இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள் [ தொடர் 2]
بسم الله الرحمن الرحيم இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள் [ தொடர் 2] வழிகெட்ட பிரிவுகள் பற்றி இஸ்லாத்தின் பெயரால் பல நூறு பிரிவுகள் தோன்றி இஸ்லாமிய மார்க்கத்தைச் சீரழித்திருக்கின்றன என்பதை அவற்றின் வரலாறுகளைப் பற்றிப்படிக்கின்ற போது அறிய முடிகின்றது. அவற்றில் சில மார்க்கத்தில் புதிய, புதிய திக்ர்கள், தொழுகைகள், அவ்ராதுகள், வாளாயிப்கள் எனப்படும் மார்க்க அம்சங்களை தோற்றுவித்து மக்களை வழிகெடுத்திருக்கின்றன. திஜானிய்யா, சூபிய்யா, கப்றுவணங்கிகள், ஷீஆ, பஹாயிய்யா, போரா, பாபிய்யா போன்ற பிரிவுகள் இதில் குறிப்பிட முடியும். இவற்றில் மற்றும் சில பிரிவுகள் சிந்தனை ரீதியாக மக்களைத் தூண்டி வழி கெடுத்திருக்கின்றன. ஹவாரிஜ், முஃதஸிலா, கத்ரிய்யா, ஜப்ரிய்யா, ஜஹ்மிய்யா போன்ற பிரிவுகளை இதில் குறிப்பிட்டுக்காட்ட முடியும். இந்தப் பிரிவுகளில் சிலது பலவீனமான, ஆதாரமற்ற, இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை ஆதாரமாகக் கொண்டு தமது வழியை தேர்வு செய்திருக்கின்றன. மற்றும் சிலது குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் மாற்றமான விளக்கங்களைக் கூறி மக்களை வழி கெடுத்திருக்கின்றன. இவை பற்றிய தகவல்களை அந்தந்த காலத்து அறிஞர...