ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-10



بسم الله الرحمن الرحيم
ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-10
(30.08.2018) 

தமிழில் அஷ்ஷெய்க் மெளலவி N.P.ஜுனைத் காஸிமி,மதனி.

1)இறுதி முடிவு இனிதாய் அமைய இறைவனிடம் இறைஞ்சுவோம்!!

           இமாம் இஸ்மாஈல் அந்நைசாபூbரீ (ரஹ்) அவர்கள் மரணத்தறுவாயில் இருந்தார்கள்.
அப்போது அவரிடம்  அவரது தாய், “எதைப் பெற்றுக்கொள்கிறாய்  மகனே?” என்று கேட்டார்கள். ஆனால், அவரால் பேச முடியவில்லை. உடனே அவர் தனது தாயின் கையில், (அல்குர்ஆனின் 56-ம் அத்தியாயம், 89-வது வசனத்தில் வருகின்ற)

«فروح وريحان وجنة نعيم»
 “அவருக்கு நலமும், மணமும், அருள் நிறைந்த சுவர்க்கமும் உண்டு”

என்பதை எழுதிவிட்டு பின்னர் மரணத்துவிட்டாா்.

{ நூல்: 'சியரு அஃலாமின் நுபbலா', 29:161 }


            [ إحتضر إسماعيل النيسابوري , فقالت أمه: *"ما تجد؟"*، فما قدر على النطق، فكتب على يدها: *« فروح وريحان وجنة نعيم »*، ثم مات]
{ سير أعلام النبلاء ، ٢٠/ ١٦١ }

2)இறையச்சம் சரியாக இருந்தால் எல்லாமே நலவாகி விடும்!!

          அல்லாமா இப்னுல் ஜவ்ஸீ (ரஹ்) அவர்கள் தனது மகன் அபுல் காசிம் என்பவருக்கு எழுதிய பிரபலமான வஸிய்யத்தில் வந்திருக்கிறது......

            “எனதருமை மகனே! இறையச்சம் எப்போது சரியாகி விடுமோ அப்போது அனைத்து நலவுகளையும் நீ கண்டு கொள்வாய். இறையச்சமுடைய ஒருவன், மனிதர்கள் பார்த்து பாராட்ட வேண்டும் என்பதற்காக வணக்க வழிபாடுகளைச் செய்யமாட்டான்; தனது மார்க்கத்துக்கு தொந்தரவு ஏற்படுத்துவதற்காகவும் அவன் செயல்படமாட்டான்; அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணி நடப்பவனை அல்லாஹ் பாதுகாக்கின்றான். நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களுக்கு, 'அல்லாஹ்வின் கடமைகளை நீ பேணிப் பாதுகாத்துக் கடைப்பிடித்துக்கொள்; அவன் உன்னைப் பாதுகாப்பான்! அல்லாஹ்வின் கடமைகளை நீ பேணிப் பாதுகாத்துக் கடைப்பிடித்து வந்தால் உனக்கு முன்னால் அவனை நீ கண்டு கொள்வாய்!' என்று கூறினார்கள்.

            என் அன்பு மகனே! நபி யூனுஸ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் பாதுகாப்பு ஆயுதம்  சிறந்ததாக இருந்தபோது அதன் மூலம் கடும் கஷ்டத்திலிருந்து அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்பதை நீ புரிந்து கொள்! இது குறித்து அல்லாஹ் கூறுகிறான்: '(நம்மைத்) துதிப்பவர்களில் அவர் இல்லாதிருந்திருப்பின், (மண்ணறையிலிருந்து உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாள் வரை (மீன் ஆகிய) அதன் வயிற்றிலேயே அவர் தங்கியிருந்திருப்பார்!'    (அல்குர்ஆன், 37:143,144)

