தவ்ஹீதால் ஒன்றிணைவோம் ஏன்? எதற்க்கு? ஆக்கம் : M.S அபுபக்கர் சித்திக் MA



بسم الله الرحمن الرحيم
தவ்ஹீதால் ஒன்றிணைவோம் ஏன்? எதற்க்கு?
ஆக்கம் : M.S அபுபக்கர் சித்திக் MA

அன்பு சகோதரர்கள் அனைவருக்கும் என் ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....

இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரம் என்பது குர்ஆன், சுன்ன. இது இரண்டுமே அல்லாஹ்வுடையை வஹி என்பதிலும் அஹ்லுஸ் ஸுன்னாவின் கொள்கை என்பதிலும் ஸஹாபாக்கள் முதல் இன்று வரை தவ்ஹீதை சொல்லக் கூடிய அனைத்து உலமாக்களின் ஒத்து மொத்த கருத்தாகும். இதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆரம்ப காலத்தில் தமிழகத்தில் தவ்ஹீதை சொன்ன JAQH அமைப்புதன் தொடர்து பிரச்சாரம் செய்து கொண்டிருந்த சில அறிஞர்கள் நாங்கள் அரசியலில் இது படப் போகின்றோம் என்று சொல்லி இன்று இருக்கின்ற தமுமுக அமைப்பை தொடங்கினார்கள். அதில் இருந்து சில கருத்து வேறுபாடு காரணமாக TNTJ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது என்பதுதான் சுருக்கமான வரலாறு.

சமீப காலமாக TNTJ (PJ) வின் கொள்கை இஸ்லாமிய வரலாற்றில் யாரும் சொல்லாத ஆதாரபூர்வமான ஹதீஸ் அல் குர்ஆனுக்கு முரண்பட்டால் அதை நாங்கள் ஏற்று கொள்ள மாட்டோம் என்ற ஒரு வழிகேட்ட கொள்கையின் நிலைபாடு தவ்ஹீத் பேசும் மக்களுக்கு மத்தியில் பிரிவினை ஏற்படுத்தி விட்டது.

நான் மேலே பதிவு செய்தது போல் அல்குர்ஆனும், சுன்னாவும் வஹிதான் வஹிவுடன் வஹி ஒரு போதும் முரண்படாது. இதற்கு ஆதாரம் பின்வருமாறு அல்லாஹ் கூறுகின்றான்:
وَمَا يَنْطِقُ عَنِ الْهَوٰى‏ 
அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.
(அல்குர்ஆன் : 53:3)

اِنْ هُوَ اِلَّا وَحْىٌ يُّوْحٰىۙ‏ 
அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை.
(அல்குர்ஆன் : 53:4)

ஆனால் ஒரு குறிப்பிட்ட அமைப்பு தவ்ஹீத் மக்களுக்கு மத்தியில் ஒரு நச்சு விதையை விதைத்து விட்டது. அதை வேற்றுதன் பிடிங்கி எடுப்படதற்க்கும் சரியான கொள்கையின்பால் மக்களை வழி நடத்தி செல்வதற்க்கும் எங்களால் முடிந்த ஒரு முயற்ச்சிதான் சென்னை மண்ணடி தம்பு செட்டி தெருவில் நடப்பெற்ற (27.10.2018) தவ்ஹீதால் ஒன்றிணைவோம் என்ற பொதுகூட்டம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இறுதியாக ஒரு ஆதாரபூர்வமான நபிமொழியைக் கொண்டு நிறைவு செய்கின்றேன். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் மறுமை நாள் வரை ஒரு  கூட்டம் சத்தியத்தில் வெளிப்படையாக இருந்து கொண்டே இருக்கும்.(ஆதாரம் :திர்மிதி)  
சகோதரர்களே இந்த ஒரு நபிமொழி போதும் எந்த ஒரு புதிய கொள்கை வந்தாலும் அது சத்தியமா ? அல்லது அசத்தியமா ? என்று தெரிந்துவிடும்.

ஸஹாபாக்கள் காலம் முதல் இன்று வரை ஒரு கூட்டம் சத்தியத்தில் வெளிப்படையாக இருந்து கொண்து வருகின்றது அது எந்த கூட்டம் என்பதை தான் நாம் இங்கு கவனிக்க வேண்டும். அதன் அடிப்படையில் நாம் தமிழகத்தை பார்க்கும்போது இரண்டு அமைப்புகளின் இஸ்லாமிய அகீதா (கொள்கை) சரியாக இருக்கின்றது. அதுதான் உருது மற்றும் தமிழில் மொழியில் தவ்ஹீதை மக்களுக்கு சொல்லக் கூடிய அமைப்பு அஹ்லே ஹதீஸ் இந்த அமைப்பு இந்திய முழுவதும் தவ்ஹீதை பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கின்றது. அதுபோல் தமிழகத்தில் சரியான கொள்கை சொல்லக் கூடிய அமைப்பு JAQH இந்த அமைப்பு தமிழகம் மற்றும் வளைகுடா நாடுகளில் தமிழ் மொழியில் தவ்ஹீதை பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றது.

தவ்ஹீதை ஏற்றுக் கொண்டு இருக்கின்ற சகோதர, சகோதரிகளே நீங்கள் இருக்கின்ற கொள்கை அதை சார்ந்த அமைப்பும் சரிதானா? என்று மீள் பரிசிலனை செய்து கொள்ளுங்கள்.

சத்தியத்தை சத்தியம் என அறிந்து அதன் படி செயல்படக்கூடிய பாக்கியத்தையும், அசத்தியத்தை அசத்தியம் என இனம் கண்டு அதை முற்று முழுதாக விலகி கொள்கின்ற பாக்கியத்தை அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் தந்து அருள்புரிவானாக என்று தூஆ செய்தவனாக இந்த சுருக்கமான கடிதத்தை முடிக்கின்றேன்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்........

Comments

  1. Harrah's Cherokee Casino and Hotel - JT Hub
    Harrah's Cherokee Casino and 안양 출장샵 Hotel - Cherokee. Hotel Information, Amenities, Reviews. Hotel Information. All 목포 출장안마 of 순천 출장샵 the 여주 출장마사지 accommodations are fitted 전라북도 출장마사지 with a

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அல் குர்ஆன் சுன்ன அடிப்படையில் கேள்வி பதில் தொகுப்புகள்

ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-3

அகீதாவின் சில அடிப்படை விடயங்கள்