இஸ்லாமிய (அகீதா) கொள்கையுடன் தொடர்பான 200 வினா விடைகள். தொடர் - 1
بسم الله الرحمن الرحيم
இஸ்லாமிய (அகீதா) கொள்கையுடன் தொடர்பான
200 வினா விடைகள். தொடர் - 1
அரபி மூலம் நூலாசிரியர்
அஷ்ஷெய்க்: ஹாபில் இப்னு அஹ்மத் இப்னு அலி அல் ஹகமீ (ரஹ்)
தமிழாக்கம்.
அப்துல் சத்தார் மதனி M.A ( Edu) Sudan.
நூலாசிரியர் பற்றிய குறிப்பு :
சங்கைமிக்க மார்க்க மேதை அஷ்ஷெய்க் ஹாபில் இப்னு அஹ்மத் இப்னு அலி அல் ஹகமீ” என்பதே இவரது இயற்பெயராகும். ஷெய்க் அவர்கள் “மத்ஹஜ்” கோத்திரத்தின் ஒரு பிரிவான “ஹகம் பின் சஃத் அல் உஷைரா”வுடன் இனைத்து அல்ஹகமி என அழைக்கப் பட்டார்.
சவுடதி அரேபியாவின் தென்கிழக்கில் உள்ள “ஜாஸான்” இல் அமையப் பெற்ற “அல் மளாயா” நகருக்கு உற்பட்ட “அல் ஸலாம்” கிராமத்தில் ஹிஜ்ரி 1342 ம் வருடத்தில் பிறந்தார்கள்.
பின்னர் அவரது தந்தையுடன் பிரபல்யமான “சாம்தா” நகரத்துக்குற்பட்ட “அல்ஜாளிஃ” கிராமத்தை நோக்கிப்பயணமானார். அங்கே தாய் தந்தை அரவனைப்பிலே வாழ்ந்து வந்த அவர்கள் அக்கால சமூக வழக்கத்துக்கேட்ப அவரது பெற்றோர்களுக்காக ஆடு வளர்ப்பில் ஈடுபட்டார். எனினும் மனன சக்தியிலும், விவேகத்திலும் அக்கால இளைஞர்களுக்கு மத்தியில் ஒரு அத்தாட்சியாகத் திகழ்ந்தார்கள்.
வெறும் பனிரெண்டு வயதுக்குள் அல் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து முடித்தார்கள். அவரையும் அவரது மற்ற புதல்வரான முஹம்மத் பின் அஹ்மத் என்பரையும் பள்ளிக் கூடத்துக்கு அனுப்பி கல்வியூட்ட விரும்பாத தந்தை அக்கிராமத்தில் வாழ்ந்த அஷ்ஷெய்க் “அப்துல்லா அல் கர்ஆவி” (ரஹ்) என்பவரை அவ்விருவருக்கும் ஆசிரியராக நியமித்தார்.
பின்னர் இவருடைய தந்தை ஹிஜ்ரி 1360 ம் வருடத்தில் வபாத்தாகவே தனது ஆசிரியரு டனே கல்வி கற்க முழு நேரத்தையும் செலவிட்டார்கள். அவரைப்பற்றி அவரது ஆசிரியர் பின்வருமாறு கூறுகின்றார்; (அக்காலத்தில் கற்பதிலும் கல்வி போதிப்பதி லும் நூல்கள் இயற்றுவதிலும் நிர்வாகத்திலும் அவருக்கு நிகரான ஒருவர் அப்பிரதேசத்தில் இருக்கவில்லை).
எனவே அவருடைய ஆசிரியர் அவருக்கு தனது செல்வப் புதல்வியைத் திருமணம் செய்து வைத்தார் பின்னர் அவ்விருவரும் மார்க்க அறிவைக் கற்கக்கூடிய (ஸாலிஹான) நல்ல குழந்தை களை ஈன்றெடுத்தார்கள்.