         பிர்அவ்னைப் பொறுத்தவரை, அவனின் பாதுகாப்பு ஆயுதம் நல்லதாக இல்லாதிருந்தபோது கஷ்டம் நிறைந்த அந்தக் கடும் ஆபத்தில் வைத்து  அவனைப் பாதுகாக்கின்ற ஒன்றையும் அவனால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. அப்போது அவனுக்கு, 'இப்போதுதானா (நம்பிக்கை கொள்கிறாய்?) சற்று முன்னர் வரை நிச்சயமாக நீ மாறு செய்து, குழப்பம் விளைவிப்போரில் உள்ளவனாக இருந்தாய்' என்று கூறப்பட்டது.(அல்குர்ஆன், 10:91)

           எனவே, உனக்கான நல்ல பாதுகாப்பு ஆயுதங்களை இறையச்சத்திலிருந்து நீ ஆக்கிக்கொள்; அப்போது அதன் தாக்கத்தை நீ பெற்றுக்கொள்வாய்!

 { நூல்: 'லப்fததுல் கபிbத் இலா நஸீஹதில் வலத்' லிப்னில் ஜவ்ஸீ, பக்கம் : 33 }

            قال العلامة إبن الجوزي رحمه الله تعالى في وصيته المشهورة لابنه أبي القاسم:-

           *[ يا بنيّ! ومتى صحت التقوى رأيت كل خير، والمتّقي لا يرائي الخلق ولا يتعرّض لما يؤذي دينه، ومن حفظ حدود الله حفظه الله، قال رسول الله صلى الله عليه وسلم لابن عباس رضي الله عنهما: « إحفظ الله يحفظك، إحفظ الله تجده أمامك »*

         *واعلم يا بنيّ! أن يونس عليه السلام لمّا كانت ذخيرته خيرا نجا بها من الشّدّة. قال الله عزّ وجلّ: { فلولا أنه كان من المسبّحين للبث في بطنه إلى يوم يبعثون } «الصّافّات: ١٤٣،١٤٤»*

           *وأما فرعون فلمّا لم تكن ذخيرته خيرا لم يجد في شدّته مخلّصا فقيل له: { آلآن وقد عصيت قبل وكنت من المفسدين } « يونس: ٩١ »*

                  *فاجعل لك ذخائر خير من التقوى تجد تأثيرها ]*
{ لفتة الكبد إلى نصيحة الولد لابن الجوزي،  ص - ٣٣ }

3)பொய் வராதபடி பேச்சில் அவதானம் தேவை!!

         இமாம் அபூ ரவ்ஹ், ஹாதம் பின் யூசுப் (ரஹ்) கூறுகின்றார்கள்:-

         நான் புfழைல் பின் இயாழ் (ரஹ்) அவர்களின் வாசல் படி சென்று, அவருக்கு சலாம் கூறி, “அலியின் தந்தை (புfழைல்) அவர்களே! என்னிடம் ஐந்து நபிமொழிகள் இருக்கின்றன; (உங்களிடம்  உறுதிப்படுத்தி எழுதிக்கொள்வதற்காக) நீங்கள் அனுமதித்தால் அவற்றை உங்களுக்கு வாசித்துக் காட்டுவேன்!” என்று சொல்லி (அவர் அனுமதிக்க) வாசித்துக் காட்டினேன். ஆனால் அதுவோ ஆறு நபிமொழிகளாக இருந்தன. உடனே என்னிடம் அவர்கள், “அடச் சீ; எழுந்து விடு மகனே! (முதலில்) உண்மை பேசக் கற்றுக் கொள்; பின்னர், நபிமொழியை நீ எழுதிக்கொள்!” என எனக்குக் கூறினார்கள்.

