ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-4
بسم الله الرحمن الرحيم
ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-4 (07.04.2018)
தமிழில் அஷ்ஷெய்க் மெளலவி N.P.ஜுனைத் காஸிமி,மதனி.
1)அசத்தியவாதிகளின் ஆக்கங்கள் வெளியே அழகானவையாக இருக்கும்! உள்ளே விஷம் கலந்திருக்கும்!!
இஸ்லாமியப் பேரறிஞர் இமாம் இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) கூறுகின்றார்கள்:
“அசத்திவாதிகளின் ஆக்கங்களை ஆழமாக நீ சிந்தித்துப் பார்த்தால் அவற்றை அழகிய வார்த்தைப் பிரயோகங்களால் அவர்கள் போர்த்தியிருப்பதை நீ கண்டு கொள்வாய். நல்ல முறையில் அறிந்து, விளங்கிக்கொள்ளும் திறன் இல்லாதவன் அவற்றை அவசரமாகவே ஏற்றுக்கொண்டு விடுவான். இவர்களின் கவர்ச்சியான அவ்வார்த்தைகள், அழகிய நிறமும் தோற்றமும் உடைய பாத்திரமொன்றில் வைக்கப்பட்டிருக்கும் நல்ல வாசனைமிகு உணவின் அந்தஸ்தில் இருக்கிறது! ஆனால், அவ்வுணவோ நஞ்சூட்டப்பட்டதாகும்!!”
{ நூல்: 'முக்தஸர் அஸ்ஸவாயிக்' லிப்னில் கைய்யிம், பக்கம்: 118,119 }
قال العلامة إبن القيم الجوزية رحمه الله تعالى:-
[ *إذا تأملت مقالات أهل الباطل رأيتهم قد كسوها من العبارات المستحسنة ما يسرع إلى قبوله من ليس له بصيرة نافذة، فتكون ألفاظهم المموهة بمنزلة طعام طيب الرائحة في إناء حسن اللون والشكل، ولكن الطعام مسمومة!* ]
{ مختصر الصواعق لابن القيم، ص - ١١٨، ١١٩ }
2)உன்னை நீயே குற்றம் சுமத்திக்கொள்!!
இஸ்லாமியப் பேரறிஞர் இமாம் முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:
“ அல்குர்ஆனின் மூலம் உனது உள்ளம் தாக்கம் பெறாதிருக்கிறது என்று நீ கண்டால் உன்னை நீயே குற்றம் சாட்டிக்கொள்! ஏனெனில், இந்தக் குர்ஆனை ஓர் மலை மீது தான் இறக்கி வைத்திருந்தால் கூட அது நொறுங்கியிருக்கும் என்று அல்லாஹ் தெரிவிக்கின்றான்!”
{ நூல்: 'ஷர்ஹுல் அகீதா அல்வாசிதிய்யா', பக்கம்: 440 }
قال العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:
*[ إذا رأيت قلبك لا يتأثر بالقرآن فاتّهم نفسك! لأن الله أخبر أن هذا القرآن لو أنزل على جبل لتصدع ]*
{ شرح العقيدة الواسطية، ص - ٤٤٠ }
அல்லாஹ் கூறுகிறான்:
“இந்தக் குர்ஆனை ஒரு மலையின் மீது நாம் இறக்கியிருந்தால் அது அல்லாஹ்வின் அச்சத்தால் பயந்து நொறுங்கி விடுவதை நீர் காண்பீர். மனிதர்கள் சிந்திப்பதற்காக இந்த உதாரணங்களை அவர்களுக்கு நாம் கூறுகிறோம்”
(அல்குர்ஆன், 59:21)
3)அநீதியிழைக்கப்பட்டோரின் கண்ணீருக்கு அல்லாஹ்விடத்தில் பெறுமதி உண்டு!!
“அநீதியிழைக்கப்பட்டோரின் கண்ணீர் துளிகள், அவர்களின் பார்வையில் வேண்டுமானால் வெறும் தண்ணீராக இருக்கலாம்! ஆனால் அல்லாஹ்விடமோ அவை, அநியாயக்காரனுக்கு அடிக்கப்படும் இடி முழக்கங்களாக இருக்கின்றன! எனவே, எவருக்கும் நீ அநியாயம் செய்வது குறித்து எச்சரிக்கையாக இருந்து கொள்!”
{ முகநூலில் الوجه الآخر للحياة எனும் பக்கத்தில் }
*”دموع المظلومين هي في أعينهم مجرد ماء، ولكنها عند الله صواعق يضرب بها الظالم! فاحذر أن تظلم أحدا "*
{ صفحة الوجه الآخر للحياة في فيس بوك }
“அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிவதைப் பற்றி) அஞ்சுங்கள்! ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை!!” என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரழி) அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்த போது கூறினார்கள்.
