ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-2
بسم الله الرحمن الرحيم
ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-2 (23.03.2018)
தமிழில் அஷ்ஷெய்க் மெளலவி N.P.ஜுனைத் காஸிமி,மதனி.
1)கவலைகள் எங்கிருந்து வருகின்றன?
இஸ்லாமியப் பேரறிஞர் இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்) கூறுகின்றார்கள்:
“கவலைகள், துன்பங்கள், சஞ்சலங்கள் ஏற்படுவதெல்லாம் இரண்டு வழிகள் மூலமாகத்தான்!
ஒன்று:
உலகத்தில் மோகம் கொண்டு, அதன்மேல் பேராசை வைத்தல்.
இரண்டு:
நற்காரியங்களிலும், வழிபாட்டிலும் காணப்படுகின்ற குறைபாடு.
{ நூல்: 'உத்ததுஸ் ஸாபிbரீன்' பக்கம்: 256 }
قال العلامة إبن القيم رحمه الله تعالى: [ إنما تكون الهموم والغموم والأحزان من جهتين :-
*إحداهما*: الرغبة فى الدنيا والحرص عليها.
*الثاني*: التقصير في أعمال البر والطاعة.
{ عدة الصابرين، ص - ٢٥٦ }
2)உச்சகட்ட மடமைத்தனம் இதைவிட வேறென்ன இருக்கிறது!!
இஸ்லாமியப் பேரறிஞர் இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்) கூறுகின்றார்கள்:
பாவங்கள் இருக்கின்ற அருட்கொடைகளை இல்லாமலாக்கி, கிடைக்கின்ற அருட்கொடைகளைத் துண்டித்து விடுகின்றன! அதாவது, இருப்பதை நீக்கி கிடைப்பதைத் தடுக்கின்றன! பெறுவதற்கான காரணி, அழித்து விடும் ஆபத்துஎன்றவாறு ஒவ்வொன்றுக்கும் காரணியையும் ஆபத்தையும் அல்லாஹ் ஆக்கியே வைத்திருக்கின்றான். அவன் அருட்கொடைகளைப் பெற்றுக்கொள்ளும் காரணிகளில் பிரதானமாக அவனுக்கு வழிபடுவதையும், அவற்றைத் தடுக்கும் ஆபத்துக்களில் முக்கியமானதாக அவனுக்கு மாறு செய்வதையும் அவன் ஏற்படுத்தியிருக்கின்றான். அல்லாஹ் தனது அடியான் மீது புரிந்துள்ள தனது அருட்கொடையைப் பாதுகாக்க நாடினால் அதில் அவனுக்கு வழிப்பட்டு நடப்பதன் மூலமே அதைப் பாதுகாக்கலாம் என்ற உணர்வை அம்மனிதனுக்கு அவன் உண்டாக்குவான். அருட்கொடையை அம்மனிதனை விட்டும் நீக்கி விட அல்லாஹ் நாடிவிட்டால், பாவத்தின் மூலம் அவனுக்கு மாறு செய்கின்ற வரைக்கும் அம்மனிதனை அவன் கேவலப்படுத்துவான்.
தாம் செய்த பாவங்கள் மூலம் அல்லாஹ்வின் அருட்கொடைகள் அகற்றப்பட்ட மனிதர்களின் செய்திகளைக் கேள்விப்பட்டும், தன்னிலும், பிறரிலும் இது நடந்திருப்பதை அவன் நேரடியாகப் பார்த்திருந்தும் அல்லாஹ்வுக்கு மாறு செய்கின்ற விடயத்தில் அவன் நிலைத்திருப்பதுதான் ஆச்சரியமான விஷயமாகும்!
இத்தகையவன்,மொத்தத்திலிருந்து தான் விதிவிலக்களிக்கப்பட்டவன் போலவும், அல்லது பொதுவானதிலிருந்து தான் குறிப்பானவன் போலவும், மற்றவர்கள் விடயத்தில்தான் இது நடைமுறையாகுமே தவிர தன் விடயத்தில் அல்ல என்பதாகவும், பிற மக்களுக்குத்தான் இதெல்லாம் வந்து சேரும்; தனக்கல்ல! என்பது போன்றும் அவன் எண்ணிக்கொள்கிறான். இதை விட உச்சகட்ட மடமைத்தனம் வேறென்னதான் இருக்கிறது?!
