ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வுட்டும் அறிவுரைகள் தொடர்-1
بسم الله الرحمن الرحيم
ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-1 (16.03.2018)
தமிழில் அஷ்ஷெய்க் மெளலவி N.P.ஜுனைத் காஸிமி,மதனி.
1)மனோ இச்சையைக் கடவுளாக எடுத்துக் கொள்ளாதீர்கள்!!
இஸ்லாமிய மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“மனோ இச்சையும் இன்னொரு கடவுள்தான்! இணைவைத்தல் என்பது கற்கள், மரங்கள், ஏனைய பொருட்கள் போன்றவற்றினால் செய்யப்பட்ட சிலைகளை வணங்குவதோடு மாத்திரம் சுருக்கப்பட்டது அல்ல! மாற்றமாக, இங்கே வேறொரு கடவுளும் இருக்கிறது; அதுதான் மனோ இச்சையாகும்.
சிலைகளையோ, மரங்களையோ, கற்களையோ சில வேளைகளில் மனிதன் வணங்காமல் இருப்பான்; மண்ணறைகளையும் அவன் வணங்காமல் இருப்பான். என்றாலும் தனது மனோ இச்சையை அவன் பின்பற்றுவான்! இவன்தான் தனது மனோ இச்சை எனும் கடவுளின் அடிமையாவான்.
எனவே, இது விடயத்தில் ஒரு மனிதன் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும்; அல்குர்ஆனுக்கும், சுன்னாவுக்கும் உடன்பாடாக வரக்கூடியதைத் தவிர வேறு எதையும் அவன் பின்பற்றக் கூடாது!!
{ நூல்: 'ஷர்ஹுஸ்ஸுன்னா லில் பbர்பbஹாரீ ', 1/71}
قال الشيخ صالح الفوزان حفظه الله تعالى: [ فالهوى إله آخر ... وليس الشرك مقصورا على عبادة الصنم أو الوثن، بل هناك شيئ آخر ؛ وهو الهوى.
فقد لا يعبد الإنسان الأصنام والأشجار والأحجار ، ولا يعبد القبور . لكن يتبع هواه، فهذا عبد لهواه! فعلى الإنسان أن يحذر، ولا يتبع إلا ما وافق الكتاب والسنة ]
{ شرح السنة للبربهاري، ١/٧١ }
🌟 அல்லாஹ் கூறுகின்றான்:
“(நபியே) தன் மனோ இச்சையைத் தனது கடவுளாக எடுத்துக் கொண்டவனை நீர் பார்த்தீரா?நன்கறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு விட்டான். அவனது செவிப்புலனிலும் உள்ளத்திலும் முத்திரையிட்டு, அவனது பார்வையில் திரையையும் ஏற்படுத்தி விட்டான். அல்லாஹ்வுக்குப் பின்னர் அவனை நேர்வழியில் செலுத்துபவன் யார் இருக்கின்றான்? நீங்கள் நல்லுபதேசம் பெற மாட்டீர்களா? ”
{ அல்குர்ஆன் 45:23 }
🌟 மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: “யார் தனது இரட்சகன் முன் நிற்பதைப் பயந்து, மனோ இச்சையை விட்டும் தன்னைத் தடுத்தும் காெண்டாரோ நிச்சயமாக சுவர்க்கம்தான் (அவரது) ஒதுங்குமிடமாகும்”.
{ அல்குர்ஆன் 80:40,41}
2)'அல்லாஹ்தான் மிகப்பெரியவன்' என்று நீங்கள் புரிந்து கொண்டால்...... !!
இஸ்லாமியப் பேரறிஞர், இமாம் முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:
“ 'அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று நீ கூறும் உனது கூற்றின் பூரணத்துவமான பொருளை உன் சிந்தனைக்கு நீ கொண்டு வந்து பார்த்தால் உலகம் முழுவதும் உன்னை விட்டும் நிச்சயமாக மறைந்து விடும்! இதில் சந்தேகமே இல்லை. ஏனெனில், அல்லாஹ்தான் அனைத்தையும் விட மிகப்பெரியவன்!”.