{ நூல்:புகாரி - 2448 }
4)சூரிய, சந்திர கிரகணத்தைத் தெரிந்திருக்கும் நீங்கள், உள்ளக் கிரகணம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
இஸ்லாமியப் பேரறிஞர் இமாம் இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்)கூறுகின்றார்கள்:
“அல்லாஹ்வின் அன்பும், அவனைச் சந்திப்பதற்கான தயார் நிலையும் மனிதனின் உள்ளத்தை விட்டும் நகர்ந்து சென்று, அவ்வுள்ளத்தில் படைத்தவன் அல்லாது படைப்பினங்களின் அன்பு குடிகொண்டு, அவ்வுள்ளம் இவ்வுலக வாழ்க்கை குறித்து திருப்தியும் ஆசையும் கொண்டு, அதன் மூலம் நிம்மதியும் அமைதியும் அது பெற்றுவிட்டதாக எப்போது நீ கண்டு விட்டாயோ அப்போது அவ்வுள்ளத்தில் கிரகணம் ஏற்பட்டு விட்டது என்று உறுதியாகவே நீ அறிந்து கொள்!”
{ நூல்: 'பதாஇஉல் பfவாயித்', 3/743 }
قال الإمام العلامة إبن القيم الجوزية رحمه الله تعالى:
*[ متى رأيت قلب الرجل قد ترحّل عنه حب الله والإستعداد للقائه، وحلّ فيه حب المخلوق دون الخالق، والرضا والقنوع بالحياة الدنيا، والطمأنينة بها، والسكون إليها فاعلم يقينا أنه قد خسف به ]*
{ بدائع الفوائد، ٣/٧٤٣ }
5)ஆன்மீக ரீதியான பாதுகாப்பு விடயத்தில் அலட்சியம் வேண்டாம்! அல்லாஹ்வே போதுமானவன்!!
🔹கவலையால் சோதிக்கப்பட்டவனின் நிலை குறித்து ஆச்சரியப்படுகின்றேன்!
“ 'உண்மையாக வணங்கத் தகுதியானவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை. நீ தூய்மையானவன்; நான் அநீதியிழைத்தோரில் ஆகிவிட்டேன்' என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார்”
(அல்குர்ஆன், 21:87)
என்ற அல்லாஹ்வின் இவ்வார்த்தை குறித்து இவன் எப்படி கவனயீனமாக இருக்க முடியும்?
ஏனெனில், இதன் பின்னர்தான் அல்லாஹ் கூறுகின்றான்: “(யூனுஸ் நபியாகிய) அவரது பிரார்த்தனையை நாம் ஏற்றுக்கொண்டோம்; கவலையிலிருந்து அவரை நாம் காப்பாற்றினோம்; இவ்வாறே நம்பிக்கையாளர்களையும் நாம் காப்பாற்றுவோம்”
(அல்குர்ஆன், 21:88).
🔹துன்பத்தால் சோதிக்கப்பட்டிருப்பவனின் நிலை குறித்தும் ஆச்சரியப்படுகின்றேன்.
“எனக்குத் துன்பம் நேர்ந்துவிட்டது; நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்!” என (அய்யூப் தமது இரட்சகனை அழைத்தார்)
[ அல்குர்ஆன், 21:83 ] என்ற அல்லாஹ்வின் இவ்வார்த்தை குறித்து இவன் எப்படி கவனயீனமாக இருக்க முடியும்?
ஏனெனில், இதன் பின்னர்தான் அல்லாஹ் இப்படிக் கூறுகின்றான்: “அவரது பிரார்த்தனையை நாம் ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தையும் நாம் நீக்கினோம்!”
(அல்குர்ஆன், 21:84)
🔹அச்சத்தால் சோதிக்கப்பட்டிருப்பவனின் நிலை குறித்தும் ஆச்சரியப்படுகின்றேன்!
“மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே, அவர்களுக்கு நீங்கள் அஞ்சிக்கொள்ளுங்கள்! என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. 'எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்!' என்று அவர்கள் கூறினர்”
(அல்குர்ஆன், 3:173)
என்ற அல்லாஹ்வின் இவ்வார்த்தை குறித்து இவன் எப்படி கவனயீனமாக இருக்க முடியும்?.
ஏனெனில், இதன் பின்னர்தான் அல்லாஹ் இப்படிக் கூறுகிறான்: “எனவே அவர்கள் அல்லாஹ்வின் அருளுடனும், பாக்கியத்துடனும் திரும்பினார்கள். அவர்களுக்கு எந்தக் கேடும் ஏற்படவில்லை!”
