ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-5


بسم الله الرحمن الرحيم
ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-5 
(14.04.2018)

தமிழில் அஷ்ஷெய்க் மெளலவி N.P.ஜுனைத் காஸிமி,மதனி.

1)நற்காரியங்களுக்கு ஒத்துழைப்பு நல்கும் மனைவி கிடைத்தவன் பாக்கியசாலியாவான்!

           “அறிஞர்களின் அரசன்” (சுல்தானுல் உலமா) எனும் சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்பட்ட இமாம் 'இஸ் இப்னு அப்திஸ்ஸலாம் (ரஹ்)' அவர்கள் டமஸ்கஸ் நகரில் இருந்த போது அங்கே பொருட்களுக்கான கடும் விலையுயர்வு ஏற்பட்டது. இதனால் பெறுமதியான தோட்டங்கள் குறைந்த விலைக்கு விற்கப்படும் அளவுக்கும் நிலைமை மாறியிருந்தது.

          அந்நேரம், இமாம் இஸ் இப்னு அப்திஸ்ஸலாம் (ரஹ்) அவர்களிடம் அவர்களின் மனைவி தங்கம் ஒன்றைக் கொடுத்து, “கோடை காலத்தில் தங்கியிருந்து இளைப்பாறிக்கொள்வதற்கு எமக்காக தோட்டம் ஒன்றை வாங்குங்கள்!” என்று கூறினார்கள். அவரோ அத்தங்கத்தை எடுத்து, அதை விற்று விட்டு, அதன் பெறுமதிப் பணத்தை தர்மம் செய்து விட்டார்.

         அப்போது அவரிடம் அவரின் மனைவி, “கணவரே! எமக்காக வாங்கி விட்டீர்களா?” என்று கேட்டார். “ஆம்! சுவர்க்கத்தில் தோட்டம் ஒன்றை வாங்கி விட்டேன்” என்று சொல்லிய அவர், “மக்கள் கஷ்டத்தில் இருப்பதைக் கண்ட நான் அதன் பெறுமதிப் பணத்தை அவர்களுக்கு தர்மம் செய்து விட்டேன்!” என்றும் கூறினார். அப்போது அவரின் மனைவி, “ஜஸாகல்லாஹு ஹைரா!” என்று சொன்னார்கள்.

{ நூல்: 'அத்தபbகாதுஷ் ஷாபிfஇய்யா', பக்கம்: 214 }

                لما كان العزّ بن عبد السلام رحمه الله تعالى - الملقب بسلطان العلماء - في دمشق وقع فيها غلاء فاحش، حتى صارت البساتين تباع بالثمن القليل ....
فأعطته زوجته ذهبا وقالت: "أشر لنا بستانا نصيّف فيه!"
فأخذ الذهب وباعه وتصدّق بثمنه!!
فقالت: "يا سيدي إشتريت لنا؟"
قال: " نعم؛ بستانا فى الجنة! إني وجدت الناس في شدة فتصدقت بثمنه !!".
فقالت المرأة: " جزاك الله خيرا ".
 { الطبقات الشافعية ، ص - ٢١٤ }

2)உலக இன்பத்தில் மூழ்குவதைத் தவிர்க்க மண்ணறைகளுக்குச் செல்லுங்கள்!

             அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:

          “உனது உள்ளம் பொடுபோக்கு நிலையடைந்து, உன் மனம் உலக வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விடும்போதெல்லாம் மண்ணறைகளுக்கு நீ செல்! நேற்று பூமியில்  உன்னைப் போன்று சாப்பிட்டும், குடித்தும், இன்பங்களை அனுபவித்தும் கொண்டிருந்த அக்கூட்டத்தினராகிய அவர்கள் இப்போது எங்கே சென்று விட்டார்கள் என்று நீ சிந்தித்துப் பார்! இப்போது அவர்கள் தமது செயல்களைக்கொண்டு அடைமானம் வைக்கப்பட்டவர்களாக மாறிவிட்டார்கள். அவர்களது செயலைத் தவிர வேறெதுவும் அவர்களுக்குப் பயனளிக்காது!”