{ நூல்: 'அஷ்ஷர்ஹுல் மும்திஃ, 3/34 }
قال العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:
[ فإن قولك الله أكبر لا شك أنك لو استحضرت هذا المعنى تماما لغابت عنك الدنيا كلها، لأن الله أكبر من كل شيء ]
{ الشرح الممتع، ٣/ ٣٤ ]
3)அறிவுத் தேடலில் ஈடுபடுபவர்கள், அல்லாஹ்வின் அருளுக்குரியவர்கள்!
இஸ்லாமிய மார்க்க அறிஞர், இமாம் ரபீbஃ பின் ஹாதீ அல்மத்ஹலீ (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:
“அறிவுத் தேடலில் ஈடுபடுபவரைத் திருப்தி கொண்டு, அவருக்காக வானவர்கள் தமது இறக்கைகளை விரிக்கின்றனர். அரசர்களுக்கோ, வியாபாரிகளுக்கோ, உலகத்தைத் தேடுபவர்களுக்கோ, இவர்கள் அல்லாத வணக்கசாலிகள் மற்றும் நல்லவர்களுக்கோ அவர்கள் தமது இறக்கைகளை விரிக்கவில்லை. ஏன்; அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவர்களுக்கே அவர்கள் தமது இறக்கைகளை விரிக்கவில்லை! என்றாலும், அறிவுத் தேடலில் ஈடுபடுபவருக்கே அவர்கள் தமது இறக்கைகளை விரிக்கின்றனர். இது, அறிவுத் தேடலில் ஈடுபடுபவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைத்துள்ள கண்ணியமும், அவர்களுக்கான உற்சாகமூட்டலுமாகும். தூரமான விடயமாக இதை நாம் பார்க்கக் கூடாது!”
{ நூல்: 'மர்ஹபbன் யா தாலிபbல் இல்மி', பக்கம்: 117 }
قال العلامة ربيع بن هادي المدخلي حفظه الله تعالى: [ والملائكة تضع أجنحتها رضا لطالب العلم، الملائكة ما تضع أجنحتها لا للملوك ولا للتجار، ولا لطلاب الدنيا، ولا لغيرهم، ولا حتى للعباد، ولا للصالحين، حتى للمجاهدين ما تضع أجنحتها. بل تضع أجنحتها لطالب العلم، هذا تكريم من الله تبارك وتعالى لطلاب العلم، وتشجيع لهم، ولا نستبعد ذلك ! ]
{ مرحبا يا طالب العلم، ص - ١١٧}
🌸 அல்லாமா இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) கூறுகின்றார்கள்:
“கல்வி, நபிமார்களின் அனந்தரச் சொத்தாகும்! பணமும், ஏனைய சொத்துபத்துக்களும் அரசர்கள் மற்றும் செல்வந்தர்களின் அனந்தரச் சொத்தாகும்!!”
{ நூல்: 'மிப்fதாஹு தாரிஸ் ஸஆதா', 1/428 }
قال العلامة إبن القيم الجوزية رحمه الله تعالى: [ العلم ميراث الأنبياء، والمال ميراث الملوك والأغنياء ]
{ مفتاح دار السعادة، ١/٤٢٨ }
4)பாவ இருளால் உள்ளத்தின் ஒளியை அணைத்து விடாதீர்கள்!!
அல்லாமா இப்னு கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) கூறுகின்றார்கள்:-
“கல்வி என்பது ஓர் ஒளி! அல்லாஹ்தான் அதை உள்ளத்தில் போடுகிறான்; அவ்வொளியை, பாவம் அணைத்து விடுகிறது!”
மாணவராக இருந்த இமாம் ஷாபிfஈ (ரஹ்) அவர்கள், தனது ஆசிரியர் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் உட்கார்ந்திருந்த வேளையில், தான் படித்ததை ஆசிரியரிடம் சமர்ப்பித்தார்கள். அப்போது இமாம் ஷாபிfயின் விவேகத் திறனையும், புத்திக்கூர்மையையும், பூரணத்துவமான அவரின் விளக்கத்தையும் கண்ட இமாம் மாலிக் அவர்கள் ஆச்சரியமடைந்தவர்களாக,
“ஒளியை உனது உள்ளத்தில் அல்லாஹ் போட்டு விட்டதை உறுதியாக நான் காண்கிறேன். எனவே, பாவ இருளால் அதை நீ அணைத்து விடாதே!”என்று அவருக்குக் கூறினார்கள்.