{ நூல்: 'தாரீஹு திமிஷ்க்' லிப்னி அசாகிர் , 48/430 }

            قال أبو روح حاتم بن يوسف رحمه الله تعالى:-
          أتيت باب الفضيل بن عياض فسلّمت عليه، فقلت: *"يا أبا علي! معي خمسة أحاديث إن تأذن لي فأقرأ عليك، فقرأت؛ فإذا هو ستة! "*
فقال لي: *" أف؛ قم يا بني! تعلّم الصدق، ثم أكتب الحديث "*.
{تاريخ دمشق لابن عساكر ، ٤٨/٤٣٠ }

 அல்லாமா இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) அவர்கள்,

உண்மையாளர்களிடம் அவர்களது உண்மையைப் பற்றி அவன் விசாரணை செய்வதற்காக (உறுதிமொழி எடுத்தான்)”
(அல்குர்ஆன், 33: 08) என்ற இவ்வசனத்திற்கு இவ்வாறு தனது கருத்தைப் பதிவு செய்கிறார்கள்:-
“உண்மையாளர்கள், அவர்களது உண்மை குறித்து வினவப்பட்டு விசாரிக்கப்படுவார்கள் என்றிருக்குமாக இருந்தால், பொய்யர்களின் நிலைமை குறித்து என்னதான் நினைத்துப் பார்க்க இருக்கிறது?!”

{ நூல்: 'இஆஸதுல் லஹ்பாfன்', 01/83 }

             
          قال تعالى: *« ليسأل الصادقين عن صدقهم »*
            قال العلامة إبن القيم الجوزية رحمه الله تعالى:-
              *[ فإذا سئل الصادقون وحوسبوا على صدقهم، فما الظن بالكاذبين؟! ]*
{ إغاثة اللهفان،  ١/٨٣ }

4)வேர்களைப் பாழ்படுத்தி, கிளைகளைப் பாதுகாக்கும் மனிதர்கள்!!

         இமாம் இப்னுல் ஜவ்சீ (ரஹ்) கூறுகின்றார்கள்:- 

          “மனிதர்களில் அதிகம் பேரை நான் பார்த்திருக்கிறேன்.  அவர்கள் அசுத்தமொன்றைத் தெளித்து பூசிக்கொள்ளாதவாறு பக்குவமாகவும் பாதுகாப்பாகவும்  இருந்து கொள்கிறார்கள்; ஆனால், புறம்பேசுவதிலிருந்து விலகித் தூரமாகாமல் அவர்கள்  இருந்து விடுகின்றார்கள்!. தானதர்மங்களை அவர்கள் அதிகமாகச் செய்கிறார்கள்; ஆனால், வட்டியுடன் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களில் அவர்கள் கணக்கில்லாமல் இருக்கிறார்கள்!. இரவில் அவர்கள் தஹஜ்ஜுத் தொழுகிறார்கள்; ஆனால், பர்ழான தொழுகையை உரிய நேரத்தில் தொழாமல்  பிற்படுத்துகிறார்கள்!. இவ்வாறு, அடிப்படைகளைப் பாழ்படுத்திக்கொண்டு கிளைகளை (மட்டும்) பாதுகாக்கும் இவர்களது  விடயங்களின் எண்ணிக்கை நீண்டு செல்கிறது... !

           இதற்கான காரணம் என்னவாக இருக்கும்? என நான் ஆய்வு செய்து பார்த்தபோது, பின்வரும் இரண்டு விடயங்களிலிருந்துதான் அது வந்திருக்கிறது என்பதாக கண்டுகொண்டேன்:

1- (மக்களால் பின்பற்றப்பட்டு வரும்) வழமை.

2-தேடப்படுபவற்றைப் பெற்றுக்கொள்வதில் மனோ இச்சை வெற்றியடைந்தமை :  
சில நேரங்களில் இந்த மனோ இச்சை வெற்றிபெற்று விடுகிறது! அப்போது இது, (நல்லதைச்) செவிமடுக்கும்படியோ, பார்க்கும்படியோ மனிதனை விட்டு விடாது!” 

{ நூல்: 'ஸைதுல்  ஹாதிர்', 01/177 }

               قال الإمام إبن الجوزي رحمه الله تبارك تعالى:-
            *[ رأيت كثيرا من الناس يتحرزون من رشاش نجاسة، ولا يتحاشون من غيبة! ويكثرون من الصدقة، ولا يبالون بمعاملات الرّبا!ويتهجدون بالليل، ويؤخرون الفريضة عن الوقت! في أشياء يطول عددها، من حفظ فروع وتضييع أصول!*

         *فبحثت عن سبب ذلك؟ فوجدته من شيئين:-*
*أحدهما: العادة.*

*الثاني: غلبة الهوى في تحصيل المطلوب، فإنه قد يغلب، فلا يترك سمعا ولا بصرا ]*
{ صيد الخاطر ،  ١/١٧٧ }

5)வழி காட்டும் கழுதையும், வழி தெரியாதிருக்கும் சில மனிதர்களும்!!

