளி என்றால் என்ன? அதன் அன்றைய, தற்கால பிரதிபலிப்பாளர்கள் யார்? அப்பள்ளியின் அடிப்படைக் கோட்பாடுகள், பிரதான செயற்பாடுகள் யாவை? என்பவை போன்ற எந்த குறைந்த பட்ச சுருக்க அறிவியல் அறிமுகமும் இன்றி "தொழதொழப்பாக" கட்டுரையாளர்கள் எழுதியிருக்கிறார்கள்.!!

இது, தங்களுக்கு வேண்டாதவர்களை அதற்குள் நுழைத்துக் கொள்வதற்கும் வேண்டியவர்களை அதற்கு வெளியிலாக்கிக் கொள்வதற்கும் வசதியாகத்தான் என நாம் கூறாவிட்டாலும் வாசகர்களின் புரிதல்களில் இத் "தொழதொழப்பு" குழப்பத்தையும் மயக்கத்தையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

காரனம் "வஹாபிஸம்" என்ற பதம் வழிகேடர்கள் தங்கள் வழிகெட்ட கொள்கைகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தங்களுக்கு மாற்றமான கொள்கையில் இருப்பவர்களை சமூகமட்டத்தில் தவறானவர்களாகச் சித்தரிக்க எய்துவிடப்படும் அம்புகளில் ஒன்று என்றால் மிகையாகாது.

கபுறு வணங்கிகள், தப்லீக் ஜமாஅத்தை வஹாபிகள் என்பதும் தப்லீக் ஜமாஅத், தௌஹீது வாதிகள் மற்றும் ஜமாஅதே இஸ்லாமி மற்றும் இஹ்வானிஸவாதிகளை வஹாபிகள் என்றழைப்பதும் சீஆக் காபிர்கள் தங்கள் மத ,அற்றும் அரசியல் செயற்பாடுகளுக்கு எதிரானவர்களுக்கு வஹாபிப் பட்டம் சூட்டுவதும் அண்றாட நிகழ்வுகளில் ஒன்றாகும்.

இந்த வகையில், இதே செயலை  தற்போது இஹ்வானிகளும் செய்ய முற்பட்டிருப்பதானது  தங்கள் கருத்துகளுக்கும் நிலைப்பாடுகளுக்கும் மாற்றமானவர்களுக்குச் சூட்ட முணைவதானது தங்களது இயக்க வங்குரோத்துத் தனத்தை மறைத்து "வஹாபிய வெறுப்புணர்வு" பரவலாக உள்ள சமூகத்தில் தங்களுக்கு மாற்றமானவர்களை சமூக எதிரிகளாக எளிதில் சித்தரித்து விடலாம் என்ற குயுக்தியின், குறுக்கு வழியின் வெளிப்பாடோ என சிந்திக்க வழிசமைக்கின்றது.
சரி, வஹாபிஸம் என்று கூப்பாடு போட, மூலக் கூறுகள் என்று மூக்கால் அழ அப்படி என்ன அடங்காத நிர்ப்பந்தமும் காலத்தில் கட்டாயமும் தற்போது ஏற்பட்டு விட்டது?

அதை கட்டுரையாளர்களே கீழ் வருமாறு விளக்குகிறார்கள்.

"சர்வதேச ரீதியாக அரசபீடங்களது அரசியல் தெரிவுகளை வலிந்து சரிகாணுவதற்கு எடுக்கும் பிரயத்தனங்கள், தெளிவாகவே அடக்குமுறை பிரியோகிக்கப்படுகிறது என்று தெரிந்தும் வெளிப்படுத்தும் கடும் மௌனம், அப்படி உலகத்தில் ஒன்றுமே நடக்காது போல் ஃபிக்ஹு மஸ்அலாக்களில் தாங்கள் பிஸி எனக் காட்டிக் கொள்வதற்கு எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் என்பன ஒரு புறமிருக்க,......."

அதுதானே பார்த்தோம்!! சோழியன் குடுமி சும்மா ஆடுமா? சுளகு தனக்குத் தனக்கு என்றால் படக்குப் படக்கு என்று புடைக்காமல் இருக்குமா??

