ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-6
بسم الله الرحمن الرحيم
ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-6 (24.04.2018)
தமிழில் அஷ்ஷெய்க் மெளலவி N.P.ஜுனைத் காஸிமி,மதனி.
1) சோதனைகளின் போது உறுதியாக இருத்தல்!!
இமாம் மைமூன் பின் அல்அஸ்பbஃ (ரஹ்) கூறுகின்றார்கள்:
ஈராக்கின் பக்தாத் நகரத்தில் நான் இருந்து கொண்டிந்த போது கூச்சல், அலறல் சத்தம் ஒன்றைக் கேட்டேன். “என்ன இது?” என்று நான் கேட்க,
“அஹ்மத் இப்னு ஹன்பல் - ரஹ் - அவர்கள், ('அல்குர்ஆன் அல்லாஹ்வின் பேச்சு அல்ல; அது படைக்கப்பட்டது!' என்ற வழிகெட்ட முஃதஸிலா இயக்கக் கொள்கையை ஏற்றுக்கொள்ளும்படி துன்புறுத்தப்பட்டு) சோதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்!” என்று அங்கிருந்தவர்கள் சொன்னார்கள்.
உடனே, நானும் உள்ளே சென்று பார்த்தேன். அங்கே இமாம் அஹ்மதுக்கு சாட்டையால் ஒரு அடி அடிக்கப்பட்டபோது, “பிஸ்மில்லாஹ்" என்று சொன்னார்கள். இரண்டாவது அடி அடிக்கப்பட்டபோது, “லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பிbல்லாஹ்!” என்று சொன்னார்கள். மூன்றாவது அடி அடிக்கப்பட்டபோது, “அல்குர்ஆன் அல்லாஹ்வின் பேச்சு; அது படைக்கப்படவில்லை!” என்று சொன்னார்கள். நான்காவது அடி அடிக்கப்பட்டபோது,
*" قل لّن يّصيبنا إلا ما كتب الله لنا"*
(அல்லாஹ் எமக்கு விதித்ததைத் தவிர வேறு எதுவும் எம்மைப் பீடிக்காது என நபியே நீர் கூறுவீராக! - அல்குர்ஆன் 9:51) என்ற வசனத்தை ஓதினார்கள்.
அப்போது, இமாம் அஹ்மத் அவர்கள் 29 கசையடிகள் அடிக்கப்பட்டார்கள்!!.
{ நூல்: 'ஸிபfதுஸ் ஸப்fவா' லிப்னில் ஜவ்ஸீ், 1/485 }
قال ميمون بن الأصبع رحمه الله تعالى: *كنت ببغداد فسمعت ضجة، فقلت: ما هذا؟ فقالوا: أحمد بن حنبل يمتحن...*
فدخلت، فلما ضرب سوطا قال: *بسم الله!*
فلما ضرب الثاني، قال: *لا حول ولا قوة إلا بالله!*
فلما ضرب الثالث، قال: *القرآن كلام الله، غير مخلوق!*
فلما ضرب الرابع قال: *« قل لّن يّصيبنا إلا ما كتب الله لنا »*.
فضرب تسعة وعشرين سوطا !!!.
{ صفة الصفوة لابن الجوزي، ١/٤٨٥ }
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
“யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை (சத்திய) சோதனைக்கு அவன் உள்ளாக்குகிறான்!”
{ நூல்: புகாரி, ஹதீஸ் இலக்கம்- 5645}
2)கண் பார்வையும், உடல் பலமும் பெற்றவர்களே! தொழுகையில் கவனம் செலுத்துங்கள்!!
சஊதி அரேபிய நாட்டு அறிஞர் அஷ்ஷெய்க் அப்துர்ரஸ்ஸாக் அல்பbத்ர் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:
மதீனாவுக்குக் கிழக்கேயுள்ள சிறு கிராமமொன்றில், வீடு ஒன்றிலிருந்து பள்ளிவாயல் வாசல் வரைக்கும் கயிறு ஒன்று கட்டப்பட்டிருந்ததை நான் கண்டேன். இது குறித்து நான் கேட்ட போது, “இது, கண்பார்வை அற்ற வயோதிபர் ஒருவரின் வீடு; வழிகாட்டி யாரும் அவருக்கு இல்லை. எனவே, ஒவ்வொரு தொழுகையின் போதும் பள்ளிவாயலுக்கு அவர் செல்வதற்கும், தன் வீட்டிற்குத் திரும்புவதற்கும் இந்தக் கயிற்றைத்தான் அவர் பிடித்துக்கொண்டு செல்வார்!”என்று எனக்குச் சொல்லப்பட்டது.
