ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-3
بسم الله الرحمن الرحيم ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-3 (31.03.2018) தமிழில் அஷ்ஷெய்க் மெளலவி N.P.ஜுனைத் காஸிமி,மதனி. 1)சத்தியத்தில் நிலைத்திருக்கும் அறிஞர்களின் மானங்களில் விளையாடுபவர்கள் இவர்கள்தான்!! சஊதி அரேபிய நாட்டு அறிஞர் அஷ்ஷெய்க் ஸாலிஹ் பின் பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்: “சத்தியத்தில் உறுதியாக நிலைத்திருக்கும் அறிஞர்களின் மானங்களில் விளையாடுவதில் கீழ்க்காணும் மூவரில் ஒருவரைத் தவிர வேறு யாருமே ஈடுபடமாட்டார்கள். 1) நயவஞ்சகத்தனம் தெளிவாக அறியப்பட்ட ஓர் நயவஞ்சகன். 2) அறிஞர்களுடன் பகைமை பாராட்டுகின்ற கெட்டவன். இவனை, கெட்ட செயல்களிலிருந்து அறிஞர்கள் தடுப்பதே இதற்கான காரணமாகும். 3) அறிஞர்களோடு கோபித்துக்கொள்ளும் வழிகெட்ட ஓர் இயக்கவாதி; கட்சிக்காரன். ஏனெனில், மோசமான இவனது இயக்கக் கருத்துக்கும், பிழையான இவனது சிந்தனைகளுக்கும் அவ்வறிஞர்கள் உடன்பட்டுப்போகாமல் இருப்பார்கள்!” { நூல்: 'அல்அஜ்விபbதுல் முபீfதா அன் அ...