ஹிஜ்ரி 1362 ம் ஆண்டில் ஷெய்க் “அப்துல்லா அல் கர்ஆவி” அவருடைய மாணவர் “ஹாபில் அல் ஹகமி” என்பவரிடம் நடாத்திய மாதிரிப் பரீட்சையில் “ஸாலிஹான” முன்னோர்களின் இஸ்லாமியக் கொள்கையை ஒரு ஏகத்துவக் கவிதை நூலில் இயற்றுமாறு பணிந்தார்கள் உடனே அவர்கள் (أرجوزة سلم الوصول إلى علم الأصول) “அடிப்படை அறிவின்பால் அழைத்துச்செல்லும் ஏணி” என்ற கவிதை நூலை இயற்றினார்கள். இது தவிர இஸ்லாமிய மதச்சட்டம், அதன் அடிப்படைகள், ஏகத்துவம், நபிகளாரின் வாழ்கை வரலாறு, சொத்துப்பங்கீடு போன்ற துறைகளில் உரை நடையிலும் கவிதை நடையிலும் பல நூல்களை எழுதியுள்ளார்.
அச்சிலேறிய, அச்சிலேறாத பதினைந்துக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர்கள் தனது இளமையிலே ஹிஜ்ரி 1377 ஆண்டு ஹஜ் கடமைகளை முடித்த பின்னர் புனித மக்கா நகரிலேயே வபாத்தாகி அங்கேயே நல்லடக்கமும் செய்யப்பட்டார்கள். அல்லாஹ் அவரை விசாலமான சுவனபதியில் குடியிருத்துவானாக.
200 வினா விடைகள்
1)வினா; அடியார்கள் மீதுள்ள முதல் கடமை யாது?
(i)விடை :
அடியார்கள் மீதுள்ள முதல் கடமை அல்லாஹ் அவர்களை எதற்காகப் படைத்து, அவர்களிடம்உறுதிமொழியும் வாங்கினான், மேலும் தூதர்க ளையும் அவர்களிடம் அனுப்பி, அவனது வேதங்ளையும் இறக்கினான், இம்மை, மறுமை, சுவர்க்கம், நரகம் போன்றவைகளையும் படைத்தான்.
மேலும் கியாமத் நாள் வருவதும் (மீஸான்) தராசில் நிறுக்கப்படுவதும், (நன்மைதீமை) ஏடுகள் வழங்கப்படுவதற்குமான உண்மைகளை ப் விளங்கிக்கொள்வதேயாகும்.
2)வினா; அல்லாஹ் படைப்பினங்களை எதற்காகப் படைத்தான்?
(i)விடை :
அல்லாஹ் தனது திருமறையில் இது சம்பந்தமாக பின்வருமாறு கூறுகின்றான்.
(வானங்களையும், பூமியையும், அவ் விரண்டுக்கு மத்தியிலுள்ள வைகளையும் விளையாடுவோராய் நாம் படைக்கவில்லை, (நிச்சியமாக) அவ்விரண்டையும் உண்மையைக் கொண்டே தவிர - நாம் படைக்கவில்லை, எனினும் அவர்களில் பெரும்பாலானோர் (இதனை) அறிய மாட்டார்கள்.) அத்துகான் 37,38
(வானத்தையும், பூமியையும், இவை இரண்டுக்கு மத்தியலுள்ள வற்றையும் வீணாக நாம் படைக்கவில்லை, இது நிராகரித்தவர் களின் எண்ணமேயாகும், ஆகவே நிராகரித்த வர்களுக்கு (நரக) நெருப்பின் கேடு தான் (உண்டு) ஸாத் 27
(வானங்களையும், பூமியையும், அல்லாஹ் நீதியைக் கொண்டு (தக்க காரணத் திற்காவே) படைத்திருக்கின்றான், இன்னும் ஒவ்வொரு ஆத்மாவும் அது சம்பாதித்ததைக் கொண்டு கூலி கொடுக்கப்படு வதற்காகவும் (படைத்துள்ளான்) அவர்கள் அனியாயம் செய்யப்படவுமாட்டார்கள்.) அல்ஜாஸியா 22
மேலும் ஜின்களையும், மனிதர்களையும் என்னை அவர்கள் வணங்குவற்காகவே தவிர நான் படைக்க வில்லை.) அத்தாரியாத் 56.
3)வினா; (அப்த்) அடிமை என்பதன் கருத்து யாது?