{ நூல்: 'தஃழீமுஸ் ஸலாத்', பக்கம்: 67 }
قال الشيخ عبد الرزاق البدر حفظه الله تعالى:-
وقد رأيت في قرية صغيرة شرق المدينة حبلا مشدودا من بيت إلى باب المسجد فسألت عنه؛ فقيل: *[ هذا بيت رجل كبير السّنّ، كفيف البصر ليس له قائد! فيمسك بهذا الحبل عند كل صلاة ذهابا للمسجد، وإيابا لبيته... ]*
{ تعظيم الصلاة، ص - ٦٧ }
அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்:
“நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கண் பார்வையற்ற ஒரு மனிதர் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! என்னைப் பள்ளிவாசலுக்கு அழைத்துச் செல்லக்கூடிய வழிகாட்டி எவரும் எனக்கு இல்லை!' என்று கூறி, வீட்டிலேயே தொழுதுகொள்ள தமக்கு அனுமதியளிக்குமாறு கோரினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள். பிறகு அவர் திரும்பிச் சென்ற போது அவரை அழைத்து, 'பாங்கு சப்தம் உமக்குக் கேட்கிறதா?' என்று கேட்டார்கள். அவர், 'ஆம்! (கேட்கிறது) என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'அப்படியானால் அதற்கு நீர் விடையளிப்பீராக!' (அதாவது, ஜமாஅத் தொழுகையில் சென்று கலந்து கொள்வீராக!) என்று கூறினார்கள்”.
{ நூல்: முஸ்லிம், ஹதீஸ்
இலக்கம் - 1157 }
3)நேரம் ஓர் அருட்கொடை! அதை நாசமாக்கி விடாதீர்கள்!!
அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:-
“பயனுள்ள, பிரயோசனமான எதையும் நீ பெற்றுக் கொடுக்காதிருக்கும் நிலையில் உனது நேரம் கழிந்து, உனது வாழ்நாளும் போய்க்கொண்டிருக்கிறது என்று நீ கண்டு கொண்டு, நேரத்தில் அபிவிருத்தியையும் நீ பெற்றுக்கொள்ளவில்லையென்றால் பின்வரும் அல்குர்ஆன் வசனத்தின் எச்சரிக்கை உன்னை வந்தடைந்து விட்டது எனப் புரிந்து அதில் நீ ஜாக்கிரதையாக இருந்து கொள்!
“எம்மை நினைவுகூர்வதை விட்டும் எவனது உள்ளத்தை நாம் மறக்கடிக்கச் செய்து, அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றி விட்டானோ அவனை (நபியே) நீர் பின்பற்றாதீர். அவனது விடயம் வரம்பு மீறியதாகவே உள்ளது”
(அல்குர்ஆன், 18:28 )
{ நூல்: 'தப்fஸீரு சூரதில் கஹ்ப்f' }
قال العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى: *[ إذا رأيت وقتك يمضي وعمرك يذهب وأنت لم تنتج شيئا مفيدا ولا نافعا، ولم تجد بركة فى الوقت، فاحذر أن يكون أدركك قوله تعالى: « ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتّبع هواه وكان أمره فرطا » ]*
{ تفسير سورة الكهف }
அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) அவர்கள் மேலும் கூறுகின்றார்கள்:-
ஓய்வு நேரத்தைப் பயனற்ற விதத்தில் கழித்தல் என்ற இவ்விடயம் வாலிபர்களின் நெறி பிறழ்வுக்குரிய மிக முக்கிய காரணிகளில் ஒன்றாகும். ஓய்வு நேரத்தைப் பயனற்ற விதத்தில் கழித்தலானது சிந்தனையையும், புத்தியையும், சக்திகளையும் கொலை செய்து விடுகின்ற ஒரு நோயாகும். ஏனெனில், ஆன்மாவுக்கு அசைவும், செயலும் அவசியமானதாக இருக்கின்றது!. இவற்றிலிருந்து இது நீங்கி விட்டால் சிந்தனை தடுமாற்றம் அடைந்து, புத்தி வரண்டுபோய், ஆன்மாவின் அசைவும் பலவீனமடைந்து, உள்ளத்தின் மீது தவறான ஊசலாட்டங்களும் மோசமான சிந்தனைகளும் ஆதிக்கம் செலுத்தி விடும்!!”
{ நூல்: 'மின் முஷ்கிலாதிஷ் ஷபாப்', பக்கம்:14 }
قال العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى: *[ إن من أهم أسباب انحراف الشباب الفراغ! فالفراغ داء قتال للفكر والعقل والطاقات،إذ النفس لا بدّ لها من حركة وعمل، فإذا كانت فارغة من ذلك تبلّد الفكر وثخن العقل وضعفت حركة النفس واستولت الوساوس والأفكار الرديئة على القلب ]*
{ من مشكلات الشباب، ص - ١٤ }
4)அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்!!
இமாம் அபூ கிலாபாb (ரஹ்) கூறுகின்றார்கள்:-
“மனிதன் பாவம் செய்துவிட்டு, 'நிச்சயமாக நான் அழிந்து விட்டேன்; எனக்கு பாவமன்னிப்பே இல்லை!' என்று கூறி அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து, எதையும் பொருட்படுத்தாதவனாக (திரும்பவும்) பாவங்களில் மூழ்கிப்போய் விடுகின்றான்! இத்தகைய மனிதர்களை (இப்படி நடந்து கொள்ள வேண்டாம் என) இதை விட்டும் அல்லாஹ் தடுக்கின்றான்”
அல்லாஹ் கூறுகிறான்: “அல்லாஹ்வின் அருளில் நீங்கள் நம்பிக்கையிழந்து விடாதீர்கள். ஏனெனில், நிராகரிக்கும் கூட்டத்தினரே அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழப்பார்கள்!”