{ நூல்: 'ஷர்ஹு ரியாழிஸ் ஸாலிஹீன்', 3/473 }


            قال العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:
*[ كلما غفل قلبك واندمجت نفسك فى الحياة الدنيا؛ فاخرج إلى القبور، وتفكر في هؤلاء القوم الذين كانوا بالأمس مثلك على الأرض يأكلون ويشربون ويتمتعون، والآن أين ذهبوا؟ صاروا الآن مرتهنين بأعمالهم، لم ينفعهم إلا عملهم ]*
{ شرح رياض الصالحين، ٣/٤٧٣ }

 3)ஆதாரத்திற்குக் கட்டுப்படுவதே இறைவிசுவாசிக்குரிய பண்பாகும்!

          அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:-

         ஆதாரம் உன்னிடம் வந்து செல்லும் போது அதை எதிர்க்க நீ முயற்சிக்காமல் இருக்க வேண்டும் என்ற விடயத்தில் நீ எச்சரிக்கையாக இருந்து கொள்வது அவசியமாகும்.மாறாக, 'செவியேற்றோம்; கட்டுப்பட்டோம்!' என்றே நீ சொல். ஏனெனில், அதை எதிர்க்க நீ முயற்சித்தால் சிலவேளை எதிர்காலத்தில்  நேர்வழியை இழந்து விடுவாய்!

{ நூல்: 'ஷர்ஹுல் காபிfயா அஷ்ஷாபிfயா', 2/445 }


          قال العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:
*[ يجب عليك الحذر إذا مرّ بك الدليل ألا تحاول معارضته، بل قل: "سمعنا وأطعنا" ، لأنك لو حاولت معارضته فإنه ربما تحرم الهداية فى المستقبل ]*
{ شرح الكافية الشافية،  ص - ٤٤٥ }

 4)வெட்கப் பண்பு, ஒழுக்கமிகு சமூகத்திற்குத் தேவையான பண்பாகும்!!

அல்லாஹ் கூறுகிறான்: 
“அவ்விருவரில் ஒருத்தி வெட்கத்துடன் (மூசா நபியாகிய) அவரிடம் நடந்து வந்தாள். 'நீர் எமக்காகத் தண்ணீர் புகட்டியதற்கான கூலியை உமக்கு வழங்குவதற்காக நிச்சயமாக எனது தந்தை உம்மை அழைக்கிறார்' என்று கூறினாள்”
{அல்குர்ஆன், 28:25 }
 
           இவ்வசனத்தில், இறைத்தூதர் மூசா (அலை) அவர்களிடம் வந்த அந்த முஸ்லிம் யுவதியின் உயரத்தையோ, அவளின் அகலத்தையோ, அவளின் தோற்றத்தையோ, அவளின் நிறத்தையோ அல்லாஹ் வர்ணிக்கவில்லை. மாறாக, அவளிடமிருந்த விலைமதிக்க முடியாத மிகப்பெறுமதியான ஒன்றையே அவன் வர்ணிக்கின்றான். அதுதான்: வெட்கம்ஆகும்!!

{ முகநூலில்,  اسماعيل رواجفة  என்பவர் }

👈🏿 قال الله تعالى: *[ فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا ]*
          لم يصف الله عز وجل طولها ولا عرضها ولا شكلها ولا لونها، بل وصف أغلى ما فيها. وهو: *الحياء* !.......
{ الأخ/ اسماعيل رواجفة في فيس بوك }

அன்ஸாரிகளைச் சேர்ந்த ஒருவர் தம் சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, “அவரைக் கண்டிக்காதீர்கள்; விட்டு விடுங்கள்; ஏனெனில், நிச்சயமாக வெட்கம் இறைநம்பிக்கையின் ஓர் அம்சமாகும்!”என்று கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

{ நூல்: புகாரி, ஹதீஸ் இலக்கம் - 24 }


5)பயனுள்ள கல்விக்காக   உள்ளத்தை சுத்தப்படுத்திக்கொள்ளல் வேண்டும்!