அன்மையில் சண்டாள, சதிகார சஊதி அரேபியா நாட்டில் உலமாக்ள் என்ற போர்வையில் முக்காடு போட்டுக் கொண்டிருந்த இஹ்வானிகள் பலரையும் சஊதிய அரசு சிறையில் பிடித்துத் தள்ளியது அல்லவா? அதை ஆதாரிப்பதும் இஹ்வானிகள் மீது பிரயோகிக்கப்படும் "அடக்குமுறை" தொடர்பில் மௌனம் சாதிப்பதும் தான் வஹாபிஸ செயற்பாடாம்!!!

அடேங்கப்பா!!  என்ன ஒரு அறிவு!! என்ன ஒரு கண்டுபிடிப்பு!!

சஊதி அரசின் இஸ்லாமிய விரோத, முஸ்லிம் குரோத செயற்பாடு இன்று நேற்றா ஆரம்பித்தது? காலாகாலமாக நடந்து வரும் அக்கிரமம் தானே..

ஏலவே, பல்வேறு உன்மையான இஸ்லாமிய அறிஞர் பெருமக்களை சஊதியின் சண்டாள அரசு கைதுகள் பல செய்திருந்தும், பல அறிஞர்பெருமக்களை அநியாயமாக தூக்கிலிட்டுக் கொலைகள் செய்திருந்ததும் தற்போது கட்டுரையாளர்கள் அடக்கு முறைக்கு ஆட்பட்டதாக ரத்தக் கண்ணீர் வடிக்கும் இந்த இஹ்வானிய கள்ள உலமாக்கள் சஊதி அரசுக்கு எதிராக ஒரு வார்த்தை தானும் பேசினார்களா?
இல்லை குறைந்த பட்சம் கட்டுரையாளகர்கள் விமர்சிப்பது போல் "கடும் மௌனம்" மாவது சாதித்தார்களா?

இல்லையே.. இதை விடவும் ஒரு படி மேலே போய்.... இல்லை.. இல்லை... கீழே இறங்கிவந்து அரசாங்கத்தின் தாளத்துக்கு ஏற்ப மேளம் அடைக்கும் கூத்தாடிகளாக அல்லவா செயற்பட்டார்கள்.
((பார்க்க :படம் 1,2))

இமாமுனா இப்னு தைமிய்யாஹ் (றஹ்) அவர்கள் சொல்வது போல் "அநியாயக்காரனுக்கு உதவி செய்பவன் அவ்வநியாயக்காரனாலேயே ஆக்கினைக்கு ஆளாவான்" என்பது இறை நியதி.

இஹ்வானிய போலி உலமாக்கள் கைது செய்யப்பட்டதும் யாரும் மௌனம் காக்கக் கூடாது அப்படிச் செய்தால் அது வஹாபிஸ சிந்தனையின் வெளிப்பாடு என்றால் ஏலவே இப்போது கைது செய்யப்படவர்கள் அரசாங்கதின் அநீதிகளை நியாயப்படுத்தியதும் சரி கண்டதும் எந்த சிந்தனைப் பள்ளியின் வெளிப்பாடு??!

அப்போது இஹ்வானிகளுக்கு இனித்த சஊதி அரேபியா இப்போது இஹ்வான்களுக்குக் கசப்பதன் மர்மம் என்ன??

சஊதி அரசாங்கத்தின் இஸ்லாமிய விரோத கைதுகள் தங்கள் குரல்வளைகளைப் பிடிக்கும் போது மாத்திரம் கூக்குரல் இடுகின்றார்கள் என்றால் இஹ்வானிஸ வாதிகள்... மண்ணிக்கவும் வியாதிகள் எந்தளவுக்குக் கேடு கெட்ட அரசியல் செய்கின்றார்கள் எனப் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இதில் கெட்ட கேட்டுக்கு "வஹாபிஸப் பட்டம் வேறு!!
இந்த விடயத்தில் இஹ்வானிகள் எந்தளவுக்கு, இரட்டை நிலைப்பாடு கொண்டவர்களாக, நயவஞ்சகத்தனத்துடன் நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு இன்னுமொரு உதாரனத்தை நோக்குவோம்.