(அல்குர்ஆன், 12:87)
{ நூல்: 'மஆலிமுத் தன்ஸீல்' லில் பகவீ, 1/217 }
قال أبو قلابة رحمه الله تعالى:-
*[ الرجل يصيب الذنب فيقول: قد هلكت ليس لي توبة! فييأس من رحمة الله، وينهمك فى المعاصي، فنهاهم الله تعالى عن ذلك.
قال الله تعالى: « ولا تيأسوا من رّوح الله إنه لا ييأس من رّوح الله إلا القوم الكافرون »
{ معالم التنزيل للبغوي، ١/٢١٧ }
அல்லாஹ் கூறுகிறான்:
“தமக்குத்தாமே (அநியாயம் செய்து) வரம்பு மீறிய எனது அடியார்களே! நீங்கள் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையவன் என (நபியே) நீர் கூறுவீராக!”
(அல்குர்ஆன், 39:53)
5)ஷைத்தானின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற வழி என்ன?
இமாம் அஹ்மது பின் யஹ்யா அந்நஜ்மீ (ரஹ்) கூறுகின்றார்கள்:
“சில வேளைகளில் மனிதன் மீது ஷைத்தான் ஆதிக்கம் செலுத்துகிறான்! குறிப்பாக, ஈமானிய பலவீனமுடையவனாகவும், திக்ருகளைக் கொண்டும் அல்லது அல்குர்ஆன் மற்றும் அல்ஹதீஸ்களில் வந்துள்ள துஆக்களைக் கொண்டும் குறைந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்பவனாகவும் அம்மனிதன் இ்ருக்கின்றபோது அவன் மீது ஷைத்தான் ஆதிக்கம் செலுத்தி விடுகின்றான்! அம்மனிதனைப் படைத்தும், பரிபாலித்தும் கொண்டிருக்கின்ற அவனது இரட்சகன் விடயத்தில் சில வேளை ஷைத்தான் அவனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி, இறாஞ்சிக்கொண்டு செல்லக்கூடியவனாகவும் அவனை அவன் ஆக்கி விடுகின்றான். அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும்! மன்னிப்பையும், ஆரோக்கியத்தையும் அல்லாஹ்விடம் நாம் கேட்போமாக!!
ஜமாஅத்துடன் சேர்ந்து தொழுவதை முறையாகப் பேணிக் கடைப்பிடித்தல், சுன்னத்தான தொழுகையையும், அல்குர்ஆன் மற்றும் அல்ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ள துஆக்களையும் முறையாகப் பேணிக் கடைப்பிடித்தல், அல்குர்ஆன் ஓதுவதை அதிகப்படுத்தல் என்பன போன்ற வணக்க வழிபாடுகளை அதிகமதிகம் செய்து இசைக்கருவிகள், இசைகள், பாடல்கள், திரைப்படங்கள், நாடகங்கள் போன்ற பாவங்களை விட்டும் தூரமாகி இருத்தலும்தான் இவற்றுக்கான சிகிச்சையாகும்.
இவை போன்ற விடயங்களிலிருந்து மனிதன் விலகி, கட்டாயமாகப் பேணிக் கடைப்பிடிக்கும்படி முன்னால் கூறப்பட்டுள்ள விடயங்களை முறையாகக் கடைப்பிடித்து வந்தால் அவனை விட்டும் நிச்சயமாக ஷைத்தான் தூரப்போய் விடுவான்; அவனை நெருங்கவும் மாட்டான்; அம்மனிதன் மீது ஆதிக்கம் செலுத்தவும் அவனுக்கு முடியாமல் போய்விடும்!!”
{ நூல்: 'அல்கவ்லுல் ஹஸீஸ் அலா அகீததி அஹ்லில் ஹதீஸ்', பக்கம்: 142 }
قال الإمام أحمد بن يحي النجمي رحمه الله تعالى:-
*[ الشيطان يتسلّط على الإنسان أحيانا، وبالأخص إذا كان الإنسان ضعيف الإيمان، قليل التّحرّز بالأوراد أو الأدعية القرآنية والنبوية فيتسلّط عليه الشيطان، وقد يشكّكه في ربّه وخالقه، ويجعله يتخبّط... والعياذ بالله! نسأل الله العفو والعافية!!*
*وعلاج ذلك: أن يكثر من الطاعات؛ كالمحافظة على الصلاة في الجماعة، والمحافظة على صلاة النافلة، والمحافظة على الأوراد القرآنية والأوراد النّبوية، والإكثار من قراءة القرآن، والبعد من المعاصي؛ كالبعد عن آلات اللّهو، والأغاني، والتّمثيليّات وما أشبه ذلك.*
*فإذا ابتعد عن مثل هذه الأمور، وحافظ على ما يجب حفظه ممّا سبق ذكره؛ فإن الشيطان يبتعد عنه، ولا يقربه، ولا يستطيع عليه ]*
{ القول الحثيث على عقيدة أهل الحديث، ص - ١٤٢ }
6) இறையச்சம் சரியாக இருந்தால் எல்லாமே நலவாகி விடும்!!