இமாம் ஷாபிfஈ (ரஹ்) கூறுகின்றார்கள்:
“மோசமான என் மனனக் குறைவு குறித்து எனது ஆசான் 'வகீஃ இப்னுல் ஜர்ராஹ்' அவர்களிடம் நான் முறையிட்டேன். அதற்கவர்கள், 'பாவங்களை விட்டு விடும்படி எனக்கு வழிகாட்டினார்கள். அத்தோடு, கல்வி என்பது ஓர் ஒளி; அல்லாஹ்வின் அவ்வொளி, பாவிக்கு வழங்கப்படமாட்டாது என்றும் எனக்கு அவர்கள் கூறினார்கள்”.
{ நூல்: 'அல்ஜவாபுbல் காபீf லிமன் சஅல அனித்தவாஇஷ் ஷாபீf ' , பக்கம்: 82 }
قال العلامة إبن القيم الجوزية رحمه الله تعالى :-
[ فإن العلم نور يقذفه الله فى القلب ، والمعصية تطفئ ذلك النور ]
ولما جلس الإمام الشافعي بين يدي مالك وقرأ عليه أعجبه ما رأى من وفور فطنته، وتوقد ذكائه، وكمال فهمه، فقال: *"إني أرى أن الله قد ألقى على قلبك نورا، فلا تطفئه بظلمة المعصية"*
وقال الإمام الشافعي رحمه الله: [ شكوت إلى وكيع سوء حفظي، فارشدني إلى ترك المعاصي! وأخبرني بأن العلم نور، ونور الله لا يهدى لعاصي ! ]
{ الجواب الكافي لمن سأل عن الدواء الشافي ، ص - ٨٢ }
5)மனோ இச்சை மனிதனை குருடனாக்குகிறது; செவிடனாக்குகிறது!!
ஷைகுல் இஸ்லாம், இப்னு தைமிய்யா (ரஹ்) கூறுகின்றார்கள்:-
“மனோ இச்சையைப் பின்பற்றுபவனை, அது குருடனாக்குகிறது; செவிடனாகவும் ஆக்குகிறது! இத்தகையவன், இதில் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் தான் செய்ய வேண்டியது என்ன? என்பதை தன் முன் கொண்டு வந்து சிந்தித்துப் பார்க்கமாட்டான்; அதைத் தேடவும் மாட்டான்!
அல்லாஹ்வுடையவும், அவனது தூதருடையவும் திருப்திக்காக இவன் திருப்தி கொள்ளமாட்டான்; அத்தோடு, அல்லாஹ்வுடையவும் அவனது தூதருடையவும் கோபத்திற்காக இவன் கோபம் கொள்ளவும் மாட்டான். மாற்றமாக, தனது மனோ இச்சையின் திருப்திக்கேற்ப ஏதும் நடந்துவிட்டால் இவன் திருப்தி கொள்வான்; தனது மனோ இச்சை கோபப்பட்டதற்கு அமைய நடந்த ஒன்றுக்காகவே இவன் கோபமும் கொள்வான்!”.
{ நூல்: 'மின்ஹாஜுஸ் ஸுன்னா அந்நபவிய்யா' , 5/257 }
قال شيخ الإسلام إبن تيمية رحمه الله تعالى:-
[ وصاحب الهوى يعميه الهوى ويصمه، فلا يستحضر ما لله ورسوله في ذلك، ولا يطلبه. ولا يرضى لرضا الله ورسوله، ولا يغضب لغضب الله ورسوله، بل يرضى إذا حصل ما يرضاه بهواه، ويغضب إذا حصل ما يغضب له بهواه ]
{ منهاج السنة النبوية، ٥/٢٥٧ }
6)மரண வேளையில் மார்க்க அறிஞர்களின் நிலை!!