ஆன்மாவுக்குச் செய்யும் அநியாயம் இதற்கு மேலால் வேறென்னதான் இருக்கிறது?! தீர்ப்பு அல்லாஹ்விடமே உள்ளது!”
{ நூல்: 'அல்ஜவாபுbல் காபீf ',பக்கம்:159 }
قال العلامة إبن القيم الجوزية رحمه الله تعالى: [ المعاصي تزيل النعم الحاضرة، وتقطع النعم الواصلة، فتزيل الحاصل، وتمنع الواصل. وقد جعل الله سبحانه لكل شيئ سببا وآفة: سببا يجلبه، وآفة تبطله. فجعل أسباب نعمه الجالبة لها طاعته، وآفتها المانعة منها معصيته. فإذا أراد حفظ نعمته على عبده ألهمه رعايتها بطاعته فيها، وإذا أراد زوالها عنه خذله حتى عصاه بها.
ومن العجيب علم العبد بذلك مشاهدة بنفسه وغيره، وسماعا لما غاب عنه من أخبار من أزيلت نعم الله عنهم بمعاصيه وهو مقيم على معصية الله، كأنه مستثنى من هذه الجملة أو مخصوص من هذا العموم. وكأن هذا أمر جار على الناس لا عليه، وواصل إلى الخلق لا إليه! فأي جهل أبلغ من هذا؟ وأي ظلم للنفس فوق هذا؟ فالحكم لله العلي الكبير ]
{ الجواب الكافي، ص - ١٥٩ }
3)உடல் நோய் சிகிச்சைக்குக் காட்டப்படும் அக்கறை, உள நோய் சிகிச்சைக்கு ஏன் காட்டப்படுவதில்லை?
இஸ்லாமியப் பேரறிஞர் இமாம் முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:-
“உடல் நோய் ஒன்று உனக்கு ஏற்பட்டுவிட்டால் உன் சிகிச்சைக்காக ஒவ்வொரு வைத்தியரின் கதவையும் நீ போய் தட்டுகிறாய். அறுவைச் சிகிச்சையின் போது உனக்கு ஏற்படும் வலி, மருந்தின் கசப்பு ஆகியவற்றுக்காக நீ பொறுமையாக இருக்கிறாய். நீ ஏன் பாவங்கள் மூலம் ஏற்படுகின்ற உன் உள நோய்க்கு இது போன்று செய்யாமல் இருக்கின்றாய்?”
( நூல்: அகீதது அஹ்லிஸ் ஸுன்னா வல் ஜமாஆ , பக்கம்:78,96 }
قال العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى: [ إذا أصبت بمرض جسمي طرقت باب كل طبيب لعلاجك، وصبرت على ما ينالك من ألم عملية الجراحة، وعلى مرارة الدواء، فلماذا لا تفعل مثل ذلك في مرض قلبك بالمعاصي؟ ]
{ عقيدة أهل السنة والجماعة، ص - ٧٨، ٩٦ }
4)கேடுகெட்ட காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை!!
இஸ்லாமியப் பேரறிஞர் இமாம் முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) அவர்களிடம் காதலர் தினம் குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள்:-
“காதலர் தினக் கொண்டாட்டம் சில காரணங்களுக்காகக் கூடவே கூடாது......
முதலாவது:
இது புதிதாக உருவாக்கப்பட்ட நூதனமானதோர் கொண்டாட்டமாகும். இஸ்லாமிய ஷரீஅத்தில் எதுவித அடிப்படையும் இதற்குக் கிடையாது.
இரண்டாவது:
இது, மோசமான காதல் கலாச்சாரத்திற்கும் அழிவிற்கும் அழைப்பு விடுக்கிறது.