அல்லாமா இப்னுல் ஜவ்ஸீ (ரஹ்) அவர்கள் தனது மகன் அபுல் காசிம் என்பவருக்கு எழுதிய பிரபலமான வஸிய்யத்தில் வந்திருக்கிறது......
“எனதருமை மகனே! இறையச்சம் எப்போது சரியாகி விடுமோ அப்போது அனைத்து நலவுகளையும் நீ கண்டு கொள்வாய். இறையச்சமுடைய ஒருவன், மனிதர்கள் பார்த்து பாராட்ட வேண்டும் என்பதற்காக வணக்க வழிபாடுகளைச் செய்யமாட்டான்; தனது மார்க்கத்துக்கு தொந்தரவு ஏற்படுத்துவதற்காகவும் அவன் செயல்படமாட்டான்; அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணி நடப்பவனை அல்லாஹ் பாதுகாக்கின்றான். நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களுக்கு, 'அல்லாஹ்வின் கடமைகளை நீ பேணிப் பாதுகாத்துக் கடைப்பிடித்துக்கொள்; அவன் உன்னைப் பாதுகாப்பான்! அல்லாஹ்வின் கடமைகளை நீ பேணிப் பாதுகாத்துக் கடைப்பிடித்து வந்தால் உனக்கு முன்னால் அவனை நீ கண்டு கொள்வாய்!' என்று கூறினார்கள்.
என் அன்பு மகனே! நபி யூனுஸ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் பாதுகாப்பு ஆயுதம் சிறந்ததாக இருந்தபோது அதன் மூலம் கடும் கஷ்டத்திலிருந்து அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்பதை நீ புரிந்து கொள்! இது குறித்து அல்லாஹ் கூறுகிறான்: '(நம்மைத்) துதிப்பவர்களில் அவர் இல்லாதிருந்திருப்பின், (மண்ணறையிலிருந்து உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாள் வரை (மீன் ஆகிய) அதன் வயிற்றிலேயே அவர் தங்கியிருந்திருப்பார்!'
(அல்குர்ஆன், 37:143,144)
பிர்அவ்னைப் பொறுத்தவரை, அவனின் பாதுகாப்பு ஆயுதம் நல்லதாக இல்லாதிருந்தபோது கஷ்டம் நிறைந்த அந்தக் கடும் ஆபத்தில் வைத்து அவனைப் பாதுகாக்கின்ற ஒன்றையும் அவனால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. அப்போது அவனுக்கு, 'இப்போதுதானா (நம்பிக்கை கொள்கிறாய்?) சற்று முன்னர் வரை நிச்சயமாக நீ மாறு செய்து, குழப்பம் விளைவிப்போரில் உள்ளவனாக இருந்தாய்' என்று கூறப்பட்டது.(அல்குர்ஆன், 10:91)
எனவே, உனக்கான நல்ல பாதுகாப்பு ஆயுதங்களை இறையச்சத்திலிருந்து நீ ஆக்கிக்கொள்; அப்போது அதன் தாக்கத்தை நீ பெற்றுக்கொள்வாய்!
{ நூல்: 'லப்fததுல் கபிbத் இலா நஸீஹதில் வலத்' லிப்னில் ஜவ்ஸீ, பக்கம் : 33 }
قال العلامة إبن الجوزي رحمه الله تعالى في وصيته المشهورة لابنه أبي القاسم:-
*[ يا بنيّ! ومتى صحت التقوى رأيت كل خير، والمتّقي لا يرائي الخلق ولا يتعرّض لما يؤذي دينه، ومن حفظ حدود الله حفظه الله، قال رسول الله صلى الله عليه وسلم لابن عباس رضي الله عنهما: « إحفظ الله يحفظك، إحفظ الله تجده أمامك »*
*واعلم يا بنيّ! أن يونس عليه السلام لمّا كانت ذخيرته خيرا نجا بها من الشّدّة. قال الله عزّ وجلّ: { فلولا أنه كان من المسبّحين للبث في بطنه إلى يوم يبعثون } «الصّافّات: ١٤٣،١٤٤»*
*وأما فرعون فلمّا لم تكن ذخيرته خيرا لم يجد في شدّته مخلّصا فقيل له: { آلآن وقد عصيت قبل وكنت من المفسدين } « يونس: ٩١ »*
*فاجعل لك ذخائر خير من التقوى تجد تأثيرها ]*
{ لفتة الكبد إلى نصيحة الولد لابن الجوزي، ص - ٣٣ }
7)ஆசிரியரின் அச்சத்தில் அழுத சிறுவர்களின் அழுகை, அறிஞருக்கு அல்லாஹ்வின் அச்சத்தை ஏற்படுத்தியது!
ஒரு தடவை இமாம் அர்ரபீbஃ பின் ஹுஸைம் (ரஹ்) அவர்கள், இஸ்லாத்தின் ஆரம்ப விடயங்கள் போதிக்கப்படும் 'குர்ஆன் மத்ரசா' வில் கல்வி பயின்று அழுதுகொண்டிருந்த சிறுவர்கள் சிலருக்குப் பக்கத்தில் நடந்து சென்றார்கள். அப்போது அவர் அவர்களிடம், “சிறுவர்களே! உங்களுக்கு என்ன நேர்ந்தது? (ஏன் அழுகின்றீர்கள்?)”௭ன்று கேட்டார்கள். அதற்கவர்கள், “இன்று வியாழக்கிழமை! (எமது) பதிவேட்டுப் புத்தகம் ஆசிரியரிடம் சமர்ப்பிக்கப்படும் நாள்; ஆதலால், அவர் எங்களுக்கு அடிப்பார் என்று நாம் பயப்படுகின்றோம்!”என்றனர்.