         அல்லாமா இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) கூறுகின்றார்கள்:-

          “மிருகங்களிலேயே ஆகப் புத்தியற்ற மிருகமாக கழுதை இருந்தும்,  (போகும் இடத்திற்கான) வழியைக் காட்டுகின்ற தன்மை அதிலே இருக்கிறது. எப்படியெனில், ஒரு மனிதன் அதிலே பயணம் மேற்கொள்கிறான்;  தூரத்திலிருந்து இருள் நிறைந்த இரவில் அவனை அது கொண்டு சென்று அவனது வீட்டை சரியாக  அறிந்து கொள்கிறது; தனிமையில் விடப்பட்டாலும் அவனின் வீட்டிற்கு அது வந்து சேர்ந்து  விடுகிறது; தன்னை நிறுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்ற சத்தம், செல்வதற்குத் தூண்டப்படுகின்ற சத்தம் ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாட்டையும் அது பிரித்து அறிந்து கொள்கிறது!

            எனவே, எவனொருவன் 'சுவர்க்கம்' என்ற தனது வீட்டிற்குச் செல்வதற்கான வழியை  அறியவில்லையோ அவன் கழுதையை விட புத்தியற்றவனாவான்!”

{ நூல்: 'ஷிபாfஉல் அலீல்', பக்கம்: 76 }

            قال العلامة إبن القيم الجوزية رحمه الله تعالى:-
          *[ من هداية الحمار - الذي هو أبلد الحيوانات - أن الرجل يسير به ويأتي به إلى منزله من البعد في ليلة مظلمة فيعرف المنزل، فإذا خلي جاء إليه، ويفرق بين الصوت الذي يستوقف به والصوت الذي يحث به على السير*.

           *فمن لم يعرف الطريق إلى منزله - وهو الجنة - فهو أبلد من الحمار ! ]*
{ شفاء العليل ،  ص -  ٧٦ }

6)அறிஞர்களிடம் விளக்கம் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளாத வெறும் புத்தகப் படிப்பு, சில நேரங்களில்  ஆபத்தாகி விடும்!!

            சஊதி அரேபிய நாட்டு அறிஞர்  அல்லாமா ஸாலிஹ் பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

           “யாருடைய ஆசிரியர் புத்தகமாக இருக்கிறதோ அவரிடம், சரியை விட தவறே அதிகமாக இருக்கும்!” என்று பழமொழியொன்று சொல்லப்பட்டிருக்கிறது.
            சம்பவம் ஒன்று இவ்வாறு கூறப்படுகிறது:
           அல்குர்ஆனுக்குப் பின்னர் சிறந்த நூல் என்பதாக மதிக்கப்படக்கூடிய 'ஸஹீஹுல் புகாரி' எனும் ஹதீஸ் நூலை ஒருவர் வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது, “الحبّة السوداء -கருஞ்சீரகம்- மரணத்தைத் தவிர  எல்லா நோய்க்கும் மருந்தாகும்!”
(ஹதீஸ் இலக்கம் - 5687) என்ற ஹதீஸுக்கிட்டே வந்த  அவர்,
الحبّة السوداء (கருஞ்சீரகம்) என்பதற்குப் பதிலாக الحيّة السوداء (கரும் நாகப் பாம்பு) என்று வாசித்து விட்டார்!. (அதாவது, الحبّة எனும் வார்த்தையில் வருகின்ற ب எழுத்தை ي எழுத்தாக வாசித்து, الحيّة (பாம்பு) என்று தவறாக விளங்கிவிட்டார். الحيّة السوداء என்று வருகின்ற போது 'கரும் நாகப் பாம்பு' என அர்த்தமாகி விடுகிறது!)