 இமாம் இப்னு ஜமாஆ (ரஹ்)கூறுகின்றார்கள்:- 

           “அறிவைப் பெற்று அதைப் பாதுகாத்துக் கொள்ள வசதியாக இருப்பதற்காகவும், அதன் கருத்துக்களின் நுணுக்கங்களை, அதன் மறைமுக யதார்த்தங்களை அறிந்து கொள்வதற்காகவும் மோஷடி, அழுக்கு, குரோதம், பொறாமை, மோசமான கொள்கை, தீய குணம் போன்ற அனைத்திலிருந்தும் உள்ளத்தை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டியது கல்வித் தேடலில் ஈடுபடுபவருக்குக் கட்டாயமானதாகும்.

          பயிர்ச் செய்கைக்காக பூமி தூய்மைப்படுத்தப்பட்டால் எப்படி அதில் பயிர் வளர்ந்து நல்ல வளர்ச்சியை அது  அடையுமோ அதேபோல், கல்விக்காக உள்ளம் தூய்மைப்படுத்தப்படுகின்றபோது அக்கல்வியின்  அருள்வளம் வெளிப்பட்டு அது வளர்ச்சியையும் அடையும்... !”

          ஹதீஸிலும் இப்படி வந்துள்ளது: “.... அறிந்து கொள்ளுங்கள்! உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர்பெற்று விட்டால் உடல் முழுவதும் சீர்பெற்று விடும்! அது சீர்குலைந்து விட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். புரிந்து கொள்ளுங்கள்! அதுதான் உள்ளமாகும்!”.

          சஹ்ல் என்பவர் கூறுகின்றார்: 

“அல்லாஹ் வெறுக்கும் ஒன்று இருக்கின்ற உள்ளத்தில் (அவன் காட்டும்) ஒளி போய் நுழைந்து கொள்வது அவ்வுள்ளத்திற்கு ஹராமாகும்!” .

{ நூல்: 'தத்கிரதுஸ் ஸாமிஃ வல்முதகல்லிம்', பக்கம்: 67 }


           قال الإمام إبن جماعة رحمه الله تعالى:-
*[ على طالب العلم أن يطهّر قلبه من كل غشّ ودنس وغلّ وحسد، وسوء عقيدة وخلق، ليصلح بذلك لقبول العلم وحفظه، والإطلاع على دقائق معانيه وحقائق غوامضه.*
            *وإذا طيّب القلب للعلم ظهرت بركته ونما، كالأرض إذا طيّبت للزرع نما زرعها وزكا. وفى الحديث: " ألا، وإن فى الجسد مضغة، إذا صلحت صلح الجسد كله، وإذا فسدت فسد الجسد كله: ألا وهي القلب "*.
            وقال سهل: *حرام على قلب أن يدخله النور وفيه شيء ممّا يكره الله عزّ وجلّ ]*.
{ تذكرة السامع والمتكلم ،  ص - ٦٧ }

 6)சத்தியத்தை விட்டவன் அசத்தியத்தைக் கொண்டு சோதிக்கப்படுவான்!

           இஸ்லாமியப் பேரறிஞர் கலாநிதி ஸாலிஹ் பின் பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

            “அசத்தியத்தைக் கொண்டு மகிழ்ச்சியடையும் மனிதன் நிச்சயமாக அதை விட்டு விடமாட்டான். எனினும், அதைக்கொண்டு அவன் மகிழ்ச்சியடையாது, அது குறித்த சந்தேகம் அவனிடம் இருக்குமாக இருந்தால் அவன் பாவமன்னிப்புக் கோரி, அதை விட்டும் மீண்டு வரத் தகுதியானவனாவான்.
ஆனால், அசத்தியத்தின்பால் அவன் திருப்தி கொண்டு, அதன் மூலம் மகிழ்ச்சியையும்  அடைந்து விட்டால் நிச்சயமாக அதை விட்டும் அவன் திரும்பி வரமாட்டான். இது அல்லாஹ்விடமிருந்து வருகின்ற ஒரு தண்டனையாகும். ஏனெனில், எவன் சத்தியத்தை விட்டுவிட்டானோ அவன் அசத்தியத்தைக் கொண்டு சோதிக்கப்படுவான்!”.

