இஸ்லாமிய (அகீதா) கொள்கையுடன் தொடர்பான 200 வினா விடைகள். தொடர் - 2

     
  
                        بسم الله الرحمن الرحيم               
       இஸ்லாமிய (அகீதா) கொள்கையுடன் தொடர்பான 
200 வினா விடைகள். தொடர் - 2

அரபி மூலம் நூலாசிரியர்
அஷ்ஷெய்க்: ஹாபில் இப்னு அஹ்மத் இப்னு அலி அல் ஹகமீ (ரஹ்)


தமிழாக்கம்.
அப்துல் சத்தார் மதனி M.A ( Edu) Sudan.

11)வினா;அல்லாஹ்விடம் நெருங்க அவன் அனுமதித்த  ஒரே மார்க்கம் யாது​?

விடை/
(அனைத்து தீய வழிகளை விட்டும் நீங்கி இஸ்லாத்தின்பால்) சாய்ந்த நபி இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் அவர்களுடைய மார்க்கமாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்; (நிச்சியமாக அல்லாஹ் விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம் ஆகும்...) ஆலு இம்ரான் 20.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; அல்லாஹ் வுடைய மார்கமல்லாத  (வேறு மார்க்கத்) தையா அவர்கள் தேடுகின்றார்கள் வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவை, (அவை) விரும்பினாலும், வெறுத்தாலும் அவனுக்கே முழுமையாகக் கீழ்ப்படிந்து (தங்களை ஒப்படைத்து விட்டன) மேலும் அவனள விலேயே திரும்பக்கொண்டு வரப்படுவார்கள்).​​​  ஆலு இம்ரான் 83. பார்க்க மேலும்​ அல்பகரா 130, ஆலு இம்ரான் 85, அஷ்ஷூரா 21.

12)வினா;இஸ்லாம் மார்க்கத்தின் படித்தரங்கள் எத்தனை​?

விடை/
மூன்று படித்தங்களாகும் அவையாவன;

(i)இறை நம்பிக்கை (ஈமான்),

(ii)அடிபணிதல் (இஸ்லாம்),

 (iii)அழகிய முறையில் செயலாற்றல் (இஹ்சான் )என்பனவாகும். எனினும் அவை ஒவ்வொன்றும் தனியாக்க கூறப்படும்போது முழு மார்க்கத்தையுமே​ குறிக்கும்.

13)வினா; இஸ்லாம் என்றால் என்ன​?

விடை/
அல்லாஹ்வையே தனிமைப்படுத்தி அடி பணிதல், மேலும் அவனுக்குக் கட்டுப்பட்டு வழிபடுதல், இனைவைக்காதிருத்தல்.
அல்லாஹ் கூறுகின்றான்; எவர் அல்லாஹ்வுக்கு (முற்றிலும் வழிப்பட்டு) தன் முகத்தை ஒப்படைத்து விட்டு, அவர் நன்மை செய்தவராக இருக்க அசத்தியத்திலிருந்து நீங்கி) சத்தியத்தைச் சார்ந்த மார்க்கத்தையும் பின் பற்றுகின்றாறோ அவரைவிட மார்க்கத்தால் மிக அழகானவர் யார்?...). அன்னிஸா 125.​​ பார்க மேலும்​ லுக்மான்22, அல் ஹஜ்34.

14)வினா; அது பொதுவாகக் கூறப்படும் போது முழு மார்க் கத்தையும் உள்ளடக்கும் என்பதற்கான ஆதாரம் யாது​?

விடை/
அல்லாஹ் கூறுகின்றான்; (நிச்சியமாக அல்லாஹ் விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம் ஆகும்...) ஆலு இம்ரான் 20.

நபி (ஸல்) கூறினார்கள்:இஸ்லாம் குறைந்த எண்ணிக்கை கொண்ட மக்களிடையேதான் தோன்றியது. அது தோன்றிய பழைய நிலைக்கே திரும்பிச்செல்லும். அந்தக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு சுபம் உண்டாகட்டும். நூல் முஸ்லிம்

மேலும் நபி (ஸல்) கூறினார்கள்; (இஸ்லாத்தில் மிகச்சிறந்தது ஈமான் (விசுவாசம்) கொள்வதாகும்) .நூல் புகாரி,
இது சம்பந்தமாக மேலும் பல ஹதீஸ்கள் உள்ளன.