             உடனே அவர், வெளியே சென்று கரும் நாகப் பாம்பு ஒன்றைத் தேடிக் கண்டுபிடித்து  அதைக் கொன்று சாப்பிட்டார்; உடனே,  விஷத் தாக்கத்தால் அவர் உயிரிழந்து போனார்!.

           எனவே அவர், (ஹதீஸில் வந்த குறிப்பிட்ட) அவ்வார்த்தை குறித்து அறிஞரொருவரிடம் கேட்டு, அதன் அர்த்தத்தை அவர் உறுதிப்படுத்தியிருந்தால் அவர் பாதுகாப்பும் ஈடேற்றமும் பெற்றிருப்பார்!!.

            எனவே, அறிஞர்களிடம் சென்று விளக்கம் பெற்று,  உறுதிப்படுத்திக்கொள்ளாத ஒருவரின் வெறும் புத்தகப் படிப்பு (சில வேளைகளில்) அவருக்கும், அவரல்லாத பிறருக்கும் பெரும் தீங்காகி விடும். மனிதர்களில் இப்படி அறிவாளிகள் போல் காட்டிக்கொண்டு பெருமை பாராட்டித் திரியும் எத்தனை பேர் அழிந்தே போய்விட்டனர் என்பதைக் கொஞ்சம் பாருங்கள்!!?.

{ நூல்: 'துருகு தஅல்லுமில் இல்ம்', பக்கம்: 10 }

             قال العلّامة صالح فوزان الفوزان حفظه الله تعالى:-
            قد قيل: *« من كان شيخه كتابه كان خطأه أكثر من صوابه »*
              يذكر أن رجلا طالع صحيح البخاري، وهو أصح كتاب بعد القرآن الكريم! فجاء على حديث: *« الحبة السوداء شفاء من كل داء إلا السّام »*، فقرأها *« الحيّة السوداء »* بالياء. فذهب وبحث عن حيّة سوداء ، ثم قتلها وأكلها فمات من أثر السّمّ. فلو سأل عالما عن هذه اللفظة وتأكد منها لسلم!!.

             فمجرد المطالعة من دون الرجوع إلى أهل العلم مضرة عظيمة على الإنسان وعلى غيره. فانظر كم أهلك المتعالمون من الناس!!.
{ طرق تعلّم العلم،  ص - ١٠ }

7)இந்த இயல்புகளையுடைய மனிதர்களாக இருக்காதீர்கள்!!

           அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் அல்ஜர்பூbஃ (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

          “மனிதர்களில் சில தரப்பினர் இருக்கின்றார்கள். அவர்கள் ஷைத்தானிய இயல்புகளையுடையவர்கள்; அவர்களிடமிருந்த நல்ல இயல்புத் தன்மையெல்லாம் (அவர்களை விட்டும்)  சென்றுவிட்டன; அவர்களின் உள்ளங்களும் கல்லாகி விட்டன!  நல்லதை அவர்கள் விரும்பாதிருப்பது மாத்திரமின்றி அதனோடு விரோதமும் பாராட்டுகின்றனர்.
 அல்லாஹ் கூறுவது போல, “(சத்தியத்தை விட்டும்) அவர்கள் விலகிச் சென்ற போது, அல்லாஹ்வும் அவர்களது உள்ளங்களை  விலகச் செய்தான்!”. (அல்குர்ஆன்,61:05).

மேலும், அவர்களின் செவிப்புலனிலும் பார்வைகளிலும் (நல்லதைக் கேட்காதவாறும், பார்க்காதவாறும்) அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான்!