மூன்றாவது:
அல்லாஹ் திருப்தி கொண்ட ஸலபுfஸ் ஸாலிஹீன்களின் வழிமுறைக்கு முரண்படும் கேவலமான இது போன்ற விடயங்களில் உள்ளத்தை ஈடுபடுத்தும்படியும் இது அழைப்பு விடுக்கிறது!
எனவே, இத்தினத்தில் பெருநாளுக்குரிய அடையாளச் சின்னங்களாக உள்ள எந்த ஒன்றும் செய்யப்படுவது ஆகாத விடயமாகும். அது உணவுகள், அல்லது குடிபானங்கள், அல்லது ஆடைகள், அல்லது ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் அன்பளிப்புகள் ஆகியவற்றிலோ, அல்லது இவையல்லாதவற்றிலோ இருந்தாலும் சரியே! ஒரு முஸ்லிம் தனது மார்க்கத்தைப் பின்பற்றுவதன் மூலம் கண்ணியமானவனாகவே இருந்துகொள்ள வேண்டும். கத்தித் திரியும் ஒவ்வொருவனுடைய கூற்றையும் பின்பற்றுபவனாக அவன் இருந்துவிடக் கூடாது.
வெளியில் தெரிந்தும், தெரியாமல் மறைந்தும் இருக்கக்கூடிய குழப்பங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் முஸ்லிம்களைப் பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் நான் கேட்கிறேன்!”.
{ நூல்: 'மஜ்மூஉ பfதாவா வ ரஸாஇலுல் உஸைமீன்' , 16/ 199 }
قال العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى: [ الإحتفال بعيد الحب لا يجوز لوجوه:-
*الأول:*أنه عيد بدعي لا أساس له فى الشريعة.
*الثاني:*أنه يدعو إلى العشق والغرام.
*الثالث:*أنه يدعو إلى اشتغال القلب بمثل هذه الأمور التافهة المخالفة هادي السلف الصالح رضي الله عنهم.
فلا يحل أن يحدث في هذا اليوم شيئ من شعائر العيد سواء كان فى المآكل أو المشارب أو الملابس أو التهادي أو غير ذلك. وعلى المسلم أن يكون عزيزا بدينه، وأن لا يكون إمّعة يتبع كل ناعق. أسأل الله تعالى أن يعيذ المسلمين من كل الفتن ما ظهر منها وما بطن.... ]
{ مجموع فتاوى ورسائل العثيمين، ١٦/١٩٩ }
5)உங்கள் தவறுகளைத் திருத்தும் உபகாரத்தைச் செய்வோரை நேசியுங்கள்!!
இஸ்லாமியப் பேரறிஞர் இமாம் முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:
“உனக்கு உபகாரம் செய்யும் ஒவ்வொருவர் விடயமும், குறிப்பாக மார்க்கத்தில், உபதேசத்தில், நன்மையை ஏவுதலில், தீமையைத் தடுத்தலில் உனக்கு உபகாரம் செய்யும் ஒவ்வொருவர் விடயமும் நீ அவருடன் நேசம் கொள்ள வேண்டும் என்பதையும், அவரோடு நீ அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பதையுமே வலியுறுத்துகிறது.
இதற்கு மாற்றமாக, சில மனிதர்கள் இன்று செய்துகொண்டிருக்கும் விடயம் யாதெனில், அவர்களில் ஒருவருக்கு நீ நன்மையைக்கொண்டு ஏவிவிட்டால், இன்னும் தீமையை விட்டும் அவரை நீ தடுத்துவிட்டால், அல்லது நன்மையொன்றின்பால் அவரை நீ அழைத்தால், அல்லது நேர்வழியொன்றின் பக்கம் அவருக்கு நீ வழிகாட்டினால் அது, அவருடைய உள்ளத்தில் உனக்கெதிரான கோபத்தையே சில வேளைகளில் தூண்டி விடுகிறது. இது புத்திக்கே மாற்றமானதாகும்; மார்க்கத்திற்கும் முரணானதாகும்!”.
{ நூல்: 'ஷர்ஹு இக்திழாயிஸ் ஸிராதில் முஸ்தகீம்' , பக்: 279 }
قال العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى: [ كل من أحسن إليك ولا سيّما فى الدين والنصيحة والأمر بالمعروف والنهي عن المنكر، فإن هذا يقتضي منك أن تحبّه وتودّه.