இஹானிஸ சாக்கடையில் ஊறிக் கிடக்கும் ஹமாஸ் இயக்கம் தனது ஆட்சிப் பிராந்தியத்தில் பல்வேறு உலமாக்களையும் சகோதரர்களையும் தங்கள் நிலைப்பாடுகளகுக்கு மாற்றமாக நடந்தார்கள் என்ற ஒரே காரனத்திற்காக கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.

https://www.google.lk/search?dcr=0&source=hp&q=%D8%B3%D9%84%D9%81%D9%8A%D9%88%D9%86+%D9%81%D9%8A+%D8%B3%D8%AC%D9%88%D9%86+%D8%AD%D9%85%D8%A7%D8%B3&oq=%D8%B3%D9%84%D9%81%D9%8A%D9%88%D9%86+%D9%81%D9%8A+%D8%B3%D8%AC%D9%88%D9%86+%D8%AD%D9%85%D8%A7%D8%B3&gs_l=psy-ab.3..33i160k1l3.8204.15799.0.16154.19.19.0.0.0.0.278.3270.0j14j4.18.0....0...1.1.64.psy-ab..1.15.2757...0j0i30k1j0i19k1j0i30i19k1j0i22i10i30k1j0i22i30k1j33i22i29i30k1.0.91VVq6_wh3Q

இதையும் தாண்டி இப்னு தைமிய்யாஹ் ஜும்மாப் பள்ளிவாயிலில் ஜும்மா தொழுகையின் போது பல பத்துக் கணக்கானவர்களை சுட்டுக் கொன்றார்கள்.
http://www.twhed.com/vb/t1146/

இதையெல்லாம், இஹ்வானிகள் எங்காவது, என்றாவது கண்டித்தார்களா? கண்டிப்பது எப்படிப் போனாலும் கள்ள மௌனம் கலைத்து தங்களது ஊடகங்களில் செய்தியாகவாவது வெளியிட்டார்களா? அல்லது இப்போது சஊதி இஹ்வானிகளுக்காக இரத்தக் கண்ணீர் வடிக்கும் கட்டுரையாளர்கள் பலஸ்தீன முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்து ஹமாஸின் இஸ்லாமிய விரோதப் போக்கை எடுத்தெழுதினார்களா?

இப்போது தங்களது இஹ்வானிகளுக்கு ஆபத்து என்றதும் வானத்துக்கும் பூமிக்கும் துள்ளிக் குதிக்கிறார்கள்..குய்யோ முறையோ எனக் கூச்சல் போடுகின்றனர்.!! இவர்கள் நயவஞ்சக ஆட்டம் ஆடிவிட்டு அவ்வாட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களகுக்கு "வஹாபிய சாயம்" பூசுகின்றனர்.

அத்துடன் "சர்வதேச ரீதியாக அரசபீடங்களது அரசியல் தெரிவுகளை வலிந்து சரிகாணுவதற்கு ....." என்று அடுத்தவர்களை எழுதியுள்ளார்கள்.

எப்படி? எப்படி??

இஸ்லாமிய விரோத எகிப்து முர்ஸியின் ஆட்சி, வட்டியும் விபச்சாரமும் சட்டபூர்வமாக்கப்பட்டு முஸ்லிம் தேசங்களை ஆக்கிரமிக்க, முஸ்லிம்களைக் கொண்றொழிக்க சிலுவைக் காபிர்களுக்கு பாரிய விமானதளங்களைக் கொண்ட துருக்கி அர்துகானின் மதசார்பின்மை  ஆட்சி ஆகியவைகளை இஹ்வானிகள் வலிந்து சரிகண்டு நியாயப்படுத்தும் அளவுக்கா சஊதி ஆதாரவாளர்கள் சஊதியின் செயல்களைச் சரி காண்கிறார்கள்.??

மேலும், ஒரு பந்திக்குள் ஒன்பது முரண்பாடுகளை எழுதும் கலையில்  இஹ்வானிகளை யாராலும் விஞ்சிவிட முடியாது.

''அப்படி உலகத்தில் ஒன்றுமே நடக்காது போல் ஃபிக்ஹு மஸ்அலாக்களில் தாங்கள் பிஸி எனக் காட்டிக் கொள்வதற்கு எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் ..."

என போகிற போக்கில் இவர்கள் ஏதோ தலை போகும் அகீதா விடயங்களில் தலை தாழ மூழ்கியிருப்பது போலவும் அடுத்தவர்கள் மட்டும் என்னவோ "பிக்ஹ் மஸ்அலாக்களில்" காலங்கடத்துவது போலவும் பிக்ஹ் மஸ்அலாக்கள் பற்றிய தங்களடம் உள்ள குறைந்த பெறுமானத்தை வெளிக்காட்டியுள்ளர்.!!