🎇இமாம் முஸனீ (ரஹ்) கூறுகின்றார்கள்:
மரணம் ஏற்பட்ட நோயில் இருந்த இமாம் ஷாபிfஈ (ரஹ்) அவர்களிடம் சென்ற நான், “அப்துல்லாஹ்வின் தந்தை (ஷாபிfஈ) அவர்களே! காலைப்பொழுதை எப்படி நீர் அடைந்து கொண்டீர்?”என்று கேட்டேன். உடனே தன் தலையை உயர்த்திய அவர்,
“இவ்வுலகிருந்து பயணிக்கவிருப்பவனாக, எனது சகோதரர்களைப் பிரியவிருப்பவனாக, என் தீய வினையைச் சந்திக்கவிருப்பவனாக, அல்லாஹ்விடம் செல்லவிருப்பவனாக காலைப்பொழுதை நான் அடைந்துள்ளேன்!. எனது உயிர் சுவர்க்கம் சென்று, அதில் நான் இன்பத்தில் திளைத்திருப்பேனா? அல்லது நரகம் சென்று, அதில் நான் கவலையில் மூழ்கிப் போய் விடுவேனா?” என்று எனக்குத் தெரியாது என்று சொல்லி விட்டு அழுதார்கள்.
{ நூல்: 'சியரு அஃலாமின் நுபbலா' , 10/75 }
قال الإمام المزني رحمه الله تعالى:-
دخلت على الشافعي في مرضه الذي مات فيه، فقلت: *" يا أبا عبدالله! كيف أصبحت؟"*
فرفع رأسه وقال: *" أصبحت من الدنيا راحلا، ولإخواني مفارقا، ولسوء عملي ملاقيا، وعلى الله واردا، ما أدري روحي تصير إلى جنة فاهنيها، أو إلى نار فاعزيها!"* ثم بكى ...
{ سير أعلام النبلاء، ١٠ /٧٥ }
🎇 'ஆமிர் பின் அப்துல்லாஹ் (ரஹ்)' அவர்கள் மரணத்தறுவாயில் இருந்த போது அழுதார்கள்.
“போராடும் இதுபோன்ற இடத்துக்காகவே நற்செயல்களில் ஈடுபடுவோர் ஈடுபட்டுக்கொள்ளட்டும்; யாஅல்லாஹ்! நற்செயல்கள் புரிவதில் ஏற்பட்ட எனது குறைபாடு, எனது பொடுபோக்கு ஆகியவற்றுக்காக உன்னிடம் நான் பிழை பொறுக்கத் தேடுகிறேன். எனது பாவங்கள் அனைத்திலிருந்தும் உன்னிடம் நான் பாவமன்னிப்புத் தேடிக் கொள்கிறேன். உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை!”என்று கூறினார்கள்.
பின்னர், மரணிக்கின்ற வரைக்கும் மேற்படி வார்த்தையை அடிக்கடி தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார்கள்!.
{ நூல்: 'லதாஇபுfல் மஆரிப்f ' , பக்கம்: 586 }
لما احتضر عامر بن عبدالله رحمه الله تعالى بكى، وقال : *"لمثل هذا المصرع فليعمل العاملون، اللهم إني استغفرك من تقصيري وتفريطي، وأتوب إليك من جميع ذنوبي، لا إله إلا الله!"*
ثم لم يزل يرددها حتى مات.
{ لطائف المعارف، ص - ٥٨٦ }
7)பணிவு என்றால் என்ன? அறிஞர்கள் சொல்வதைக் கேளுங்கள்!!
இஸ்லாமியப் பேரறிஞர் இமாம் இப்னு கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) கூறுகின்றார்கள்:
🌼இமாம் புfழைல் இப்னு இயாழ் (ரஹ்) அவர்களிடம், பணிவு என்றால் என்ன? என்று வினவப்பட்டது. அதற்கு அவர்கள், “சத்தியத்தி்ற்குப் பணிந்து நடப்பதும், அதற்குக் கட்டுப்படுவதும், யாரிடமிருந்து அது வந்தாலும் அதை ஏற்றுக்கொள்வதுமாகும்”என்று பதிலளித்தார்கள்.
🌼இமாம் ஜுனைத் பின் முஹம்மத் (ரஹ்) கூறுகின்றார்கள்: “பணிவு என்பது இரக்க சுபாவத்துடன் மென்மையாக நடப்பதும், வழிப்பட்டு, கட்டுப்பட்டு நடப்பதுமாகும்!”
🌼இமாம் இப்னு அதாஃ (ரஹ்) கூறுகின்றார்கள்: “பணிவு என்பது, சத்தியம் யாரிடமிருந்து வந்தாலும் அதை ஏற்றுக்கொள்வதாகும். பணிவில்தான் கண்ணியமே இருக்கிறது! எவர் அதை பெருமையில் தேடுகிறாரோ அவர், நெருப்பில் தண்ணீரைத் தேடியவரைப் போலாவார்!”