இதைக்கேட்ட மாத்திரத்தில் அழுது விட்ட இமாம் அர்ரபீbஃ அவர்கள்,
“அடக்கியாளும் சர்வ வல்லமையுடைய அல்லாஹ்விடம் (மனிதர்களின் நன்மை, தீமை உள்ளடங்கிய) பதிவேட்டுப் புத்தகம் சமர்ப்பித்துக் காட்டப்படும் அந்த நாள் எப்படி இருக்கும்?!”என தன் ஆன்மாவை விழித்துச் சொல்லிக் கொண்டார்கள்.
{ நூல்: 'சியருஸ் ஸலப்f' லில் அஸ்பbஹானீ, பக்கம்: 257 }
عن الرّبيع بن خثيم رحمه الله تعالى:
*[ أنّه مرّ على صبيان فى الكتّاب يبكون، فقال: ما بالكم يا معشر الصبيان؟ »*
قالوا: *« إنّ هذا يوم الخميس، يوم عرض الكتاب على المعلّم فنخشى أن يضربنا »*
فبكى الرّبيع، وقال: *« يا نفس! كيف بيوم عرض الكتاب على الجبّار ]*
{ سير السّلف للأصبهاني ، ص - ٢٥٧ }
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
“ஒவ்வொரு வியாழக்கிழமையும் திங்கட்கிழமையும் (மனிதர்களின்) செயல்கள் (அல்லாஹ்விடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. அன்றைய தினத்தில் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், தனக்கு எதையும் இணைவைக்காத ஒவ்வொரு மனிதருக்கும் மன்னிப்பு வழங்குகின்றான்; தமக்கும் தம் சகோதரருக்குமிடையே பகைமை உள்ள ஒரு மனிதரைத் தவிர. அப்போது, 'இவ்விருவரும் சமாதானமாகிக்கொள்ளும் வரை இவர்களை விட்டு வையுங்கள்! இவ்விருவரும் சமாதானமாகிக்கொள்ளும் வரை இவர்களை விட்டு வையுங்கள்!' என்று கூறப்படுகிறது”
{ நூல்: முஸ்லிம், ஹதீஸ்
இலக்கம் - 5014 }
8)தெரிந்த சுன்னாவை மக்களுக்கு எற்றி வையுங்கள்!!
அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:-
“கல்வித் தேடலில் ஈடுபடும் மாணவன், கல்வித் தேடலில் ஈடுபடாதிருக்கும் சாதாரண மனிதன் ஆகிய இவர்களில் நபியின் சுன்னாவை அறிந்து வைத்துள்ள ஒவ்வொருவரும் அதை ஒவ்வொரு பொருத்தமான சந்தர்ப்பத்திலும் (மக்களுக்கு) விளக்கப்படுத்திச் சொல்ல வேண்டியது அவசியமாகும். 'நான் ஆலிம் இல்லை' என்று மட்டும் சொல்லாதே. நீ ஆலிம் இல்லைதான்! இருந்தாலும் உன்னிடம் அறிவு இருக்கிறது. ஏனெனில், 'என்னிடமிருந்து ஒரு விடயத்தை நீங்கள் அறிந்தாலும் அதை எற்றிவைத்து விடுங்கள்!' என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.
எனவே, இதுபோன்ற விவகாரங்களில் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது மனிதனுக்கு அவசியமாகும். ஆதலால், சுன்னாவைப் பரப்பும் பணியைச் செய்வதற்கு சந்தர்ப்பம் இடம் தரும் போதெல்லாம் அதைப் பரப்பும் பணியை நீ செய்துவிடு! அதற்கான கூலி உனக்கு இருப்பதோடு மறுமை நாள் வரைக்கும் அதைக்கொண்டு செயல்படுகின்றவர்களின் கூலியும் உனக்குக் கிடைக்கும்!”
{ நூல்: 'ஷர்ஹு ரியாழிஸ் ஸாலிஹீன்', 4/215 }
قال العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:
*[ ينبغي لطالب العلم وغير طالب العلم؛ كل من علم سنّة ينبغي أن يبيّنها في كل مناسبة، ولا تقل أنا لست بعالم، نعم لست بعالم! لكنّ عندك علم. قال النبيّ صلّى الله عليه وسلم « بلّغوا عنّي ولو آية »، فينبغي للإنسان في مثل هذه الأمور أن ينتهز الفرص كلّما سمحت الفرصة لنشر السنة فانشرها يكن لك أجرها وأجر من عمل بها إلى يوم القيامة ]*
{ شرح رياض الصالحين، ٤/٢١٥ }
அல்லாமா இப்னுல் ஜவ்ஸீ (ரஹ்) கூறுகின்றார்கள்:-
“தான் செய்துவந்த நற்செயல் தனது மரணத்தின் பின்னரும் முறிந்து விடாமல் தொடர வேண்டும் என்று விரும்புபவர் கல்வி போதிக்கும் பணியைச் செய்யட்டும்!”
