عقيدة التوحيد இஸ்லாமிய ஏக இறை கோட்பாடு தொடர் - 2

     
     
                   بسم الله الرحمن الرحيم
*அஷ்ஷைக் ஸாலிஹ் பின் பௌஸான் அல் பௌஸான். அவர்கள் எழுதிய عقيدة التوحيد (இஸ்லாமிய ஏக இறை கோட்பாடு) என்ற நூலின் தமிழ் மொழி பெயர்பு தொடர் - 2*

இரண்டாம் பிரிவு;

அகீதாவின் சரியான அடிப்படைகளும்
இவ்விடயத்தில் முன்னோரின் அணுகு முறையும்
ஒரு விடயம் இன்னொரு விடயத்தில் தங்கியிருப்பதைتَوْفِيْقِيَّةْ என்பர்.

இதன்படி இஸ்லாமிய அகீதா கோட்பாடுகள் யாவும் இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரத்துடன் இணைகப்பட்டிருப்பதன் காரணமாக. இதனை تَوْفِيْقِيَّةْ என்பர்.

எனவே மார்க்கத்தை ஏற்படுத்திய அல்லாஹ்வின் புறத்திலிருந்து உறுதி செய்யப்படாத எந்தவொரு கோட்பாடும் இஸ்லாமிய அகீதாவாக ஆகாது.

ஆகையால் இவ்விடயத்தில் மனித ஆய்வுகளுக்கும், சிந்தனைகளுக்கும் இடமில்லை. எனவே அதன் அடிப்படைகள் அல்குர்ஆனுடனும், ஸுன்னாவுடனும் வரையறுக்கப்பட்டுள்ளன.

 ஏனெனில் அல்லாஹ்வைப் பற்றியும், அவனிடம் கட்டாயம் இருக்க வேண்டியது எது? இருக்கக் கூடதவை எது? என்பதையும் நன்கு அறிந்தவன் அவனே.

 இதனை அவனை விடவும் மிகவும் அறிந்த எவரும் இல்லை. மேலும் அவனையெடுத்து இதனை நன்கு அறிந்தவர் ரஸுல் (ஸல்) அவர்களே.

எனவே அவர்களை விடவும் இதனை நன்கு அறிந்வர் எவரும் இல்லை. எனவேதான் சான்றோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்களும், அவர்களைப் பின் தொடர்ந்தவர்களும் அகீதாவைத் தெரிந்து கொள்வதற்கான வழியை அல்குர்ஆனுடனும், ஸுன்னாவுடனும் மட்டுப்படுத்திக் கொண்டனர்.

எனவே அல்லாஹ்வின் விவகாரத்தில் அல்குர்ஆனும் ஸுன்னாவும் எதனை உறுதி செய்கின்றதோ அதன் மீது அவர்கள் விசுவாசம் கொண்டனர்.

அதனைத் தங்களின் கொள்கையாக ஏற்று அதன் படி செயலாற்றினர். மேலும் அல்குர்ஆனும், ஸுன்னாவும் உறுதி படுத்தாத அனைத்தையும் அவர்கள் நிராகரித்தனர்.

அவை எதனையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவேதான் அகீதா விடயத்தில் இவர்கள் மத்தியில் முரண்பாடுகள் தோன்றவில்லை. எனவே அகீதா பற்றிய அவர்களின் கொள்கை ஒன்றாகவும், அவர்களின் ஜமாஅத்து ஒன்றாகவும் விளங்கியது. ஏனெனில் யாரெல்லாம் அல்லாஹ்வின் வேதத்தையும் அவனின் தூதரின் வழி முறையையும் கடைப்பிடித்து வருகின்றார்களோ அவர்களின் வாக்கு ஒருமித்த வாக்காகவும், அவர்களின் கொள்கை சரியானதாகவும், அவர்களின் வழி ஒரே வழியாகவும் இருக்கும் என்பதற்கு அல்லாஹ் உத்தரவாதம் அளித்துள்ளான்.
இதனை அல்லாஹ்வின் வாக்குகள் உறுதி செய்கின்றன.

وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّـهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا ۚ (آل عمران/103)
“மேலும் நீங்கள் அவைரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வுடைய (வேதம் எனும்) கயிற்பை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்திட வேண்டாம்.”(3/103) 

فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَنِ اتَّبَعَ هُدَايَ فَلَا يَضِلُّ وَلَا يَشْقَىٰ ﴿/طه/١٢٣﴾  
  “நிச்சயமாக என்னுடைய நேர்வழி உங்களிடம் வரும். எவன் என்னுடைய நேர்வழியைப் பினபற்றுகிறாரோ அவர் வழி தவறவும் மாட்டார். நஷ்டமடையவும் மாட்டார்.” (20/123) 

என்று சரியான அகீதாவை ஏற்று நடப்போரின் ஒருமித்த நிலையை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்.
எனவேதான் இவர்கள் ஈடேற்றம் பெற்ற கூட்டத்தினர் என்று அழைக்கப் படுகின்றனர். ஏனெனில் ரஸூல் (ஸல்) அவர்கள், தங்களின் உம்மத்தினர் எழுபத்து மூன்று கூட்டதினராகப் பிரிந்து விடுவார்கள், இவர்களில் ஒரு கூட்டத்தினரைத் தவிர மற்றவர்கள் யாவரும் நரகத்தில் இருப்பார்கள். என்று கூறிய போது, அந்தவொரு கூட்டத்தினர் யார்? என்று வினவப்பட்டது. அதற்கு நபியவர்கள். “எந்தக் கூட்டத்தினர் நானும் எனது தோழர்களும் இருக்கும் கொள்கையில் இருப்பார்களோ அந்தக் கூட்டமே அது.” என்று அவர்களைப் பற்றி ரஸூல் (ஸல்) அவர்கள் சாட்சி பகர்ந்தார்கள்.

எனவே சிலர்  அல்குர்ஆனுக்கும் ஸுன்னாவுக்கும் புறம்பாக கிரேக்க தத்துவ ஞானிகளின் இறைக் கோட்பாட்டுத் தத்துவம் மற்றும் அவர்களின் தர்க்க சாஸ்திர விதிகளின் பிரகாரம்   தங்களின் அகீதா கொள்கையை நிறுவிக் கொண்ட போதுதான், இஸ்லாமிய அகீதா- கோட்பாடு விடயத்தில் தவறுகளும் பிளவுகளும் ஏற்பட்டன.
அதனை அடுத்து கருத்து முரண்பாடுகளும், சமூகப் பிரிவுகளும் தோன்றி இஸ்லாமிய சமூகம் சின்னா பின்னமடைந்தது. இதிலிருந்து நபியவர்களிகளின் அந்த வாக்கின் உண்மை நிலை தெளிவாகின்றது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.......

அரபு மூலம் :*அஷ்ஷைக் ஸாலிஹ் பின் பௌஸான் அல் பௌஸான். 

தமிழில் : இஸ்மாயில் இமாம்

ஆக்கம் : Islaam For All Peoples

Comments

Popular posts from this blog

அல் குர்ஆன் சுன்ன அடிப்படையில் கேள்வி பதில் தொகுப்புகள்

ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-3

அகீதாவின் சில அடிப்படை விடயங்கள்