{ நூல்: 'ஷர்ஹு மசாஇலில் ஜாஹிலிய்யா', பக்கம்: 84 }

              قال العلامة الدكتور صالح بن فوزان الفوزان حفظه الله تعالى: *[ الإنسان إذا فرح بالباطل فإنه لا يتركه، أما إذا لم يفرح به وكان عنده تشكك منه فهذا حري أنه يتوب ويرجع عنه. لكن إذا اطمأن إليه وفرح به فإنه لا يتحول عنه. وهذه عقوبة من الله جلّ وعلا، لأن من ترك الحق يبتلى بالباطل ]*
{ شرح مسائل الجاهلية ، ص - ٨٤ }

 7)தெளஹீதும் இஸ்திஃபாரும்!

          ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) கூறுகின்றார்கள்:-

          “மார்க்கத்தின் அடிப்படை, அதன் கிளை, அதன் மூலப் பகுதி என இஸ்லாத்தின் அனைத்துப் பகுதிகளையும் ஒன்று சேரப் பெற்றிருப்பதுதான் இந்த 'தெளஹீத்' எனும் ஏகத்துவம்! இதுதான் அனைத்தினதும் நலவுமாகும். 'இஸ்திஃபார்' (பிழை பொறுக்கத் தேடுதல்) என்ற இவ்விடயம் தீங்குகள் அனைத்தையும் நீக்கி விடுகின்றது. எனவே, (தெளஹீத், இஸ்திஃபார் எனும்) இவ்விரு விடயங்கள் மூலம் நன்மைகள் அனைத்தும் கிடைத்து, தீங்குகள் அனைத்தும் நீங்கி விடுகின்றன!.

         இறைவிசுவாசிக்கு ஏற்படுகின்ற தீங்குகள் அனைத்தும் அவனது பாவங்கள் மூலமாகத்தான் சம்பவிக்கின்றன. 'அவர்கள் பாவமன்னிப்புத் தேடிக் கொண்டிருக்கும்போது அவர்களை அல்லாஹ் தண்டிப்பவனாக இல்லை!'*(அல்குர்ஆன், 8: 33) என்று அல்லாஹ்  கூறுவது போல அப்பாவங்களை அழித்து, வேதனையை நீக்குவது இந்த இஸ்திஃபார்தான்!”.

{ நூல்: 'ஜாமிஉல் மசாயில்', 7/274 }

         قال شيخ الإسلام إبن تيمية رحمه الله تعالى: [ فالتوحيد هو جماع الدين الذي هو أصله وفرعه ولبّه، وهو الخير كله، فيحصل من هذين جميع الخير، وزوال جميع الشر، وكل ما يصيب المؤمن من الشر فإنما هو بذنوبه.
والإستغفار يمحو الذنوب فيزيل العذاب، كما قال تعالى:« وما كان الله معذبهم وهم يستغفرون »
{ جامع المسائل،  ٧/٢٧٤ }

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் மேலும் கூறுகின்றார்கள்: 

“எவரொருவர் தனது பேச்சிலோ, அல்லது  தனது செயலிலோ, அல்லது தனது நிலைமையிலோ, அல்லது தனது வாழ்வாதாரத்திலோ, அல்லது தனது உள்ளம் திரும்பியிருக்கும் விடயத்திலோ குறைபாடொன்றை  உணர்கிறாரோ அவர் தெளஹீதையும் இஸ்திஃபாரையும் கடைப்பிடித்துக்கொள்ளட்டும்! இவ்விரண்டும் உண்மையாகவும் உளத்தூய்மையாகவும் இருக்குமாக இருந்தால் இவ்விரண்டிலும்தான் நிவாரணியே இருக்கும்.