15)வினா; அதை விளக்கும் போது இஸ்லாத்தின் ஐந்து கடமைகளைக்கொண்டு அடைமொழி வழங்குவதற்கான ஆதாரம் யாது​?

விடை/
ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடத்தில் (இஸ்லாம்) மார்க்கத்தைப் பற்றி வினவிய நபிமொழியில் வந்துள்ள. ”இஸ்லாம் என்றால் வணக்கத்துக்குரிய இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை, முஹம்மத் (நபி) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார் எனச்சாட்சி கூறுவதும், தொழுகையை நீ உறிய நேரத்தில் தொழுவதும், ஜகாத்தை கொடுப்பதும், ரமழான் மாத்த​​தில் நோன்பு நோட்பதும், வசதியிருந்தால் ஹஜ் செய்வதுமாகும்” என்ற நபியவர்களின் கூற்றும், மேலும் “இஸ்லாம் (மார்க்கம்) ஐந்து (தூன்கள்) மீது கட்டியெழுப்பப்பட்டுள்ளது”​ ​என்ற கூற்றுமாகும். இந்த நபிமொழியிலும் அவைகளையே கூறிய நபியவர்கள்  இதில் ஹஜ்ஜை நோன்பைவிட முற்படுத்திக் கூறினார்கள், அவ்விரண்டு (நபி மொழிகளு)ம் இரண்டு ஸஹீஹான கிரந்தங்களிலும் (பதிவாகி) உள்ளன.​​

16)வினா; இரு சாட்சியங்களுக்கும் (இஸ்லாம்) மார்க்கத்தி லுள்ள அந்தஸ்து யாது​?

விடை/
அவ்விரண்டின் ஊடாகவே தான் ஒரு அடியான் (இஸ்லாம்) மார்க்கத்தில் நுளையலாம்.​​​ அல்லாஹ் கூறுகின்றான்; (உண்மையான விசுவாசிகளெல்லாம் “அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் விசுவாசங் கொண்டார்களே அத்தகையோர் தாம்”). அன் நூர் 62.​​​

மேலும் நபி (ஸல்) கூறினார்கள்; (“அல்லாஹ் வையன்றி (வணக்கத்துக்குரிய) இறைவன் வேறு யாருமில்லை யென்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் மேலும் அவனது தூதருமாவார்” என்று மனிதர்கள் சாட்சி கூறும் வ​​​ரை நான் அவர்களுடன்​போராட கட்டளையிடப் பட்டுள்ளேன். நூல் புகாரி

17. வினா; “அல்லாஹ்வைத்தவிர (வணக்கத்துக்குரிய) இறைவன் வேறு யாரு மில்லை” என்ற சாட்சியத்தின் ஆதாரம் யாது​?

விடை/
அல்லாஹ் கூறுகின்றான்;(“தன்னைத் தவிர வணக்கத்திற் குரியவன் வேறு யாருமில்லை'' என்று அல்லாஹ் உறுதி கூறுகிறான். வானவர்களும், நீதியை நிலை நாட்டும் அறிவுடை யோரும் (உறுதி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரு மில்லை. (அவன்) மிகைத்தவன்; ஞான மிக்கவன்) .ஆலு இம்ரான் 18.

மேலும்அல்லாஹ் கூறுகின்றான்; (அல்லாஹ் வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை' என்பதை அறிந்து கொள்வீராக!) முஹம்மத் 19.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (ஒரே அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை' என்று (முஹம்மதே!) கூறுவீராக!) ஸாத் 65.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;(அல்லாஹ் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவனுடன் எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறிருந்தால் தான் படைத்தவற்றுடன் ஒவ்வொரு கடவுளும் (தனியாகப்) போயிருப் பார்கள். ஒருவரையொருவர் மிகைத்திருப்பார்கள். அவர்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் தூயவன்).அல்முஃமினூன் 91.