خلافا لما يفعل بعض الناس الآن إذا أنت أمرته بالمعروف ونهيته عن المنكر، أو دعوته إلى خير، أو أرشدته إلى هدى فإنه قد يحمل في قلبه عليك بغضا. وهذا خلاف العقل وخلاف الدين! ]
{ شرح إقتضاء الصراط المستقيم، ص - ٢٧٩ }
6)மனோ இச்சைவாதியை அறிந்து கொள்வது எப்படி?
சவூதி அரேபிய நாட்டு அறிஞர் அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:
“சத்தியவாதி தவறிழைத்து விட்டால், 'ஆதாரத்தில் நீர் தவறிழைத்து வி்ட்டீர்; சுன்னாவில் நீர் தவறிழைத்து விட்டீர்!' என்று அவரிடம் நீ கூறும்போது அதை அவர் ஏற்றுக்கொள்வார். காரணம், அவருடைய நோக்கமே சத்தியம்தான். தனது கருத்துக்கு வலு சேர்க்க வேண்டும் என்பது அவருடைய நோக்கமே அல்ல!
ஆனால், மனோ இச்சைவாதியிடம், 'நீ தவறிழைத்து விட்டாய்!' என்று நீ சொல்லிவிட்டால் நிச்சயமாக அவன் கோபப்படுவான்; கடுமையாகவும் நடந்து கொள்வான். இது மனோ இச்சைவாதிகளின் அடையாளமாகும். ஏனெனில், இவர்கள் ஒவ்வொருவரும் விரும்புவது தமது மனோ இச்சைக்கு வலு சேர்க்க வேண்டும் என்றுதான்!”.
{ நூல்: 'ஷர்ஹுஸ் ஸுன்னா லில்பbர்பbஹாரீ' , பக்கம்: 56 }
அல்லாஹ் கூறுகின்றான்:
“நிச்சயமாக காரூன் மூசாவின் சமூகத்தைச் சார்ந்தவனாக இருந்தான். அவன் அவர்கள் மீது வரம்பு மீறினான். மேலும், அவனுக்கு நாம் பல பொக்கிஷங்களை வழங்கியிருந்தோம். நிச்சயமாக, அவற்றின் திறவுகோல்கள் பலமான ஒரு குழுவினருக்கும் (சுமப்பதற்குப்) பளுவாக இருந்தன. 'நீ ஆணவம் கொள்ளாதே! ஆணவம் கொள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கமாட்டான்' என்று அவனது சமூகம் அவனுக்குக் கூறியதை (நபியே நீர் எண்ணிப்பார்ப்பீராக)
மேலும், அல்லாஹ் உனக்கு வழங்கியவற்றில் நீ மறுமை வீட்டைத் தேடிக்கொள்! இன்னும் இவ்வுலகில் உனது பங்கை நீ மறந்து விடவும் வேண்டாம். அல்லாஹ் உனக்கு உபகாரம் செய்தது போன்று நீயும் உபகாரம் செய்வாயாக! மேலும், பூமியில் நீ குழப்பத்தை நாடாதே! நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் விளைவிப்பவர்களை நேசிக்கமாட்டான் (என்றும் கூறினர்).
அதற்கவன், 'இது எனக்கு வழங்கப்பட்டதெல்லாம் என்னிடமுள்ள அறிவின் மூலமேயாகும்!' எனக் கூறினான்”.
(அல்குர்ஆன், 28:76 -78)
மேலும் அல்லாஹ் கூறுகிறான்:
“'அல்லாஹ்வை அஞ்சிக்கொள்!' என அவனிடம் கூறப்பட்டால் (அவனது) வறட்டு கெளரவம் அவனைப் பாவத்தில் தள்ளி விடுகின்றது. அதனால் நரகமே அவனுக்குப் போதுமானதாகும். தங்குமிடத்தில் அது மிகக் கெட்டதாகும்”.