(அல்குர்ஆன், 3:174)
{ முகநூலில் الطيب محمد என்பவர் }
👈🏿🔹 عجبت لمن ابتلي بغمّ، كيف يغفل عن قول الله: *[ لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ]*
والله يقول بعدها: *[ فاستجبنا له ونجيناه من الغمّ ]*
🔹👈🏿 عجبت لمن ابتلي بضرّ ، كيف يغفل عن قول الله: *[ ربّي إني مسّني الضّرّ وأنت أرحم الراحمين ]*
والله يقول بعدها: *[ فاستجبنا له وكشفنا ما به من ضرّ ]*
🔹👈🏿 عجبت لمن ابتلي بخوف، كيف يغفل عن قول الله: *[ الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوههم فزادهم إيمانا وّقالوا حسبنا الله ونعم الوكيل]*
والله يقول بعدها: *[فانقلبوا بنعمة من الله وفضل لّم يمسسهم سوء ..]*
6)மகா கெட்ட பாவமே இந்த வட்டி!!
இமாம் மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்:
அல்லாஹ்வின் வேதத்தையும், அவனது நபியின் சுன்னாவையும் புரட்டிப் பார்த்தேன். அப்போது, வட்டியை விட மகா கெட்ட பாவமாக வேறு எதையும் நான் காணவில்லை! காரணம், இது விடயத்திலேதான் தன்னோடு போர் புரிவதற்கான பிரகடனத்தைச் செய்யுமாறு அல்லாஹ் அழைப்பு விடுக்கின்றான்!
{ நூல்: 'தப்fசீர் அல்குர்துபீB', 3/364 }
قال الإمام مالك رحمه الله تعالى: *[ إني تصفّحت كتاب الله وسنة نبيه فلم أر شيئا أشرّ من الرّبا لأن الله آذن فيه بالحرب]*
{ تفسير القرطبي، ٣/٣٦٤ }
அல்லாஹ் கூறுகிறான்: “நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் வட்டியில் எஞ்சியுள்ளதை விட்டு விடுங்கள். (அவ்வாறு) நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனம் செய்யப்பட்டு விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்!”
(அல்குர்ஆன், 2:278,279)
7)உள்ளம் கெட்டுப்போனவனே அஹ்லுஸ்ஸுன்னாக்களைத் திட்டுவான்!
அல்லாமா ஸாலிஹ் அல்பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ரஹ்) கூறுகின்றார்கள்:-
“உள்ளம் கெட்டுப்போன மோஷமானவனைத் தவிர வேறு யாரும் (குர்ஆன், சுன்னா அடிப்படையில் வாழும்) அஹ்லுஸ்ஸுன்னாக்களையும், ஹதீஸ் துறை அறிஞர்களையும் திட்டமாட்டான். அவர்களின் தனிப்பட்ட விடயங்களுக்காக இவன் அவர்களைத் திட்டுவதில்லை. அவர்கள் சுமந்திருக்கும் அறிவுக்காகவும், சத்தியத்தை அவர்கள் பாதுகாக்கின்றார்கள் என்பதற்காகவும் வேண்டித்தான் இவன் அவர்களைத் திட்டுகிறான்!”
{ நூல்: 'ஷர்ஹுல் காபிfயா அஷ்ஷாபிfயா', பக்கம்: 603 }
قال العلامة صالح الفوزان الفوزان حفظه الله تعالى:-
*[ لا يسب أهل السنة وعلماء الحديث إلا خبيث فاسد القلب، لأنه ما سبهم من أجل أشخاص، إنما من أجل ما يحملونه من العلم والدفاع عن الحق ]*
8)இவன்,சத்தியத்தைப் பார்க்கவேமாட்டான்!
அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:-
“அறிவையும் விளங்கிக் கொள்ளும் சக்தியையும் எவனுக்கு அல்லாஹ் குருடாக்கி விட்டானோ அவன், சத்தியத்தின் ஒளிகளுக்கு முன்னால் போய் நின்று கொண்டாலும் அவற்றைப் பார்க்கவேமாட்டான்! அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!!!
{ நூல்: 'ஷர்ஹுல் அகீதா அல்வாசிதிய்யா', பக்கம்: 33 }
قال العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:
*[ من أعمى الله بصيرته، لو وقف أمام أنوار الحق ما رآها. والعياذ بالله! ]*
{ شرح العقيدة الواسطية، ص - ٣٣ }
9)பொறுமை ஓர் பொக்கிஷம்!
இமாம் ஹஸனுல் பஸரீ(ரஹ்) கூறுகின்றார்கள்:-
“பொறுமை, சுவனப் புதையல்களில் ஓர் புதையலாகும். ஒரு மணி நேரப் பொறுமை மூலம் அனைத்து நலவுகளையும் மனிதன் அடைந்து கொள்கிறான்!”