{ நூல்: 'மதாரிஜுஸ் ஸாலிகீன்', 2/314 }
قال العلامة إبن القيم الجوزية رحمه الله تعالى:
🌼⬅ سئل الفضيل بن عياض عن التواضع؟ فقال: *"يخضع للحق، وينقاد له، ويقبله ممّن قاله!"*
🌼⬅ وقال الجنيد بن محمد: *"هو خفض الجناح، وبين الجانب!"*
🌼⬅ وقال ابن عطاء : *"هو قبول الحق ممّن كان! والعز فى التواضع. فمن طلبه فى الكبر فهو كتطلب الماء من النار "*
{ مدارج السالكين ، ٢/ ٣١٤ }
8)உலக விடயங்களில் எமக்கு ஏற்படுகின்ற ரோஷம், மார்க்க விடயங்களில் ஏன் ஏற்படுவதில்லை?
பதவி, அந்தஸ்து, சொத்து, பிரபல்யம் போன்றவற்றில் எம்மை முந்திவிட்ட ஒரு மனிதர் விடயத்தில் நாமெல்லாம் சில நேரங்களில் ரோஷம் கொள்கிறோம். என்றாலும், தொழுகையில் முதல் வரிசையில் எம்மை முந்திவிட்டவர் , அல்லது அல்குர்ஆன் மனனத்தில் எம்மை முந்திவிட்டவர் விடயத்தில் நாம் ரோஷம் கொள்ளாதிருக்கின்றோம். “காரணம் தெளிவானது.... ! உலக மோகமும், மறுமையை மறந்ததும்தான் இதற்கான காரணமாகும்.”
அல்லாஹ் கூறுகின்றான்: “எனினும், நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையே தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள். மறுமைதான் மிகச் சிறந்ததும், நிலையானதுமாகும்”.
(அல்குர்ஆன், 87:16,17)
{ முகநூலில் ஒர் அரபுச் சகோதரர் }
قد نغار من إنسان سبقنا إلى منصب أو مال أو شهرة...! ولكن لا نغار إذا سبقنا إلى الصف الأول فى الصلاة أو حفظ القرآن ! والسبب واضح...! *عشق الدنيا، ونسيان الآخرة*.
قال الله تعالى: [ بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى ] {سورة الأعلى، الآية - ١٦ ،١٧ }
மேலும், அல்லாஹ் கூறுகிறான்: “உங்களுக்கு வழங்கப்பட்ட எதுவானாலும் அது இவ்வுலக வாழ்க்கையின் சிற்றின்பமே! எனினும் நம்பிக்கை கொண்டு, தமது இரட்சகன் மீது முழுமையாக நம்பிக்கை வைப்போருக்கு அல்லாஹ்விடமிருப்பதோ மிகச் சிறந்ததும், நிலையானதுமாகும்”.
(அல்குர்ஆன், 42:36)
9)மார்க்கத்தில் ஏவல் ஒன்று வந்து விட்டால் பின்பற்றுங்கள்! தடை ஒன்று வந்து விட்டால் தவிர்ந்து கொள்ளுங்கள்!!
இஸ்லாமியப் பேரறிஞர் இமாம் முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:
“மார்க்கத்தில் தடை வந்து விட்டால் அதைத் தவிர்ந்து கொள். அது, 'ஹராம்' என்ற கருத்திலா? அல்லது 'மக்ரூஹ்' என்ற கருத்திலா வந்திருக்கின்றது? என்றெல்லாம் நீ கேட்காதே! செய்யும் படியாக ஏவப்பட்டு விடயம் ஒன்று வந்து விட்டால் அதைப் பின்பற்றிக்கொள். அது, 'கட்டாயம்' என்ற கருத்திலா? அல்லது, 'விரும்பத்தக்கது' என்ற கருத்திலா வந்திருக்கின்றது? என்றெல்லாம் நீ கேட்காதே! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது தோழர்களுக்கு ஏதாவது ஒன்றை ஏவிவிட்டால், அல்லாஹ்வின் தூதரே! இதைக் கட்டாயம் செய்ய வேண்டும் என்றா அல்லது விரும்பினால் செய்யலாம் என்றா நீங்கள் நாடுகிறீர்கள்? என்றெல்லாம் கேட்காமல் உடனடியாகவே அதை அவர்கள் செய்து விடுவார்கள்!.