(அல்குர்ஆன், 2: 206)
7)பாவங்கள், உள்ளத்தை பலவீனப்படுத்தி இறைத்தொடர்பைத் துண்டித்து விடும்!
இஸ்லாமியப் பேரறிஞர் இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்) கூறுகின்றார்கள்:
“அல்லாஹ்வின் பக்கமும், மறுமை வீட்டின் பக்கமும் சென்றுகொண்டிருக்க வேண்டிய உள்ளத்தின் பயணத்தை பாவங்கள் பலவீனப்படுத்தி விடுகின்றன; அல்லது அதற்குத் தடையை ஏற்படுத்தி விடுகின்றன; அல்லது செல்ல விடாமல் அதைத் தடுத்து நிறுத்தி விடுகின்றன; மனிதனை அல்லாஹ்வின்பால் ஒர் எட்டுக்கூட எடுத்து வைக்க விடாமல் செய்து விடுகின்றன.
ஏனெனில், உள்ளம் பலமடைந்திருக்கின்ற போதுதான் அது அல்லாஹ்வின் பக்கம் பயணிக்க முடியும்! பாவங்கள் மூலம் அது நோயுற்றுவிட்டால், அவனிடம் கொண்டு செல்லும் அப்பலமும் பலவீனமடைந்து விடும். அப்பலம் முழுமையாக இல்லாமல் போய்விட்டால், அதன் பின்னர் பாவமன்னிப்புக் கேட்பதே கஷ்டமாகிப் போய்விடும் அளவுக்கு அல்லாஹ்வின் தொடர்பை விட்டும் அவனை முற்றாகவே துண்டித்து விடும். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!.
ஒன்றில், பாவம் உள்ளத்தை மரணிக்க வைக்கும்; அல்லது பயப்படும் அளவிற்கு அதை நோயாக்கி விடும்; அல்லது உள்ளத்தின் பலத்தை அது பலவீனமாக்கும். இது நடக்கவே செய்யும்! முடிவில், இந்த உள பலவீனம் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரிய துக்கம், கவலை, இயலாமை, சோம்பல், கோழைத்தனம், கஞ்சத்தனம், கடன் சுமை, பிற மனிதர்களின் அடக்குமுறைஆகிய எட்டு விடயங்களைச் செய்யும் அளவுக்குக் கொண்டு போய் முடிக்கும்!”
{ நூல்: 'அல்ஜவாபுbல் காபீf', பக்கம்: 112 }
قال الإمام العلامة إبن القيم الجوزية رحمه الله تعالى: [ المعاصي تضعف سير القلب إلى الله والدار الآخرة، أو تعوقه، أو توقفه وتقطعه عن السير، فلا تدعه يخطو إلى الله خطوة.
والقلب إنما يسير إلى الله بقوته، فإذا مرض بالذنوب ضعفت تلك القوة التي تسيره، فإن زالت بالكلية إنقطع عن الله إنقطاعا يبعد تداركه ( أي يصعب التوبة بعده)، والله المستعان!
فالذنب إما أن يميت، أو يمرضه مرضا مخوفا، أو يضعف قوته ولا بد. حتى ينتهي ضعفه إلى الأشياء الثمانية التي إستعاذ منها النبي صلى الله عليه وسلم، وهي: *" الهمّ والحزن والعجز والكسل والجبن والبخل وضلع الدين وغلبة الرّجال"*]
{ الجواب الكافي، ص - ١١٢ }
8)உண்மையான கண்ணியம், அந்தஸ்து, சந்தோசம் இறையச்சத்தில்தான் இருக்கிறது!
இஸ்லாமியப் பேரறிஞர் இமாம் முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:
“அல்லாஹ்விடம் கண்ணியமானவனாகவும், அவனிடம் நல்ல அந்தஸ்துடனும் இருக்க நீ விரும்பினால் இறையச்சத்தைக் கடைப்பிடித்துக்கொள். அல்லாஹ்வுக்காக வேண்டி அதிக அச்சத்தோடு வாழ்பவனாக மனிதன் இருக்கின்ற போதெல்லாம் அல்லாஹ்விடம் அவன் அதிக கண்ணியத்திற்குரியவனாகவே இருந்துகொண்டிருப்பான்!”.