ஒரு தீமை நடக்கும் போது அதைக் கண்டிப்பதா? இல்லையா ? கண்டித்தால் அதைவிடப் பெரிய தீமை உருவாகிவிடுமா? நாட்டின் தேசிய பாதுகாப்பு சட்ட ஒழுங்கு போன்ற "மகாஸித்" களுக்குப் பாதிப்பு வருமா இல்லையா என்பது நன்மையை ஏவி தீமையை தடுப்பது தொடர்பான பிக்ஹு மஸ்அலா அல்லவா?

அல்லது எந்த மஸ்அலாவும் இஹ்வான்களோடு தொடர்பு படாத போது பிக்ஹ் மஸ்அலா வாக இருக்கும் இஹ்வான்களோடு தொடர்பு பட்டுவிட்டால் உடனே பிக்ஹ் மஸ்அலா என்ற இவர்களது எல்லையைத் தாண்டி அளப்பெரிய அகீதா மஸ்அலாவாக ஆகிவிடும் என்ற தங்களது நிலைப்பாட்டை தங்களையறியாமலேயே இங்கு பதிவு செய்து விட்டார்களா?

இப்படி கட்டுரையாளர்கள் தாங்கள் நாளாந்தம் பாடி வரும் பல்லவிக்கு மாற்றாமாக எழுதுகிறோமே என்ற சுயபிரக்ஞையின்றி எழுதித் தள்ளியது மாத்திரமின்றி தாங்கள் எந்தத் துறையில் தோணி தள்ளுகிறோம் என்ற மார்க்கப் பின்புலமும் இல்லாமல் "பிக்ஹ் மஸ்அலா" வில் பிஸியோ எனக் கேள்வியும் எழுப்பியுள்ளது நல்ல நகைச் சுவையாகும்.

அடுத்து..

\\குறித்த ஃபிக்ஹு பிரச்சினைகளில் ஏற்படும் உள்வீட்டுச் சண்டைகளில் ஒருவரை ஒருவர் பாரதூரமான ஃபத்வாக்களுக்கூடாக கலாய்த்துக் கொள்வதில் காட்டும் கடும் தீவிரம் என்பன .....\\

என கட்டுரையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

ப்பா!!
"வஹாபிய சிந்தனைப் பள்ளியின்" !! உள் வீட்டுச் சண்டைகளை சீர் செய்வதில்தான் இந்த இஹ்வானிகளுக்குத்தான் எவ்வளவு ஆர்வம்.!!. எவ்வளவு அக்கறை!!

சர்வதேச இஹ்வானியப் பள்ளியின் சிந்தனைச் சிக்கல்களையும் அதன் உட்பிரிவுகளையும் உட் பூசல்களையும் "குதுபிய்ய" , "பன்னாஇஸ" வேறுபாடுகளையும் தங்களிடம் இருந்து களைந்து கொள்ளவோ அல்லது தேசிய மட்டத்தில் ஜமாஅதே இஸ்லாமிய ஜமாஅதே ஸலாமாஇஸ அல்லது மன்ஷூரிஸ புகைச்சல்களையும் பகைச்சல்களையும் தீர்த்துக் கொள்ளவோ வக்கும் வழியும் இல்லாத இவர்கள் அடுத்த விட்டுப் பிரச்ச்ச்சனை பற்றி (நீலிக்) கண்ணீர் வடிப்பது எம்மைப் புல்லரிக்கச் செய்கிறது.
உள்ளூரில் ஓனான் பிடிக்க முடியாதவர்களுக்கு எதற்கு வெளியூரில் உடும்பு பிடிக்கும் வேலை??

அடுத்து ஒரு வேடிக்கை பாருங்களேன்.!!

\\தாம் சரி என்பதை அடுத்தவர்கள் அனைவரும் பிழை என்ற கோட்பாட்டின் மீது நிறுவியிருக்கும் வஹ்ஹாபிஸ சிந்தனைப் பள்ளியினர்,...\\

என கட்டுரையாளர்கள் கட்டுப்பாடில்லாமல் எழுதிக் கொட்டியுள்ளனர்.

ஒரு மனிதனால் கீழ் வரும் நான்கு நிலைப்பாடுகளில் ஒன்றில் தான் இருக்க முடியும்.