{ நூல்: 'அத்தஸ்கிரா',பக்கம்:55 }
قال العلامة إبن الجوزي رحمه الله تعالى:-
*[ من أحبّ أن لا ينقطع عمله بعد موته فلينشر العلم ]*
{ التذكرة ، ص - ٥٥ }
9)உலக இன்பத்தில் மயங்கிக் கிடக்கும் எம் சமூகம் மயக்கம் தெளிவது எப்போது?
இஸ்லாமியப் பேரறிஞர் கலாநிதி ஸாலிஹ் பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:
“உலக நன்மைகள் தவறிப்போய் விடுமோ என்ற அச்சத்தில் உலகைத் தேடி ஓடுவதில் விரைவு காட்டும் எத்தனையோ மனிதர்களை நாம் பார்த்து வருகின்றோம். இவர்கள் உலகத் தேவைகளுக்காக உட்கார்ந்து கொண்டு, மார்க்கத்தின் தூணாக இருக்கின்ற ஐவேளைத் தொழுகைகளை நிறைவேற்ற பள்ளிவாசல்களுக்கு சமூகமளிக்கப் பிந்தி விடுவதையும் நாம் காண்கின்றோம்!
பாதைகளிலும், கடைகளிலும் பல மணி நேரங்கள் உட்கார்ந்திருக்கும் எத்தனையோ பேரையும் இவர்களில் நாம் பார்க்கின்றோம். இதற்காக கடும் உஷ்ணத்தை (கஷ்டத்தை) எல்லாம் இவர்கள் தாங்கிக் கொள்கின்றனர்! இதற்கிடையில், தொழுகையை நிறைவேற்றுவதற்காக, அல்லது அல்குர்ஆனை ஓதுவதற்காக குறிப்பிட்ட சில நிமிடங்கள் உட்கார்ந்து கொள்வதற்கு பொறுமை இல்லாதவர்களாக இவர்கள் இருப்பதையும் நாம் பார்க்கக்கூடியதாகத்தான் இருக்கிறது.
“மேலும், இஸ்லாமிய இளைஞர்களில் எத்தனையோ பேர் கரப்பந்து, கால்பந்து விளையாட்டு மைதானங்களுக்குச் செல்வதற்கு போட்டி போடுகின்றனர்; இதற்காக மைதான நுழைவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள பணங்களைக் கொடுத்து, பின்னர் பல்லாயிரக்கணக்கில் பெருந்திரளாக அதில் ஒன்று கூடுகின்றனர்.
“சிலவேளை இவர்கள் பகல் பொழுதை இப்படி (வீணாக)க் கழித்து, இரவில் விழித்திருந்து, கால் கடுக்க நின்றவர்களாக தமது பார்வைகளை விளையாட்டிலேயே லயிக்க வைத்து, தமது உடல்களை நிமிர்த்தி வைத்துக்கொண்டு, சத்தங்களை அதிகரித்தவர்களாக யாருக்கு வெற்றி கிடைக்கும் என்று விளையாட்டு வீரர்களையே பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.
ஷைத்தானின் பாதையில் இவ்வனைத்து சிரமங்களையும் இவர்கள் தாங்கிக் கொள்கின்றனர். 'தாெழுகைக்கு விரைந்து வாருங்கள்; வெற்றியின் பக்கம் விரைந்து வாருங்கள்!' என்று பள்ளிவாசல்களில் தொழுகைகளுக்கு சமூகம் தரும்படி அழைப்பு விடுக்கப்பட்டால் குருடர்களாகி விடுகின்றனர்; செவிடர்களாகியும் விடுகின்றனர். இவர்களை முஅத்தின் சிறைச்சாலைக்கு அழைப்பதைப் போலவும், அல்லது இவர்களிடமிருந்து அவர் முக்கியமான ஒன்றைக் கேட்பது போலவும் புறக்கணித்து புறமுதுகிட்டு ஓடுகின்றனர்.
அல்லாஹ் கூறுகிறான்:
“றுகூஃ செய்யுங்கள் என அவர்களிடம் கூறப்பட்டால் அவர்கள் றுகூஃ செய்யமாட்டார்கள். பொய்ப்பிப்போருக்கு அந்நாளில் கேடுதான்”.
(அல்குர்ஆன், 77:48,49)
மேலும் அல்லாஹ் கூறுகிறான்: “கெண்டைக்கால் வெளிப்படுத்தப்பட்டு, அவர்கள் சுஜூது செய்ய அழைக்கப்படும் ஒரு நாளில் அவர்கள் (அதற்கு) சக்தி பெறமாட்டார்கள்.
அவர்களது பார்வைகள் தாழ்ந்திருக்க, இழிவு அவர்களை மூடிக்கொள்ளும். நிச்சயமாக அவர்கள் நலமாக இருந்த வேளையில் சுஜூது செய்ய அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தனர்”.