{ நூல்: 'ஷர்ஹு ரியாழிஸ் ஸாலிஹீன்' , 1/523 }
قال الإمام العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:
[ فإذا كنت تريد أن تكون كريما عند الله وذا منزلة عنده فعليك بالتقوى. فكلما كان الإنسان لله أتقى كان عنده أكرم ]
{ شرح رياض الصالحين ١/ ٥٢٣ }
இஸ்லாமிய மார்க்க மேதை இமாம் இப்னுல் ஜவ்ஸீ (ரஹ்) கூறுகின்றார்கள்:
“காலம் ஒரே நிலையில் நிலைத்திருக்காது என்பதை நீ புரிந்து கொள்! ஒரு தடவை அது வறுமையாகவும், மற்றொரு தடவை அது செல்வச் செழிப்பாகவும், ஒரு தடவை அது கண்ணியமாகவும், மறு தடவை அது இழிவானதாகவும் இருக்கும். ஆனால், எல்லா நிலையிலும் ஒரேயொரு அடிப்படையில் தொடர்ந்து நிலைத்திருப்பவனே சந்தோசமானவன்; சீதேவி ஆவான்! அதுதான், அல்லாஹ்வின் அச்சம் ஆகும்”.
{ நூல்: 'ஸைதுல் ஹாத்திர்', பக்கம்:118 }
قال الإمام العلامة إبن الجوزي رحمه الله تعالى:
[ إعلم أن الزمان لا يثبت على حال. فتارة فقر، وتارة غنى! وتارة عزّ، وتارة ذلّ! . فالسعيد: من لازم أصلا واحدا على كل حال *وهو تقوى الله* ].
{ صيد الخاطر ، ص - ١١٨ }
9)சிறைக்கூடத்தை கல்விக்கூடமாக மாற்றிய அறிஞர்!!
இஸ்லாமிய மார்க்க மேதை 'ஷைகுல் இஸ்லாம்' இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள்
சிறைவாசம் அனுபவிப்பதற்காக சிறைக்குள் சென்ற போது, அங்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த கைதிகள் தொழுகைகளைப் பாழ்படுத்தும் 'செஸ்' (chess), மற்றும் தாயக்கட்டு போன்ற பலவகை விளையாட்டுக்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததைக் கண்டார்கள். உடனே, அவர்களுக்கு மறுப்புத் தெரிவித்துவிட்டு, தொழுகையில் கண்டிப்பாகக் கவனம் செலுத்தும்படி அவர்களைப் பணித்ததோடு, நல்ல விடயங்களில் அவர்களுக்கு ஆர்வமும் ஊட்டினார்கள். முடிவில், தடுப்புக்காவலில் இருந்து கொண்டு கல்வியிலும் மார்க்கத்திலும் அவர்கள் ஈடுபாடு காட்டியது பாடசாலைகளில் இருந்து கொண்டு அவர்கள் ஈடுபாடு காட்டுவதை விடச் சிறப்பானதாக இருந்தது. இதனால், தடுத்து வைக்கப்பட்டவர்களில் விடுதலை செய்யப்பட்ட ஒரு தொகையினர் இமாம் அவர்களுடன் சிறையில் தங்கியிருப்பதையே சிறப்புக்குரியதாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்!.
{ நூல்: 'அல்உகூதுத் துர்ரிய்யா', பக்கம்: 178 }
لمّا دخل شيخ الإسلام إبن تيمية السجن وجد المساجين مشتغلين بأنواع من اللعب كالشطرنج والنرد ونحو ذلك من تضييع الصلوات. فأنكر الشيخ عليهم، وأمرهم بملازمة الصلاة، ورغّبهم في أعمال الخير، حتى صار الحبس بما فيه من الإشتغال بالعلم والدين خيرا من المدارس! وصار خلق من المحابيس إذا أطلقوا يختارون الإقامة عنده (أي:البقاء فى السجن).
{ العقود الدرية، ص - ١٧٨ }
10)உன் உலக விவகாரங்களில் நீ காட்டும் பாதுகாப்பு அக்கறையை, உன் மார்க்க விவகாரங்களில் நீ ஏன் காட்டுவதில்லை?