('அவர்கள் கூறுவது போல் அவனுடன் பல கடவுள்கள் இருந்திருந்தால் அவர்களும் அர்ஷுடைய (இறை)வனிடம் (சரணடைய) ஒரு வழியைத் தேடியிருப்பார்கள்' என்று கூறுவீராக)அல் இஸ்ரா 42.

18. வினா “அல்லாஹ்வைத்தவிர (வணக்கத்துக் குரிய) இறைவன் வேறு யாருமில்லை” என்ற சாட்சியத்தின் கருத்து யாது ​?

விடை/
அல்லாஹ் தவிர்ந்த ஏனைய அனைத்து  படைப்பினங்களுக்கும் வணக்கம் செழுத்துவதை மறுத்து, வழிபடுவதிலும், தன் அரசாட்சியிலும் இனையே இல்லாத அல்லாஹ்வுக்கு மாத்திரமே அது உறியது என ஏற்றுக்கொள்ளல்.

அல்லாஹ் கூறுகின்றான்; (அல்லாஹ்வே உண்மையானவன். அவனையென்றி அவர்கள் பிரார்த்திப்பவை பொய்யானவை. அல்லாஹ் உயர்ந்தவன்; பெரியவன் என்பதும் இதற்குக் காரணம்) அல் ஹஜ் 62.
 ​​​​​
19. வினா;“அல்லாஹ்வைத் தவிர (வணக்கத் துக்குரிய) இறைவன்வேறு யாருமில்லை” என்ற சாட்சியத்தின் சகல நிபந்தனைகளையும் ஒருங்கே பேனாது ​​ஒருவர் மொழிந்தால் அது அவருக்கு பயனளிக்காது என்றால் அதன் நிபந்தனைகள் யாது​​?

விடை/
அதன் நிபந்தனைகள் ஏழு;​

i)அ(ச்சாட்சியத்)திலுள்ள மறுத்தல், ஏற்றுக் கொள்ளல் ஆகிய கருத்துக்களை அறிதல்.

ii)அ(ச்சாட்சியத்)தை உள்ளத்தால் உறுதி கொள்ளல்.

iii)உள்ரங்கமாகவும் வெளிப்படையாகவும் சாட்சியத்துக்கு கட்டுப்படல்.

iV)சாட்சியத்தின் கருத்துக்களிலிருந்தோ, அல்லது அது கட்டாயப் படுத்துபவைகளிலிருந்தோ யாதொன்றையும் மறுக்காது ஏற்றுக் கொள்ளுதல்.​

V)அதில் உளத்தூய்மையாக இருத்தல்.

​Vi)வெறுமனே நாவினால் மாத்திரமின்றி அடிமனதினாலும் சாட்சியத்தை உண்மைப் படுத்துதல்.​

Vii)அவ்வாறு சாட்சி கூறியவர்களை நேசித்தல், மேலும் அதற்காகவே பகைத்தலும் நேசித்தலுமாகும்.

20. வினா; “அறிதல்” என்ற நிபந்தனைக்கு அல்குர்ஆன், நபிமொழி ஆகியவைகளிலிருந்து பெறப்பட்டஆதாரங்கள் எவை​? 

விடை/
அல்லாஹ் கூறுகின்றான்;  (அறிந்து உண்மைக்கு சாட்சி கூறியோரைத் தவிர).அஸ்ஸுக்ருப் 86

அதாவது தம் நாவினால் மொழிந்ததன் கருத்தை இதயத்தினால்(அறிந்து) “அல்லாஹ் வைத்தவிர (வணக்கத்துக்குரிய) இறைவன் வேறு யாருமில்லை” என்ற(உண்மைக்கு சாட்சி கூறியோரைத் தவிர) என்பதாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (யார் “அல்லாஹ்வைத்தவிர (வணக்கத்துக்குரிய) இறைவன் வேறு யாருமில்லை” என்று அறிந்தவராக மரணிக்கிராரோ அவர் சுவனம் நுளைந்து விடுவார்).நூல் முஸ்லிம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும் :........

ஆக்கம் : Islaam For All Peoples.

Comments

Popular posts from this blog

அல் குர்ஆன் சுன்ன அடிப்படையில் கேள்வி பதில் தொகுப்புகள்

ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-3

அகீதாவின் சில அடிப்படை விடயங்கள்