(அல்குர்ஆன், 68:42)
“முஸ்லிம்களே! நிறைய பேரின் நிலை இன்று இதுவாகத்தான் இருக்கிறது!. இவர்கள் உலகத்தின்பால் முன்னோக்கி, மறுமையைப் பின்னுக்குத் தள்ளி விட்டனர். எமக்கு முன் வாழ்ந்து சென்றவர்களை நாம் படிப்பினையாக் கொள்ளாதிருக்கின்றோம்; எம்மைச் சூழ உள்ளவர்களையும் நாம் சிந்தித்துப் பார்க்காதிருக்கின்றோம்; எந்த உபதேசத்தைக் கொண்டும் தாக்கமெதுவும் பெறாருக்கின்றோம்; ஒரு நினைவூட்டலைக் கொண்டும் பயனடையாதும் இருக்கின்றோம்; இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!!
{ நூல்: 'அல்ஹுதபுbல் மிம்பரிய்யா', 1/313,314 }
قال العلاّمة صالح بن فوزان الفوزان حفظه الله تعالى:
*[ كم نرى الناس يتراكضون لطلب الدنيا مسرعين يخافون أن تفوتهم، ونراهم يقعدون ويتأخرون عن حضور المساجد لأداء الصلوات الخمس التي هي عمود الدين.*
*كم نراهم يجلسون فى الشوارع والدّكاكين السّاعات الطويلة وقد يقاسون شدة الحر لطلب الدنيا، بينما لا نراهم يصبرون على الجلوس دقائق معدودة فى المسجد لأداء الصلاة أو تلاوة القرآن.*
*كم نرى من شباب المسلمين يتسابقون إلى ملاعب الكرة ويدفعون الدراهم للحصول على تذاكر الدخول ثم يحتشدون فيها ألوافا مؤلفة*.
*وربما يقضون النهار ويسهرون الليل واقفين على أقدامهم شاخصة أبصارهم ناصبة أبدانهم مبحوحة أصواتهم يشاهدون اللّاعبين لمن تكون الغلبة منهم...*
*يتحملون كل هذه المتاعب في سبيل الشيطان، وإذا دعوا إلى حضور الصّلوات فى المساجد بحيّ على الصلاة وحيّ على الفلاح عموا وصموا وولّوا وأعرضوا كأن المؤذن يدعوهم إلى سجن أو كأنه يطلب منهم مذمة.*
قال الله تعالى: « وإذا قيل لهم اركعوا لا يركعون ويل يّومئذ لّلمكذبين » ، وقال الله تعالى: « يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون، خاشعة أبصارهم ترهقهم ذلّة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون ».
*أيها المسلمون! هذه حالة الكثير منا اليوم إقبال على الدنيا وإدبار عن الآخرة؛ لا نعتبر بمن سبقنا !! ولا ننظر إلى من حولنا !! ولا تتأثر بموعظة !! ولا ننتفع بذكرى !! فإنا لله وإنا إليه راجعون !!!*
{ الخطب المنبرية، ١/ ٣١٤،٣١٤ }
10)April fool day - சர்வதேச முட்டாள் தினத்தில் அல்லாஹ்விடம் நாம் முட்டாள் ஆகாதிருப்போம்!!
அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:-
{ பொய் கூறி, ஏமாற்றி, மக்களை மடையர்களாக்குவதற்கென உருவாக்கப்பட்டுள்ள இந்த April fool தினச் செயல்பாடுகள் அனைத்தும் } யூதர்கள், கிறிஸ்தவர்கள், நெருப்பு வணங்கிகள், இறைமறுப்பாளர்கள் ஆகியோரிடமிருந்து பெறப்பட்டதாகும். பின்வரும் விபரீதங்கள் இதிலே இருக்கின்றன:
1) பொய்:
மார்க்கத்தில் பொய் தடை செய்யப்பட்ட விடயமாகும்.
2) மாற்று மதத்தினரின் நடைமுறைக்கு ஒப்பாகுதல்:
முஸ்லிம்கள் அல்லாத மாற்று மதத்தினரின் நடைமுறைக்கு ஒப்பாக நடத்தலும் தடை செய்யப்பட்டதாகும். “எவர் ஒரு கூட்டத்திற்கு ஒப்பாகின்றாரோ அவர் அக்கூட்டத்தைச் சேர்ந்தவராவார்!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
3) எதிரிக்கு முன்னால் ஒரு முஸ்லிமை இழிவுபடுத்தி, மதிப்பிழக்க வைத்தல்:
பின்பற்றப்படும் மனிதன், தன்னைப் பின்பற்றி நடப்போர் குறித்து பெருமிதமடைவான்; அவர்களைவிட தான்தான் மிகச் சிறப்பானவன் என்றும் கருதிக் கொள்வான். இது, மனித இயல்பு என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமாகும். இறைமறுப்பாளர்களைப் பின்பற்றி, இவர்களின் வாலாக இறைவிசுவாசி இருப்பதால் இவனுக்கு இதில் இழிவும் அவமானமும் இருக்கிறது.
