இஹ்வானிஸ உளநோயின் கூறுகெட்ட பண்புகள் !! தொடர் -(1)
بسم الله الرحمن الرحيم இஹ்வானிஸ உளநோயின் கூறுகெட்ட பண்புகள் !! தொடர் -(1) ((("ஒரு தாகூதை (வரம்பு மீறும் ஆட்சியாளனை) எதிர்த்து, இன்னொரு தாகூதை ஆதரித்து, அணுசரித்துச் செல்வது போல் அரசியல் அயோக்கியத்தனம் வேறு எதுவும் கிடையாது"))) "அபூ ஸைத் அல் அதரி" வஹாபிஸ உளவியலின் மூலக்கூறுகள் தொடர்பில் அப்துல் ஹலீம் (நளீமி), ஸகிஃபவ்ஸ் (நளீமி) ஆகிய இருவரும் சேர்ந்து ஒரு ஆக்கத்தை தற்போது வெளியிட்டுள்ளனர், நல்லது!! கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல்லெறிவது போல்... குடிசையில் அமர்ந்து கொண்டு பெட்ரோல் குண்டு தயாரிப்பது போல் "வஹாபிஸம்" என்றால் என்ன என்பதற்கான தெளிவான வரையறை இன்றி எழுதப்பட்ட கட்டுரையை நாம் அக்குவேறு ஆணிவேறாக பகுப்பாய்ந்து அதில் உள்ள நகைமுரண்களையும் நழுவல்தன்மைகளையும் அடையாளங்காண, காட்ட வேண்டுமல்லவா? இந்தவகையில் கட்டுரையின் முதல் பந்தி மூலக்கூறுகளின் முக்கியத்துவம்!! பற்றி விபரிக்கின்றது. கட்டுமே.. அதில் ஒன்றும் தவறு கிடையாது. இரண்டாம் பந்த...