சஊதி அரேபிய நாட்டு அறிஞர் அஷ்ஷெய்க் ஸாலிஹ் பின் பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:
“வியாபாரப் பொருளொன்றை நீ வாங்க விரும்பினால், கார் ஒன்றை வாங்க நீ விரும்பினால், அல்லது வீடு ஒன்றை, அல்லது ஏதேனும் பொருள் ஒன்றை நீ வாங்க விரும்பி, அதிலே உனக்கு அனுபவம் இல்லாவிட்டால் அனுபவசாலிகளிடம் சென்று அது குறித்துக் கேட்க, விசாரிக்க உனக்கு முடிகிறது! நீ தவறிழைத்து விடுவதையும், நீ நஷ்டமடைந்து விடுவதையும் பயந்துதானே இப்படியெல்லாம் செய்கிறாய்! எனவே, அனுபவசாலிகளிடமும், அதற்குரியவர்களிடமும் நீ கேட்டு தெளிவைப் பெற்றுக்கொள்; ஆலோசனையும் செய்து கொள்; இது, உலக விவகாரங்களில் நீ காட்டுகின்ற அக்கறை.
என்றாலும், மார்க்க விவகாரங்களில் நீ ஏன் அனுபவசாலிகளிடமும், அல்லாஹ்வை அஞ்சி நடப்பவர்களிடமும், அறிஞர்களிடமும் சென்று இப்படியெல்லாம் நீ கேட்காமல் இருக்கின்றாய்? உனது உலகப் பாதிப்புகளுக்காக இப்படியெல்லாம் பயந்து தவிர்ந்து கொள்ளும் நீ, உனது மறுமைப் பாதிப்புகளுக்குப் பயந்து ஏன் தவிர்ந்து கொள்ளாமல் இருக்கின்றாய்?”
{ அஷ்ஷெய்க் ஸாலிஹ் பின் பfவ்ஸான் அவர்களது இணையத்தளத்திலிருந்து... }
قال العلامة صالح بن فوزان الفوزان حفظه الله تعالى:
[ أنت إذا أردت أن تشتري سلعة، إذا أردت أن تشتري سيارة، أو تشتري بيتا، أو بضاعة وأنت ما عندك خبرة يمكن تذهب وتسأل أهل الخبرة! فاسأل أهل الخبرة، شاور واسأل أهل الصنف خوفا من أن تخطئ وأن تخسر، هذا في أمور الدنيا!
لماذا في أمور الدين ما تسأل أهل الخبرة وأهل التقوى وأهل العلم؟ لماذا تتحرز لدنياك، ولا تتحرز لدينك؟ ]
{ من موقع الشيخ صالح بن الفوزان الفوزان حفظه الله }
அல்லாஹ் கூறுகிறான்: “நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அறிவுள்ளோரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்”.
(அல்குர்ஆன், 16: 43)
மேலும் அல்லாஹ் கூறுகிறான்: “அவர்கள், தமது காரியங்களைத் தமக்கிடையே கலந்தாலோசனை செய்வார்கள்”.
(அல்குர்ஆன், 42:38)
மேலும் அல்லாஹ் கூறுகிறான்: “காரியங்களில் அவர்களுடன் நீர் ஆலோசனையும் செய்வீராக!”. (அல்குர்ஆன், 3:159)
✍தமிழில்✍
அஷ்ஷெய்க் மெளலவி
N.P.ஜுனைத் காஸிமி,மதனி
இன்ஷா அல்லாஹ் தொடரும்......✍
@Islaam For All Peoples
Like👍 And Follow Our Islaam For All Peoples Fb page:
https://www.facebook.com/islaam.community/
Subscribe Our Islaam For All Peoples YouTube channel:
https://www.youtube.com/channel/UC0Um0iqVeLLCZeHJGZM97zA
ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர் - 3
💢💢💢💢💢💢💢💢💢💢
http://islaamforallpeoples.blogspot.in/2018/03/1-f-f-f.html
🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵
Comments
Post a Comment