ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-6

بسم الله الرحمن الرحيم ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-6 (24.04.2018) தமிழில் அஷ்ஷெய்க் மெளலவி N.P.ஜுனைத் காஸிமி,மதனி. 1) சோதனைகளின் போது உறுதியாக இருத்தல்!! இமாம் மைமூன் பின் அல்அஸ்பbஃ (ரஹ்) கூறுகின்றார்கள்: ஈராக்கின் பக்தாத் நகரத்தில் நான் இருந்து கொண்டிந்த போது கூச்சல், அலறல் சத்தம் ஒன்றைக் கேட்டேன். “என்ன இது?” என்று நான் கேட்க, “அஹ்மத் இப்னு ஹன்பல் - ரஹ் - அவர்கள், ('அல்குர்ஆன் அல்லாஹ்வின் பேச்சு அல்ல; அது படைக்கப்பட்டது!' என்ற வழிகெட்ட முஃதஸிலா இயக்கக் கொள்கையை ஏற்றுக்கொள்ளும்படி துன்புறுத்தப்பட்டு) சோதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்!” என்று அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். உடனே, நானும் உள்ளே சென்று பார்த்தேன். அங்கே இமாம் அஹ்மதுக்கு சாட்டையால் ஒரு அடி அடிக்கப்பட்டபோது, “பிஸ்மில்லாஹ்" என்று சொன்னார்கள். இரண்டாவது அடி அடிக்கப்பட்டபோது, “லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பிbல்லாஹ்!” என்று ...