{ நூல்: 'ஆதாபுbல் ஹசன்', பக்கம்: 38 }
قال الإمام الحسن البصري رحمه الله تعالى:
*[ الصّبر كنز من كنوز الجنة، وإنما يدرك الإنسان الخير كله بصبر ساعة!"*
{ آداب الحسن، ص - ٣٨ }
10)நீ செய்யும் நல்ல பணியை உன் கிராமத்தவர்கள் மறுப்பது உனக்கு நன்மையேதான்!!
இமாம் அபூ இஸ்ஹாக் இப்ராஹீம் பின் மூசா அஷ்ஷாதிபீb (ரஹ்) கூறுகின்றார்கள்:
அசத் இப்னு மூசா (ரஹ்) அவர்கள் அசத் இப்னுல் புfராத் (ரஹ்) அவர்களுக்கு இவ்வாறு கடிதம் எழுதினார்கள்:-
“எனதருமைச் சகோதரா! அல்லாஹ் உமக்கு வழங்கியிருக்கும் நல்லவற்றிலிருந்து நீர் செய்யும் மக்கள் பணியை உமது கிராம மக்கள் மறுப்பதும், சுன்னாவை நீர் வெளிப்படுத்தியதால் உமது நிலைமை சிறந்திருப்பதும், மார்க்கத்தில் இல்லாததை மார்க்கமாகப் புகுத்திச் செயல்படும் பித்அத்வாதிகளை நீர் பழிப்பதும், (சரியான விளக்கத்தை) அவர்களுக்கு அதிகமாக நீர் நினைவூட்டுவதும், (தவறுகளைத் திருத்தும் நோக்கில்) அவர்கள் மீது நீர் குறை காண்பதும் ஆகிய இக்காரணிகள்தான் இக்கடிதத்தையே உமக்கு நான் எழுத என்னைத் தூண்டியவைகளாகும்.
சகோதரா! உன் மூலம் அவர்களை அல்லாஹ் அடக்கிவிட்டான்; உன்னைக்கொண்டு அஹ்லுஸ்ஸுன்னாக்களின் முதுகை அவன் பலப்படுத்தி விட்டான்; அவர்களின் குறைகளை நீ வெளிப்படுத்தியதனால் அவர்களுக்கெதிராக உனக்கு அவன் பலத்தைத் தந்து விட்டான்; இதன்மூலம் அல்லாஹ் அவர்களை இழிவுபடுத்திவிட்டான்; இதனால் அவர்கள் தமது பித்அத்துகளை மறைத்துக்கொண்டு செய்பவர்களாக மாறிவிட்டார்கள்!
எனதருமைச் சகோதரா! அல்லாஹ்வின் நற்கூலியைக் கொண்டு நீ நன்மாராயம் பெற்றுக்கொள்! தொழுகை, நோன்பு, ஹஜ், ஜிஹாத் ஆகியவற்றுக்குக் கிடைக்கும் சிறந்த கூலிகளில் இதையும் நீ முக்கியத்துவப்படுத்தி கணக்கிட்டுக்கொள்!
அல்லாஹ்வின் வேதத்தை நிலைநாட்டி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சுன்னாவை உயிர்ப்பிக்கும் இப்பணிகள் எங்கே போய் இருக்கப் போகின்றன தெரியுமா?!!”
{ நூல்: 'அல்இஃதிஸாம்', பக்கம்: 24 }
قال الإمام أبو إسحاق إبراهيم بن موسى الشاطبي رحمه الله تعالى:
*[ أن أسد بن موسى كتب إلى أسد بن الفرات: إعلم يا أخي! أن ما حملني على الكتب إليك ما أنكر أهل بلادك من صالح ما أعطاك الله من إنصافك الناس، وحسن حالك ممّا أظهرت من السنة، وعيبك لأهل البدع، وكثرة ذكرك لهم وطعنك عليهم. فقمعهم الله بك، وشدّ بك ظهر أهل السنة، وقواك عليهم بإظهار عيبهم، وأذلّهم الله بذلك وصاروا ببدعتهم مستترين. فأبشر يا أخي بثواب الله، واعتد به من أفضل حسناتك من الصلاة والصيام والحج والجهاد. وأين تقع هذه الأعمال من إقامة كتاب الله وإحياء سنة رسول الله صلى الله عليه وسلم؟!!"*
{ الإعتصام للشاطبي، ص - ٢٤ }
✍தமிழில்✍
அஷ்ஷெய்க் மெளலவிN.P.ஜுனைத் காஸிமி,மதனி
இன்ஷா அல்லாஹ் தொடரும்......✍
@Islaam For All Peoples
Like👍 And Follow Our Islaam For All Peoples Fb page:
https://www.facebook.com/islaam.community/
Subscribe Our Islaam For All Peoples YouTube channel:
https://www.youtube.com/channel/UC0Um0iqVeLLCZeHJGZM97zA
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர் - 3
💢💢💢💢💢💢💢💢💢💢
Comments
Post a Comment