அல்லாஹ்வுடைய, அவனது தூதருடைய கட்டளைக்குக் கட்டுப்படுவதில் கடும்போக்குடைய மனிதர்கள்தான், மனிதர்களிலேயே ஈமானால் அதிக பலமிக்கவர்களாவர்”.
அல்லாஹ் கூறுகிறான்: “அவர்களுக்கிடையே தீர்ப்பளிக்க அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் அவர்கள் அழைக்கப்பட்டால் 'செவியேற்றோம்; கட்டுப்பட்டோம்!' என்பதே இறை விசுவாசிகளின் வார்த்தையாக இருக்கும். அவர்கள்தான் வெற்றியாளர்கள்!”
(அல்குர்ஆன், 24:51)
{ நூல்: 'ஸில்ஸிலது லிகாஇல் பாbபில் மப்fதூஹ்' , பக்கம்:106 }
قال العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:
[ إذا ورد النهي فاجتنبه! ولا تسأل هل هو للتحريم أو للكراهة؟ وإذا ورد الأمر فاتبعه! ولا تسأل هل هو للوجوب أو للاستحباب؟
فالصحابة رضي الله عنهم كانوا إذا أمرهم الرسول صلى الله عليه وسلم بشيئ لا يقولون: يا رسول الله! هل قصدت الوجوب أو الاستحباب؟ يفعلون مباشرة. وأشد الناس انقيادا لأمر الله ورسوله هم أقوى الناس إيمانا. قال الله تعالى: "إنّما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا واطعنا وأولئك هم المفلحون ] (سورة النور ، الآية - ٥١ )
{ سلسلة لقاء الباب المفتوح، ص ١٠٦ }
10)நேரத்தை வீணடித்து கைசேதத்தை வாங்காதீர்கள்!!
அல்லாமா அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ் (ரஹ்) கூறுகின்றார்கள்:
“நேரம்தான் வாழ்க்கையாகும். நேரத்தை வீணடித்தவர், வாழ்க்கையையே தொலைத்து விட்டார். வாழ்க்கையைத் தொலைத்தவர் கைசேதப்படுவார்; அக்கைசேதம் அவருக்குப் பயனளிக்காது!!
{ நூல்: 'மஜ்மூஉல் பfதாவா' ,16/261 }
قال العلامة عبد العزيز بن عبدالله بن باز رحمه الله تعالى: [ الوقت هو الحياة! ومن أضاع وقته أضاع حياته، ومن أضاع حياته ندم، ولا تنفعه الندامة! ].
{ مجموع الفتاوى، ١٦/٢٦١ }
🎇 அல்லாஹ் கூறுகிறான்:
“முடிவில், அவர்களில் ஒருவனுக்கு மரணம் வந்து விட்டால், எனது இரட்சகனே! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னை நீ (உலகிற்கு) திருப்பி அனுப்புவாயாக! எனக் கூறுவான். நிச்சயமாக அது அவன் கூறும் வெற்று வார்த்தையேயாகும்.அவர்கள் எழுப்பப்படும் நாள் வரை அவர்களுக்கு முன்னால் ஒரு திரை இருக்கின்றது”.
(அல்குர்ஆன், 23:99,100 )
✍தமிழில்✍
அஷ்ஷெய்க் மெளலவி
N.P.ஜுனைத் காஸிமி,மதனி
இன்ஷா அல்லாஹ் தொடரும்......✍
@Islaam For All Peoples
Like👍 And Follow Our Islaam For All Peoples Fb page:
https://www.facebook.com/islaam.community/
Subscribe Our Islaam For All Peoples YouTube channel:
https://www.youtube.com/channel/UC0Um0iqVeLLCZeHJGZM97zA
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர் - 2
💢💢💢💢💢💢💢💢💢💢
http://islaamforallpeoples.blogspot.in/2018/03/1_23.html
🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர் - 3
💢💢💢💢💢💢💢💢💢💢
http://islaamforallpeoples.blogspot.in/2018/03/1-f-f-f.html
🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵
Comments
Post a Comment