1. தான் சரி, எனவே அடுத்தவர்கள் பிழை
2.அடுத்தவர்கள் சரி எனவே தான் பிழை
3.தானும் சரி, அடுத்தவர்களும் சரி
3.தானும் பிழை அடுத்தவர்களும் பிழை

இதில் வஹாபிய சிந்தனைப் பள்ளி தாம் சரி என்பதை அடுத்தவர்கள் அனைவரும் பிழை என்ற கோட்பாட்டின் மீது நிறுவப்பட்டிருப்பதாக கட்டுரையாளர்கள் எந்தவித ஆதாரங்களோ நடைமுறை உதாரனங்களோ காட்டாமல் கதை சொல்கின்றனர்.

சரி, இஹ்வானிய சிந்தனைப் பள்ளி எந்தக் கோட்பாட்டின் மீது நிறுவப்பட்டுள்ளது?
அடுத்தவர்கள் சரி எனவே தான் பிழை என்ற கோட்பாட்டிலா? அல்லது தானும் சரி, அடுத்தவர்களும் சரி என்ற கோட்பாட்டிலா? அல்லது தானும் பிழை அடுத்தவர்களும் பிழை என்ற கோட்பாட்டிலா?

தானும் சரி அத்தவர்களும் சரி என்பதுதான் இஹ்வானிஸ‌க் கோட்பாடு என்றால் சரியான ஒரு விடயத்துக்கு எதற்காக இப்படி மாய்ந்து மாய்ந்து மாங்கு மாங்கென்று எழுத வேண்டும்.?

இல்லை.. தாங்கள் சரி அடுத்தவர்கள் (அதாவது வஹாபிய சிந்தனைப் பள்ளி)  பிழை என்பதனால் அல்லவா இவ்வாக்கத்தையே எழுதியுள்ளனர்.

எனவே தாங்கள் எந்த ஒரு கோட்பாட்டில் இருந்து கொண்டு கட்டுரை எழுதுகின்றோமோ அதே கோட்பாட்டை பிழை கண்டு அதை அடுத்தவர்கள் மீது ஒரு குற்றச் சாட்டாச் சொல்கிறார்கள் என்றால் ஒன்றில் இவர்கள் மிதமிஞ்சிய அறிவீனர்களாக இருக்க வேண்டும்..அல்லது தங்களது வாசகர்கள் கூமுட்டைகள் ..இது போன்ற நுணுக்கங்களைக் கவனிக்க மாட்டார்கள் என்ற அசட்டுத் தைரியத்தில் எழுதியிருக்க வேண்டும்.

 தொடர்ந்தும் கட்டுரையாளர்கள்

\\வஹாபிஸ சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவர்களளோடு பலரும் கருத்துப் பரிமாறி உன்மையை விளக்க முயற்சித்த போதும் கூட இப்பள்ளியினர் தங்கள் குறுகிய வட்டத்துக்குள் சுருங்கிக் கொண்டனர்\\

என்ற விடயத்தை நீட்டி முழக்கி எழுதியுள்ளார்கள்.

இவர்கள் சொல்லும் கருத்து எந்தளவு அப்பட்டமான பொய் என்பதற்கும் நிதர்சனமான உன்மைக்கு புறம்பான என்பதற்கும் எம்மால் சர்வதேச மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் பல சான்றுகளைச் சமர்ப்பிக்க முடியும்.

எனினும் வாசகர்களின் புரிதல்களுக்கு நெருக்கமாக உள்ள தேசிய மட்டத்திலான மூன்று ஆதாரங்களை இங்கே சமர்பிக்கின்றேன்.

இஹ்வானிய சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவர்கள்
வஹாபிஸ சிந்தனையைச் சேர்வர்கள் எனக் கருதும் மூன்று சாரார்களோடு இலங்கையில் நடந்த கருத்தாடல்களை இங்கே குறிப்பிடுகிறேன்.

1.ஜமாஅதுல் முஸ்லிமீன் என்ற அமைப்பு சரியானதான அல்லது ஜமாஅதே இஸ்லாமி சரியானதா என்ற கருத்தில் புத்தளம் ஜமாஅதுல் முஸ்லிமீன் பள்ளிவாயிலில் உமர் அலி ஹஸரத் அவர்களுக்கும் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களுக்குமிடையில் நடந்த கருத்தாடல்.