             அல்லாஹ் கூறுகிறான்: “அவர்களின் உள்ளங்களிலும், அவர்களின் செவிப்புலனிலும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களின் பார்வைகள் மீது திரையும் இருக்கின்றது. மேலும், அவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு”. 
(அல்குர்ஆன், 02:07)

           மற்றொரு வழிகெட்ட பிரிவினரும் மனிதர்களில் இருக்கின்றனர். கற்பனைகளுக்கும், மெளட்டீகங்களுக்கும், (சமூகம் பின்பற்றி வரும்) வழமைகளுக்கும், கண்மூடித்தனமான பின்பற்றல்களுக்கும் இவர்கள் அடிபணிந்து விட்டவர்கள்; தாம் விரும்பும் மார்க்கத்தை இதிலிருந்தே இவர்கள் ஆக்கிக்கொண்டனர்; தாமும் இதில் வளர்ந்து, தமது சந்ததியினரையும் இதிலேயே வளர்த்தும் விட்டனர்; இதிலிருந்து  பிரிவதென்பது இவர்களுக்கு கஷ்டமாகி விட்டது! தமது இந்த அனந்தரப் பழக்கத்தையும், தமது மூதாதையர்களின் அடையாளத்தையும் பாதுகாத்தல் என்ற போர்வையில் சத்தியத்திற்கு இவர்கள் மாறு செய்து ம் விட்டனர்! இந்த வகை மனிதர்கள் குறித்துத்தான் அல்லாஹ் இவ்வாறு சுட்டிக்காட்டுகிறான்:
“அவர்களிடம், 'அல்லாஹ் இறக்கியதைப் பின்பற்றுங்கள்!' என்று கூறப்பட்டால் 'இல்லை; நாம் நமது மூதாதையர்களை எதில் இருக்கக் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்!' எனக் கூறுகின்றனர். அவர்களின் மூதாதையர்கள் எதையும் விளங்காதவர்களாவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலுமா? (பின்பற்றுவார்கள்?)”. 
(அல்குர்ஆன், 02:170)

{ நூல்: 'அதருல் ஈமான் பீf தஹ்ஸீனில் உம்மதில் இஸ்லாமிய்யா', பக்கம் : 68,69 }

            قال الشيخ عبدالله بن عبدالرحمن الجربوع حفظه الله:-
            [ فهناك فئات من الناس لها طبائع شيطانية، قد انتكست فطرها وقست قلوبها، لا يحبّون الخير بل يعادونه. قد زاغوا فأزاغ الله قلوبهم، وختم على سمعهم وأبصارهم كما قال تعالى: *« فلما زاغوا أزاغ الله قلوبهم »* وقال: *« ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم »*.

              وطائفة ضالّة أخرى خضعت للأوهام والخرافات، والعادات والتقاليد. وجعلت منها دينا ألفته، وتربّت عليه، وربّت عليه أجيالها، حتى صعب عليها فراقه، وخالفت الحق محافظة على ميراثها وسمة أجدادها. وقد أشار الله إلى هذا النوع بقوله: *« وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أو لوا كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون »*.
{ أثر الإيمان في تحصين الأمة الإسلامية،  ص - ٦٨،٦٩ }

8)உண்மையைக் கடைப்பிடியுங்கள்! பொய்யை விட்டும், மோசடியை விட்டும் தூரமாகுங்கள்!!

         இமாம் சுப்fயான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள், அலி இப்னுல் ஹசன் அஸ்ஸுலமீ  அவர்களுக்குச் செய்த உபதேசத்தில் இவ்வாறு வந்திருக்கிறது:-

         “அனைத்து இடங்களிலும் உண்மையை நீ இறுகப் பற்றிப் பிடித்துக்கொள்; பொய் மற்றும் மோசடியை விட்டும், இவற்றில் ஈடுபடுவோருடன் அமர்வதை விட்டும் உன்னை நான் எச்சரிக்கிறேன்! ஏனெனில், இவையனைத்துமே பாவமாகும். மரணத்தை நினைவுகூர்வதை அதிகப்படுத்திக் கொள்; முன் சென்ற உன் பாவங்களுக்காக (அல்லாஹ்விடம்) பிழைபொறுக்கத் தேடுவதையும் நீ அதிகப்படுத்திக்கொள். அத்தோடு, எஞ்சியிருக்கும் உன் வாழ்நாளுக்காக அல்லாஹ்விடம் ஈடேற்றத்தையும் சாந்தியையும் நீ வேண்டிக்கொள்!”