(i)விடை
அடிமை என்ற பதம் பொதுவாக அல்லாஹ்வின் படைப்புகளில் (உயிருள்ள, உயிரற்ற) அனைத்தையும் அடக்கிய போதிலும் குறிப்பாக முஃமின்களையே அது குறிக்கும் ஏனெனில் அவர்களே அல்லாஹ்வின் சங்கை மிக்க அடியார்களும் உள்ளச்சம் கொண்ட நேசர்களுமா வார்கள். அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை, அவர்கள் கவலையும் அடையமாட்டார்கள்.
4)வினா; (இபாதத்) வணக்கம் என்றால் என்ன?
(i)விடை :
வணக்கம் என்றால் உள்ரங்கமான அல்லது வெளிப்படையான சொற்கள் செயல்கள் ரீதி யில் அல்லாஹ் விரும்பக்கூடிய சகல விடயங்களும், மேலும் அவைகளுக்கு முரன்பாடான அல்லது எதிரானவைகளில் இருந்து நீங்கியிருத்தலும் வணக்கமாகும்.
5)வினா; ஒரு செயல் எப்போது (இபாதத்) வணக்கமாக மாறும்?
i)விடை
அச்செயலில் இரண்டு விடயங்கள் பூரணமாக இருக்க வேண்டும் அவை, நிறைவான கீழ்ப் படிவுடன் கூடிய நிறைவான நேசமாகும். அல்லாஹ் கூறுகின்றான்.(...விசுவாசிகளோ அல்லாஹ்வை நேசிப்பதில் மிகக்கடுமை யானவர்கள்...) அல்பகரா 165.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (நிச்சயமாக தங்கள் இரட்சகனின் பயத்தால் அஞ்சி எச்சரிக்கையாக இருக்கின்றார்களே அத்தகையோரும்)அல்முஃமினூன் 57
இவ்விரண்டையும் ஒரே வசனத்தில் இனைத்துக் கூறும் போது (...நிச்சயமாக, இவர்கள் யாவரும் நன்மைகளில் (மிகத் துரிதமாக) விரைபவர்களாக இருந்தார்கள், (நம்முடைய அருளை) ஆசித்தும், (நம் தண்டனையைப்) பயந்தும், நம்மை (பிரார்த்தனை செய்து) அழைப்பவர் களாகவும் இருந்தார்கள், அவர்கள் (யாவரும்) நம்மிடம் உள்ளச்சமுடையோர்களாகவும் இருந்தார்கள்.
6)வினா; ஒரு அடியான் (ரப்பை) அவனைப் படைத்து போசித்துப் பாதுகாப்பவனை நேசிப்பதற்கான அடையாளம் என்ன ?
i)விடை.
அதன் அடையாளம் அல்லாஹ் நேசிப்பவற்றை அவன் நேசித்தும் அல்லாஹ்வுக்கு கோப மூட்டக்கூடிவைகளைத் தவிர்த்தும் அவனது கட்டளைகளை ஏற்று அவனது விளக்கள் களைத் தவிர்ந்துக் கொள்வான், மேலும் அல்லாஹ்வின் நேசர்களை நேசித்து அவனது விரோதி களைப் பகைத்துக்கொள்வான். எனவே தான் அல்லாஹ் வுக்காக நேசிப்பதும் அவனுக்காகவே பகைத்துக் கொள்வதும் ஈமானின் பலமான கயிராகும்.
7)வினா; அல்லாஹ் திருப்தி கொள்பவற்றை அடியார்கள் எப்படி அறிந்தார்கள்?
(i)விடை
அல்லாஹ் தூதர்களை அனுப்பியதன் மூலமும், அவனது விருப்பு வெறுப்புக்களை விளக்கி வேதங்களை இறக்கிய தனாலும் அடியார்கள் அதை அறிந்து கொண்டார்கள். இதனால் அவர்களுக்கெதிரான ஆதாரம் நிலைப்பெற்று அல்லாஹ்வின் எல்லையற்ற ஞானமும் தெளிவாகியது.