            இவ்வாறுதான் உறவினர்கள், குடும்பத்தார்கள், பிள்ளைகள், அண்டை வீட்டார்கள், சகோதரர்கள் ஆகியோர்களது உரிமைகளை நிறைவேற்றுவதில் குறைபாட்டை ஒரு மனிதன் கண்டு கொண்டால் அவர்களுக்காக அவன் பிரார்த்தித்து, இஸ்திஃபார் செய்து கொள்வதும் அவனுக்கு அவசியமாகும்!”.

{ நூல்: 'மஜ்மூஉல் பfதாவா', 12/698 }

            قال شيخ الإسلام إبن تيمية رحمه الله تعالى: [ فمن أحسّ بتقصير في قوله أو عمله أو حاله أو رزقه أو تقلب قلبه فعليه بالتوحيد والإستغفار؛ ففيهما الشفاء إذا كانا بصدق وإخلاص.
       وكذلك إذا وجد العبد تقصيرا في حقوق القرابة والأهل والأولاد والجيران والإخوان فعليه بالدعاء لهم والإستغفار ] .
{ مجموع الفتاوى،  ١٢ /٦٩٨ }

8)ஆரோக்கியமாக இருக்கும் நிலையில் ஆகிரத்துக்குரிய அமல்களை ஆயத்தப்படுத்துங்கள்!

         இமாம் இப்னு ரஜப் அல்ஹன்பலீ (ரஹ்) கூறுகின்றார்கள்:- 

           “மனிதனுக்கு இவ்வுலகில் இறங்கும் சோதனைகளில் மிகப்பெரியது மரணம்தான்! நன்மையின் பக்கம் சென்றதாக அவனது வாழ்க்கை இல்லையென்றிருந்தால் மரணத்திற்குப் பின்னர் உள்ள வாழ்க்கை மரணத்தை விட ரொம்பக் கஷ்டமாகி விடும்!.

          எனவே, மரணத்திற்காகவும், அதற்குப் பின்னர் உள்ள வாழ்க்கைக்காகவும் ஆரோக்கியமாக இருக்கும் நிலையில் இறையச்சம், மற்றும் நற்செயல்கள் மூலம் ஆயத்தமாகிக்கொள்ள வேண்டியது இறைவிசுவாசிக்கு அவசியமானதாகும்!. அல்லாஹ் கூறுகிறான்: « நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை நீங்கள் அஞ்சுங்கள்; (மறுமை) நாளைக்கு என தாம் செய்த வினையை ஒவ்வொருவரும் கவனிக்கட்டும்; அல்லாஹ்வை நீங்கள் அஞ்சுங்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் » (அல்குர்ஆன், 59: 18)

{ நூல்: 'லதாஇபுfல் மஆரிப்f ', 1/565 }


             قال الإمام إبن رجب الحنبلي رحمه الله تعالى: *[ أعظم الشدائد التي تنزل بالعبد فى الدنيا الموت، وما بعده أشد منه إن لم يكن مصير العبد إلى خير.*
             *فالواجب على المؤمن الإستعداد للموت وما بعده في حال الصحة بالتقوى والأعمال الصالحة. قال الله تعالى: « يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ».*
{ لطائف المعارف، ١/٥٦٥ }

அல்லாஹ் கூறுகிறான்:
 “நீங்கள் உங்களுக்காக முன் கூட்டி அனுப்பி வைக்கும் எந்தவொரு நன்மையையும் அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள்!”
(அல்குர்ஆன், 2: 110)


9)வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவியாக  இருப்பது கணவனுக்கு இழுக்கு அல்ல!