{ நூல்: 'ஹில்யதுல் அவ்லியா', 07/82 }

               قال الإمام سفيان الثوري فيما أوصى به عليّ بن الحسن السّلمي:-
            *[ عليك بالصدق في المواطن كلها، وإياك والكذب والخيانة ومجالسة أصحابها، فإنها وزر كلّه. وأكثر ذكر الموت، وأكثر الإستغفار ممّا قد سلف من ذنوبك، وسل الله السّلامة لما بقي من عمرك! ]*
{ رواه الإمام أبو نعيم الأصفهاني رحمه الله في 'حلية الأولياء'،  ٧/٨٢ }

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

“உண்மை, நன்மைக்கு வழிகாட்டும்; நன்மை சுவர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் 'உண்மையாளர்' (ஸித்தீக்) எனப் பதிவு செய்யப்படுவார். பொய், தீமைக்கு வழி வகுக்கும்;தீமை நரகத்திற்கு வழி வகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக்கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் 'பெரும் பொய்யர்' எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார்!”
 (நூல் : முஸ்லிம் - 5081)

அல்லாஹ் கூறுகிறான்: “நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் மோசடி செய்யாதீர்கள். நீங்கள் அறிந்துகொண்டே உங்களிடமுள்ள அமானிதங்களுக்கும் மோசடி செய்யாதீர்கள்!”
 (அல்குர்ஆன், 08:27)

9)அல்லாஹ்வைப் பார்க்கும் இன்பமே சுவர்க்கத்தில் கிடைக்கும் ஆகப்பெரிய இன்பமாகும்!

           அல்லாமா இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) கூறுகின்றார்கள்:-

           “சுவர்க்கம் என்பது: வெறும் மரங்கள், கனிகள், உணவு, பானம், கண்ணழகிகள், ஆறுகள், மாளிகைகள் இருக்கின்ற இடத்திற்குரிய பெயர் மாத்திரம் கிடையாது. இந்த சுவர்க்கத்தை அறிந்து கொள்கின்ற விடயத்தில் மனிதர்களில் அதிகமானோர் தவறிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

           பூரணத்துவமான முறையில், பொதுவான அமைப்பில் இன்பங்கள் இருக்கின்ற வீட்டிற்குப் பெயர்தான் சுவர்க்கம்!.  அல்லாஹ்வின் சங்கையான முகத்தைப் பார்த்துக்கொண்டும், அவன் பேச்சைக் கேட்டுக்கொண்டும், அவனுக்கு நெருக்கமாக இருந்து கண்குளிர்ச்சியடைந்து கொண்டும், அவனது திருப்தியைப் பெற்றுக்கொண்டும் அடைகின்ற இன்பம்தான் சுவனத்து இன்பங்களில் ஆகப்பெரிய இன்பமாகும்!.

          சுவர்க்கத்திலிருக்கின்ற உணவு, குடிபானம், ஆடை, காட்சிகள் போன்ற இன்பத்தை இவ்வுலக இன்பத்தோடு இணைத்துத் தொடர்புபடுத்தி ஒருபோதும் பார்க்கவே முடியாது!!”

{ நூல்: 'மதாரிஜுஸ் ஸாலிகீன்', 02/80 }

           قال العلامة إبن القيم الجوزية رحمه الله تعالى:-
              *[ الجنة ليست إسما لمجرد الأشجار، والفواكه، والطعام، والشراب، والحور العين، والأنهار، والقصور ! وأكثر الناس يغلطون في مسمى الجنة.*

         *فإن الجنة إسم لدار النعيم المطلق الكامل. ومن أعظم نعيم الجنة: التمتع بالنظر إلى وجهه الكريم، وسماع كلامه، وقرة العين بالقرب منه، وبرضوانه!.*

           *فلا نسبة للذة ما فيها: من المأكول، والمشروب، والملبوس والصور؛ إلى هذه اللذة أبدا ]!*
 { مدارج السالكين، ٢/٨٠ }

10)அல்லாஹ் அழகுபடுத்திய  தாடியை, சிரைத்து அசிங்கப்படுத்திக் கொள்ளாதீர்கள்!!