அல்லாஹ் கூறுகின்றான் (அல்லாஹ்வின் மீது மனிதர்களுக்கு (சாதகமாக) யாதொரு ஆதார மும் இல்லா திருப்பதற்காக, இத்தூதர்களுக்குப் பின்னரும் தூதர்கள் பலரை (சுவர்கத்தைக் கொண்டு) நன்மாராயம் கூறுகின்றவர்களா கவும் (நரகத்தைக்கொண்டு) அச்சமூட்டி எச்சரிக் கின்றவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பி வைத்தான்.) அன்னிஸா 165.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (நபியே மனிதர்களிடம்) நீர் கூறுவீராக “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால், என்னை நீங்கள் பின் பற்றுங்கள் (அவ்வாறு நீங்கள் செய்தால்) உங்களை அல்லாஹ் நேசிப்பான், உங்கள் பாவங்களையும் உங்களுக் காக அவன் மன்னித்து விடுவான் அல்லாஹ் மிக்க மன்னிப்புடையவன், மிகக்கிரபையுடய வன்”.) ஆலு இம்ரான் 31
8 )வினா; இபாதத்(வணக்கத்)தின் நிபந்தனைகள் எத்தனை?
i)விடை: மூன்று அவையாவன
ஒன்று; உண்மையான மன உறுதி. இது வணக்கம் உண்டாவதற்கான நிபந்தனை.
இரண்டு; தூய என்னம்
மூன்று; அவ்வணக்கம் அல்லாஹ்விடம் நெருங்க அவன் அனுமதித்த ஒரே மார்க்கத் துக்கு உடன்படல்.
இவ்விரண்டும் வணக்கம் ஏற்றுக் கொள்ள ப்படுவதற்கான நிபந்தனைகளாகும்.
9)வினா;உண்மையான மனஉறுதி என்றால் என்ன?
(i)விடை
அலட்சியம் சோம்பல் போன்றவைகளைக் கழைந்து தனது பேச்சை செயலுடன் உண்மைப்படுத்த முயற்சித்தல்.
அல்லாஹ் கூறுகிறான்; (விசுவாசம் கொண்டோரே நீங்கள் செய்யாததை ஏன் கூறுகின்றீர்கள்?
நீங்கள் செய்யாததை (பிறருக்குச் செய்ய)க் கூறுவது அல்லாஹ்விடத்தில் வெறுப்பால் மிகப் பெரிதாகி விட்டது.) அஸ்ஸஃப் 2,3
10)வினா; தூய என்னம் என்றால் என்ன?
(i)விடை:
அடியானின் உள்ரங்கமான அல்லது வெளிப் படையான சொற்கள் செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.
அல்லாஹ் கூறுகின்றான்;
(இன்னும், அல்லாஹ்வை-அவனுக்காகவே வணக்கத்தைக் கலப்பற்றதாக ஆக்கிய வர்களாக (அனைத்து தீய வழிகளை விட்டும் நீங்கி இஸ்லாத்தின் பால்)சாய்ந்தவர்களாக அவர்கள் அல்லாஹ்வை வணங்குவதற்காகவே அன்றி கட்டளையிடப் படவில்லை...)அல்பய்யினா 5.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (மனிதர் களில்) எவருக்கும் (தன் தர்மத்தின் மூலம் பிரதிபலனைக் கருதிக்) கொடுக்கப்படும் எந்த உபகாரமும் தம்மிடம் இல்லை. மிக்க மேலான தம் இரட்சகனின் முகத்தைத் தேடியே தவிர (வேறு எந்த நோக்கத்துடனும் அவர் செலவு செய்யவில்லை). அல்லைய்ல் 19,20.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (உணவை உண்போரிடம்) உங்களுக்கு நாம் உணவளிப்ப தெல்லாம், அல்லாஹ்வின் முகத்தை நாடியே தான், உங்களிடமிருந்து நாம் யாதொரு பிரதி பலனையோ அல்லது (நீங்கள் நமக்கு) நன்றி செலுத்துவதையோ நாங்கள் நாடவில்லை). அத்தஹ்ரு 9.
இன்ஷா அல்லாஹ் தொடரும்......
ஆக்கம் : Islaam For All Peoples
Comments
Post a Comment