          நவீன கால ஹதீஸ் கலை அறிஞர், கண்ணியத்திற்குரிய இமாம், அல்லாமா நாஸிருத்தீன் அல்பாbனீ (ரஹ்) அவர்களின் மனைவி 'உம்முல் புfழைல்' அவர்கள் தனது கணவர் குறித்து இப்படிச் சொல்கிறார்கள்:- 

            “நான் வெட்கப்படுகின்ற அளவுக்கு வீட்டு வேலைகளில் எனக்கு அதிகம் உதவி செய்து தருபவர்களாக எனது கணவர் இருந்தார்கள்! எந்த அளவுக்கென்றால், ஒரு தடவை குப்பை கொட்டும் தொட்டியை என்னுடன் சேர்ந்து அவர் கழுவி துப்புரவு செய்து கொண்டிருந்தார். அப்போது நான் அவரிடம், 'கணவரே! பக்கத்து வீட்டார் முன்னிலையில் எங்களை நீங்கள் கேவலப்படுத்தாதீர்கள்; இவர், தன் மனைவிக்கு வேலை செய்து கொடுக்கின்றார் என்றெல்லாம் மக்கள் (கேவலமாகப்) பேசிக்கொள்வார்கள்!' என்று சொன்னேன். அப்போது என்னிடம் அவர்கள், 'இது ஒரு கேவலம் அல்ல! நபி (ஸல்) அவர்கள் தனது மனைவியருக்கு வீட்டு வேலை செய்து கொடுக்கும் பணியில் ஈடுபடக்கூடியவர்களாக இருந்தார்கள் என்பது உமக்குத் தெரியாதா?!' என்று கேட்டார்கள்.”

{ முகநூலில்   محمد كحول என்பவர் }

         أم الفضيل - زوجة الشيخ العلامة ناصر الدين الألباني رحمه الله - وهي تتحدث عن زوجها العالم الجليل:
       *[ كان كثيرا ما يعينني في شؤون المنزل حتى أخجل منه في ذلك، حتى انه مرة كان* *يشطف البرندة معي، فقلت له: يا شيخ! لا تفضحنا أمام الجيران، فيقولوا هذا يعمل عن امرأته!!*
*قال: هذه ليست فضيحة، ألا تعلمين أن النبي صلى الله عليه وسلم كان يقوم بمهنة أهله؟! ]*
{ الأخ/ محمد كحول في فيس بوك }

இமாம் இப்னு கஸீர் (ரஹ்) கூறுகின்றார்கள்:- 

            “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழகிய முறையில் குடும்ப வாழ்க்கை நடத்துபவர்களாகவும், எப்போதும் முகமலர்ச்சி உடையவர்களாவும் இருந்தார்கள். அத்தோடு அவர்கள் தமது குடம்பத்தாருடன் நகைச்சுவையாகப் பேசி விளையாடுபவர்களாவும், அவர்களோடு இரக்க சுபாவத்துடன் மென்மையாக நடப்பவர்களாவும், தான் கொடுக்க வேண்டிய குடும்பச் செலவை அவர்களுக்குத் தாராளமாகக் கொடுப்பவர்களாகவும் காணப்பட்டதோடு தனது மனைவிமார்களுடன் சேர்ந்து சிரித்து மகிழ்பவர்களாகவும் இருந்தார்கள். எந்த அளவுக்கென்றால் 'முஃமின்களின் தாய்' ஆயிஷா (ரழி) அவர்களுடன் ஓட்டப் போட்டியிலும் பங்குபற்றினார்கள்.
 இதன்மூலம் அவர்களுடன் நபியவர்கள் நேசமாக இருந்தார்கள். இவையெல்லாம், அன்னாரின் நற்குணங்களில் உள்ளவைகளாக இருந்தன!”.

{ நூல்: 'தப்ஸீர் இப்னு கஸீர்', 1/466 }

              قال الإمام العلامة إبن كثير رحمه الله تعالى: *[ وكان من أخلاقه صلى الله عليه وسلم أنه جميل العشرة دائم البشر، يداعب أهله ويتلطّف بهم، ويوسّعهم نفقته، ويضاحك نساءه، حتى إنه كان يسابق عائشة أم المؤمنين يتودّد إليها بذلك ]*
{ تفسير إبن كثير  ، ١/٤٦٦ }

10)வீடு எனக்கு இருக்கிறது! உங்கள் வீடு எனக்கு வேண்டாம்!