           சஊதி அரேபியாவின் தலைமை முப்fதியாக இருந்த அல்லாமா இப்னு பாஸ் (ரஹ்) கூறுகின்றார்கள்:-

           “தாடி என்பது, ஆணுக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைத்துள்ள கண்ணியமாகும்! பெண்களை விட ஆணுக்குரிய தனிச் சிறப்பம்சமாக இதை அல்லாஹ் ஆக்கி வைத்திருக்கிறான். தமது தாடிகளைச் சிரைத்து அல்லாஹ்வுக்கு மாறு செய்துகொண்டிருப்போரை விட்டும், மற்றும் நிராகரிப்பாளர்களை விட்டும் (முஸ்லிம் ஆண்களைப்) பிரித்துக்காட்டுகின்ற தனிச் சிறப்பம்சமாகவும் இதை அல்லாஹ் ஆக்கிவைத்திருக்கின்றான். இந்தவகையில் தாடி:

1} ஆணுக்கேயுரிய ஓர் அலங்காரமாகும்!

2} முகத்தில் (பிரகாசிக்கும்) ஓர் ஒளியாகும்!

3} பெண்களை விட்டுவிட்டு ஆணை (மாத்திரம்) பிரித்துக்காட்டுகின்ற தனியானதோர் சிறப்பம்சமாகும்!

{ நூல்: 'மஜ்மூஉல் பfதாவா', 07/17 }

             قال العلامة إبن باز رحمه الله تعالى:-
            *[ اللحية كرامة من الله للرجل، وجعلها الله ميزة له على النساء، وجعلها ميزة عن الكفرة والعصاة الذين يحلقون لحاهم.*
*❇ فهي زينة للرجل.*
*❇ وهي نور في الوجه.*
*❇ وهي ميزة له عن النساء.*
{ مجموع الفتاوى، ٧/١٧ }

அல்லாமா முஹம்மத் அல்அமீன் அஷ்ஷன்கீதீ (ரஹ்) கூறுகின்றார்கள்:- 

           “உரோம - பாரசீக மன்னர்களின் பொக்கிஷங்களை (போரின் மூலம்) முஸ்லிம் போராட்ட வீரர்கள் கைப்பற்றினார்கள்; பூமியின் கிழக்குப் பிரதேசங்களும் அதன் மேற்குப் பிரதேசங்களும் அவர்களிடம் வீழ்ந்தன. அவர்களில் ஒருவர்கூட தாடியைச் சிரைத்தவராக இருக்கவில்லை!!”

{ நூல்: 'தப்ஸீர் அழ்வாஉல் பbயான்', 04/94 }

           قال العلامة محمد الأمين الشنقيطي رحمه الله :-
         *[ والرجال الذين أخذوا كنوز كسرى وقيصر، ودانت لهم مشارق الأرض ومغاربها ليس فيهم حالق لحية! ]*
{ تفسير أضواء البيان، ٤/ ٩٤ }

✍தமிழில்✍
                   அஷ்ஷெய்க் மெளலவி
N.P.ஜுனைத் காஸிமி,மதனி
இன்ஷா அல்லாஹ் தொடரும்......✍

@Islaam For All Peoples
Like👍 And Follow Our Islaam For All Peoples Fb page:
https://www.facebook.com/islaam.community/

Subscribe Our Islaam For All Peoples YouTube channel:
https://www.youtube.com/channel/UC0Um0iqVeLLCZeHJGZM97zA


ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-9
http://islaamforallpeoples.blogspot.com/2018/07/01-b.html


Comments

Popular posts from this blog

அல் குர்ஆன் சுன்ன அடிப்படையில் கேள்வி பதில் தொகுப்புகள்

ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-3

Learn Al Qur'an With Tajweed Tamil