குறித்த கருத்தாடலில் ஜமாஅதே இஸ்லாமியினர் எந்தளவுக்கு ஆழ்ந்த விடயம் சார்ந்த அறிவு இன்றி இருந்தார்கள் என்பதும் உமர் அலி தரப்பினர் தங்கள் வாதத்துக்கு குர் ஆன் ஹதீஸ் என பல சான்றுகளையும் சமர்ப்பித்து எதிராளியை திக்குமுக்காடச் செய்தனர் என்பதையும் இக்கருத்தாடலின் ஒலிப்பதிவைக் கேட்பவர்கள் தீர்மாணித்துக் கொள்ளலாம்.

https://www.4shared.com/file/103288654/34ed2005/jamath_a-islami.html

2.பி ஜே மற்றும் உஸ்தாம் மன்சூர் என்பவர்களுக்கிடையே தஃவா மற்றும் மன்ஹஜ் பற்றி நடந்த கருத்தாடல்.

இதில் பீஜேயின் ஆணித்தரமான வாதங்களுக்கு தாக்குப் பிடிக்க முடியாம் உஸ்தாத் மன்ஸூர் என்வர் திக்கித் தலைகுணிந்தார் என்பதை இக்கருத்தாடலின் ஒளிப்பதிவைப் பார்த்தவர்களால் உணர்ந்து கொள்ள முடியும்.
மேற்படி கருத்தாடல் அன்றைக்கு ஒளிப்பதிவு செய்யப்பட்டு வீடியோ கெஸட்களாக விணியோகிக்கப்பட்டது.

3.செய்யித் குதுப் அத்வைதம் பேசினாரா என்ற தலைப்பில் பேருவளையில் இரு நளீமிகள் மற்றும் ஸஹ்றான் மௌலவி தரப்பினருக்கிடையில் இடம் பெற்ற விவாதம்.

https://www.youtube.com/watch?v=RRgiKur4Grw

இதில் நளீமிகள் தரப்பினரது வாதங்கள் எவ்வாறு தவிடுபொடியாக்கப்பட்டு ஸஹ்றான் மௌலவி தரப்பால் செய்யித் குதுப் அத்வைதம் பேசினார் என நிரூபிக்கப்பட்டது.

ஆக, உன்மை இவ்வாறிருக்க உன்மைக்கு மாற்றமாக பலரும் வஹாபிகளிடம் சென்று அவர்களிடம் உள்ள குளறுபடிகளை உணர்த்த முயன்றார்கள் என கட்டுரையாளர்கள் புணைந்து சொல்வது நிதர்சனத்துக்கு மாற்றமான கருத்தாகும்.
கருத்தாடச் சென்று தங்களின் அறிவியல் வங்குரோத்துத் தன்மையினால் விடயம் சார்ந்த அறிவுக் குறைபாடுகளினால் கருத்தாடல் திறமை மற்றும் நுணுக்கக் குறைபாட்டினால் எதிராளிகளின் கருத்துகளை மென்மேலும் வலுப்பெறச் செய்தார்கள் என்பதுதான் உன்மை.!!

அடுத்து கட்டுரையாளர்கள் வஹாபிஸ சிந்தனையைச் சேர்ந்வர்களிடம்
1. ஃகவாரிஜிய்ய சிந்தனை மூலக்கூறுகள்
 2. முர்ஜிஆ சிந்தனை மூலக்கூறுகள்
 3. ஷீஆ சிந்தனை மூலக்கூறுகள்

என மூன்று கூறுகள் உள்ளதாக குறிப்பிடுகின்றனர்.

உன்மையில் இக்குற்றச் சாட்டுகள் வஹாபிஸ சிந்தனையைச் சேர்ந்வர்களிடம் உள்ளதுதானா என்பதையும் உன்மையில் இக்குற்றச் சாட்டைச் சொல்வதற்கு இஹ்வானிகளுக்குத் தகுதியும் அருகதையும் உள்ளதுதானா என்பதையும் இவர்கள் குறிப்பிடும் இக்கூறுகள் இவர்களிடமே  எந்தளவுக்கு மலையளவு குவிந்து கிடக்கின்றன என்பதையும் இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்த தொடர்களில் ஆதாரங்களோடு நோக்குவோம்.

தொடரும் (இன்ஷா அல்லாஹ்))

தயாரிப்பு :மௌலவி நௌபர் காஷிபி.

ஆக்கம் : Islaam For All Peoples.

Comments

Popular posts from this blog

அல் குர்ஆன் சுன்ன அடிப்படையில் கேள்வி பதில் தொகுப்புகள்

ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-3

Learn Al Qur'an With Tajweed Tamil