         சஊதி அரேபிய நாட்டு அறிஞர், பன்னூலாசிரியர், அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) அவர்களை அந்நாட்டின்  அப்போதைய மன்னராக இருந்த ஹாலித் பின் அப்துல் அஸீஸ் அவர்கள் ஒரு தடவை சந்தித்தார்கள். அறிஞரின் வீட்டைப் பார்த்த மன்னரின் கண்களுக்கு அவ்வீட்டிலிருந்த எதுவும் திருப்தியாகத் தெரியவில்லை; வீடு பழையதாக இருந்தது! அப்போது மன்னர் அறிஞரிடம், “ஷெய்க் அவர்களே! உங்கள் தகுதிக்கு ஏற்றாற்போல் நல்ல முறையில் புதிய வீடொன்றை உங்களுக்காக நிர்மாணித்துத் தரும்படி நாம் பணிக்கின்றோம்!”என்று கூறினார்.

        அதற்கு ஷெய்க் உஸைமீன் (ரஹ்) அவர்கள், “மன்னரே! 'ஜஸாகல்லாஹு ஹைரா'! (அல்லாஹ் உங்களுக்கு நல்ல கூலியைத் தருவானாக)  'ஸாலிஹிய்யா' பகுதியில் எங்களுக்கு ஒரு வீடு இருக்கிறது; எல்லா ஏற்பாட்டையும் அதில் நாம் செய்திருக்கிறோம்; கூடிய சீக்கிரம் அதற்கு நாம் சென்று விடுவோம்!”௭ன்று சொன்னார்கள். இதைக்கேட்ட மன்னர் ஹாலித் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்!.

           அவ்விடத்தை விட்டு மன்னர் சென்றதற்குப் பின்னால் ஷெய்க் அவர்களிடம் அவர்களின் மாணவர்கள் ஆச்சரியத்தோடு, “ஆசிரியரே! 'ஸாலிஹிய்யா'வில் வீடு ஒன்று  உங்களுக்கு இருப்பது எங்களுக்குத் தெரியாதே!”என்று கூறினர். அதற்கவர்கள், “ஸாலிஹிய்யாவில் மையவாடி இல்லையா? மண்ணறை வீடு அங்கேதான் உள்ளது! மறுமை வீடுதான் குடியிருப்புக்குத் தகுதியான உண்மையான வீடாகும்!”என்று பதிலளித்தார்கள்.

{ முகநூலில் சகோதரர் أبو أنس அவர்கள் }


            الشيخ العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى فقد زاره مرة الملك خالد بن عبدالعزيز ، فرأى بيت الشيخ قديما ليس فيه شيئ يرد العين. فقال له: *"سنأمر لك بتشييد بيت جديد يليق بمقامك!"*
فقال الشيخ إبن عثيمين: *"جزاك الله خيرا، لدينا بيت فى الصالحية نجهز فيه وسننتقل إليه.... !"*، فاطمأن الملك خالد!!!
         فبعد إنصراف الملك خالد، سأل الطلاب بتعجب: *”يا شيخنا لا نعرف لك بيتا فى الصالحية!"*
فرد عليهم: *"أليست المقبرة فى الصالحية؟ فالقبر هناك، وبيت الآخرة حقيق بالعمران!"*
{ الأخ/ أبو أنس في فيس بوك }

✍தமிழில்✍
                   அஷ்ஷெய்க் மெளலவி
N.P.ஜுனைத் காஸிமி,மதனி
இன்ஷா அல்லாஹ் தொடரும்......✍

@Islaam For All Peoples

Like👍 And Follow Our Islaam For All Peoples Fb page:
https://www.facebook.com/islaam.community/

Subscribe Our Islaam For All Peoples YouTube channel:
https://www.youtube.com/channel/UC0Um0iqVeLLCZeHJGZM97zA

🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர் - 4
💢💢💢💢💢💢💢💢💢💢
http://islaamforallpeoples.blogspot.in/2018/04/1.html

Comments

Popular posts from this blog

அல் குர்ஆன் சுன்ன அடிப்படையில் கேள்வி பதில் தொகுப்புகள்

ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-3

அகீதாவின் சில அடிப்படை விடயங்கள்