4) சொத்தை தவறான முறையில் புசித்தல்; முஸ்லிமைப் பயமுறுத்தல்:
இந்த முட்டாள் தினத்தில் இடம்பெறும் மோசமான பொய் நடவடிக்கை பெரும்பாலும் தவறான முறையில் சொத்தைப் புசிப்பதையும், முஸ்லிமைப் பயமுறுத்துவதையும் உள்வாங்கிக்கொண்டதாக இருக்கிறது. இதற்காக ஒருவர் தனது மனைவியிடத்தில் சில நேரம் பொய் பேசுவதோடு மற்றவர்களிடமும், “உங்கள் மதிப்பிற்குரிய அவர் தாக்கப்பட்டுள்ளார்; அவரை கார் மோதி விட்டது!” என்றவாறு அவர்களுக்கு அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் ஏதாவது ஒன்றை அவர்களுக்குக் கூறி விடுவார்.
எனவே, முஸ்லிம்களின் எதிரிகளுக்கு இஸ்லாமிய மார்க்கம் குறித்த மரியாதைப் பயம் ஏற்படுவதற்காகவும், அதை அவர்கள் கண்ணியப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் அல்லாஹ்வை அஞ்சி, அவனது மார்க்கத்தின் மூலம் கண்ணியமானவனாக இருந்து, அதைக்கொண்டு பெருமைப்பட்டவனாகவும் வியப்படைந்தவனாகவும் இருந்துகொள்ள வேண்டியது ஒரு முஸ்லிமுக்கு அவசியமாகும்.
மார்க்கத்தின் மூலம் கண்ணியத்தைப் பெற்றுள்ள ஒவ்வொருவரும் மனிதர்களுக்கிடையில் கண்ணியமானவராகவே இருப்பார் என்பதற்கும், மார்க்கத்தின் எதிரிகளுக்குச் சார்பாக (அவர்களின் கலாச்சாரம் பேணி) இழிவாக நடந்த ஒவ்வொருவனும் அல்லாஹ்விடத்திலும் அவனது எதிரிகளிடத்திலும் மிகக் கேவலமானவனாகவே இருப்பான் என்பதற்கும் நான் பொறுப்புதாரியாவேன்.
முஸ்லிமே! இறைமறுப்பாளர்களை நீ பின்பற்றி நடந்து, அவர்களின் பண்பாடுகளை நீ எடுத்து நடப்பது அவர்களின் உள்ளங்களில் உனக்கு கண்ணியத்தை ஏற்படுத்தும் என்று மாத்திரம் நீ நினைத்து விடாதே! மாறாக, மிக மோசமான இழிவைத்தான் அது உனக்கு ஏற்படுத்தும்! இதை நீ நன்கு அறிவாய்.
{ஆதாரம்: www.kulalsalafiyeen.com}
قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:
[ كذبة أبريل هذه تلقوها عن اليهود والنصارى والمجوس وأصحاب الكفر. ثم هي مع كونها:-
*١) كذبا:* والكذب محرّم شرعا.
*٢) وكونها تشبّها بغير المسلمين:* والتشبّه بغير المسلمين محرّم؛ فقد قال النّبي صلى الله عليه وسلم: «من تشبّه بقوم فهو منهم ».
*٣) إذلال للمسلم أمام عدويه:*
لأن من المعلوم بطبيعة البشر أن المقلّد يفخر على من قلّده، ويرى أنه أفضل منه، فهي فيها إذلال للمؤمن؛ لكونه ذيلا وتبعا للكفّار.
*٤) أن غالب هذه الكذبة الخبيثة تتضمن أكلا للمال بالباطل،أو ترويعا للمسلم:*
فإنه ربما يكذب فيكلّم أهل البيت، أو ربما يخبرهم بأمر يروّعهم كأن يقول قيّمكم دعس، دعسته السيارة....
فعلى المسلم أن يتق الله سبحانه وتعالى، وأن يكون عزيزا بدينه، فخورا به، معجبا به لأجل أن يهابه أعداء المسلمين ويحترمونه.
وأنا ضامن لكل من اعتزّ بدين الله: أن يكون عزيزا بين الناس، ولكل من ذلّ لأعدائه: أن يكون أذلّ وأذلّ عند الله وعند أعدائه....
فلا تظن أيها المسلم! أن متابعتك للكفار، وأخذك أخلاقهم لا تظن أن ذلك يعزّك في نفوسهم؛ بل إنه يذلّك - غاية الذّلّ- ، وأنت تعلم ذلك.
(www.kulalsalafiyeen.com)
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக முஆவியா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:-
“ஒரு கூட்டத்தாரை சிரிக்க வைப்பதற்காக பொய் பேசுபவனுக்கு அழிவு உண்டாகட்டும்!”
{ நூல்: அபூதாவூத் - 4990 }
✍தமிழில்✍
அஷ்ஷெய்க் மெளலவிN.P.ஜுனைத் காஸிமி,மதனி
இன்ஷா அல்லாஹ் தொடரும்......✍
@Islaam For All Peoples
Like👍 And Follow Our Islaam For All Peoples Fb page:
https://www.facebook.com/islaam.community/
Subscribe Our Islaam For All Peoples YouTube channel:
https://www.youtube.com/channel/UC0Um0iqVeLLCZeHJGZM97zA
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர் - 5
💢💢💢💢💢💢💢💢💢💢
Comments
Post a Comment